தொண்டமான் வழியில் தீர்வு இந்தியாவின் இறுதி முடிவு
இந்த மாத இறுதியில் வருகைதரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு இலங்கை அரசுக்கு அழுத்தங் கள் எதனையும் கொடுக்கமாட்டார் என்று தெரிகிறது. இந்தப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நாட்டுக்குள்ளேயே காணப்பட வேண்டும் என்று தமிழ்த் தலை மைகளிடம் இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே கிருஷ்ணாவின் பயணம் அமையும் என்று புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன.
எதிர்வரும் 25ஆம் திகதி கிருஷ்ணா இலங்கை வருகி றார். அந்தப் பயணத்தில் அரச தலைவர்களைச் சந்திக்கும் கிருஷ்ணா, இனப்பிரச்சினைக் கான அரசியல் தீர்வு குறித்து நேரடி யாக எந்த அழுத்தங் களை யும் வழங்கமாட்டார் எனப் புதுடில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
தனது பயணத்தில் தமிழ்த் தலைமைகளையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ள அமைச்சர் கிருஷ்ணா இந்திய நிலைப் பாட்டைத் தெளிவாக எடுத்துரைக்க உள்ளார். “அரசியல் தீர்வு ஒன்றுக்கு வெளியாரின் தலை யீட்டை எதிர்பார்ப்பதைவிட சொந்த அரசியல் சாணக்கியங்களைக் கடைப்பிடித்து இலங்கை அரசுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணப்பட வேண் டும்.’ இதுவே இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு. இதற்கு உதாரணமாக இந்திய வம்சாவளி மக்களுக்குக் குடியுரிமை பெற்றுத் தருவதற்கு அமரர் தொண்டமான் கையாண்ட அரசியல் மூலோ பாயங்களை புதுடில்லி அரசபீடம் தமிழ்த் தலைமைகளுக்குச் சுட்டிக்காட்டி உள் ளது.
தனது இந்த நிலைப்பாட்டை இறுக்கமாகப் பேண முடிவு செய்துள்ளதால் அமைச்சர் கிருஷ்ணாவின் பயணத்தின் போது தீர்வு விடயம் குறித்து இலங்கை அரசுடன் அதிகம் பேசப்படாது என புது டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன. ஒப் புக்கு மட்டும் பேச்சுமூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் எனக்கூறப்படும். இனப்பிரச்சினைக்கான தீர்வை விரைவு படுத்துமாறு வலியுறுத்துவ தற்குப் பதிலாக, இந்தியா வழங்கும் உதவிக ளுக்கான பணிகளை விரைவுபடுத்து மாறே கிருஷ்ணாவின் பயணத்தின்போது இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக் கப்படும் என்கின்றன புதுடில்லி வட்டாரங்கள்.
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கி யுள்ளவர்களைச் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவது, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுக்காக வீடமைப் புத் திட்டத்தை செயற்படுத்துவது, ரயில் பாதை புனரமைப்பது போன்ற உதவித் திட்டங்களை இலங்கையில் செயற் படுத்த இந்தியா முன்வந்துள்ளது. இத்திட் டங்களை விரைவுபடுத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது பய ணத்தில் இலங்கை அரசிடம் வலியு றுத்துவார்.
மக்களுக்கான மனிதாபிமான உதவி களை மையப்படுத்தி இந்தியா வழங்கி யுள்ள உதவிகளை இலங்கை அரசு சரி யான முறையில் பயன்படுத்த வேண் டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் இலங்கை அரசிடம் கோரவிருக்கின்றார். எது எப்படி இருப்பினும் இலங்கை யில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கு இந்தியா தார் மீக ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்று புதுடில்லி அதிகாரிகள் தெரிவித் தனர்.
thanks to http://www.alaikal.com/news/?p=50066
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment