தமிழகம் முழுவதும் 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் விவேக்

0 comments
 திருச்சி: தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மரங்களை வளர்க்க முடிவு செய்திருப்பதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.  திருச்சியில் யூத் எக்ஸ் னோரா இன்டர் நேசனல் அமைப்பு மற்றும் நடிகர் விவேக் ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.  பின்னர் செய்தியாளர்களிடம், பேசிய வி வேக், “ இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் 100 கோடி மரக்கன்று நடவேண்டும். தமிழ் நாட்டில் 100 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து உள்ளோம். டிசம்பர் 2011க்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்து இதற்காக மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம். வனத்துறை அமைச்சர், சமூக நல ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவிகளையும் நாடி வருகிறோம் என்று கூறினார்.  நான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்த போது மரங்களின் நிலமை பற்றி ஒரு கவிதை புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். அதில் மரம் தனது அவலநிலைப்பற்றி கூறுவதுபோல கவிதை இருந்தது. அதுதான் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற காரணம் என்றும் விவேக் தெரிவித்தார்.  நான் அடுத்து கந்தா படத்தில் நடித்து வருகிறேன். இதில் மரங்களை அழித்து ரியல் எஸ்ட்டேட்டில் நிலத்தை விற்ற விவசாயி கடைசியில் சித்தாளாக மாறியதுடன் இலவச அரிசிக்கு வரிசையில் காத்திற்கும் அவலம் பற்றி கூறியுள்ளேன். மரங்களை வளர்த்தால் தான் எதிர்காலம் வளமாகும்’’ என்று கூறினார். விவேக்
http://thatstamil.oneindia.in/movies/news/2011/06/actor-vivek-donates-10-lacks-tree-saplings-aid0091.html
read more...
தமிழகம் முழுவதும் 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் விவேக்SocialTwist Tell-a-Friend

சொரிமுத்து ஐய்யனாரை கேலி செய்துள்ளதற்கு எதிராகவும், சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதியைக் கிண்டல் செய்வதை எதிர்த்தும் அவன் இவன் படத்தை எதிர்த்து வழக்கு!

0 comments
சென்னை: அவன் இவன் படத்தில் சொரிமுத்து ஐய்யனாரை கேலி செய்துள்ளதற்கு எதிராகவும், சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதியைக் கிண்டல் செய்வதை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாலாவின் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடித்த அவன் இவன் கடந்த வெள்ளியன்று வெளியானது.

இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீனைப் பற்றியும் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலைப் பற்றியும் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை ஜமீனையும் தெய்வத்தையும் கிண்டலடிக்கும் விதத்தில் உள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்று சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி வற்புறுத்தினார்.

நெல்லை மாவட்டம் முழுவதும் பாலாவை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. புகழ்பெற்ற சிங்கம்பட்டி ஜமீன் பெயரில் கேரக்டரை உருவாக்கி அவர் மது அருந்துவது போன்றும் நிர்வாணமாக ஓடவிட்டு அடிப்பது போலவும் காட்சிகள் வைத்திருப்பது அவதூறானது என்றும் ஜமீன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இக்குற்றச்சாட்டுகளை பாலா கண்டுகொள்ளவே இல்லை.

இதையடுத்து அவன் இவன் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியின் தம்பி தாயப்பராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து சிங்கம் பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி கூறுகையில், "நான் ஆன்மீகத்தில் பற்று கொண்ட ஒரு துறவியாகி நீண்ட நாளாகிறது. எதைப் பற்றியும் கவலைப்படும் மனநிலையில் இல்லை. ஆனால் சிங்கம்பட்டி ஜமீனையும், காரையாறு கோவிலையும் களங்கப்படுத்தி இருப்பதைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர். மதுரையில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் ரத்த கையெழுத்திட்டு முதல்ல்வருக்கு மனு அனுப்ப உள்ளனர்.

அவன் இவன் படத்திற்கு தடை விதிக்க கோரி எனது தம்பி தாயப்ப ராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனது மகன் ராஜாவும் வழக்கு தொடர உள்ளார்," என்றார்.

தென் மாவட்ட மக்களின் குல தெய்வமான சொரிமுத்து அய்யனாரை களங்கப்படுத்திய நடிகர் ஆர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
thanks to http://thatstamil.oneindia.in/movies/news/2011/06/22-case-filed-ban-avan-ivan-movie-aid0136.html
read more...
சொரிமுத்து ஐய்யனாரை கேலி செய்துள்ளதற்கு எதிராகவும், சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதியைக் கிண்டல் செய்வதை எதிர்த்தும் அவன் இவன் படத்தை எதிர்த்து வழக்கு!SocialTwist Tell-a-Friend

மாறன்களின் சரியும் சாம்ராஜ்யம் - நடராஜன் பேட்டி

0 comments
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011 14:29
எப்போது பேசினாலும் பரபரப்பான விஷயங்களை அள்ளிக் கொட்டுவதில் வல்லவர் ம.நடராஜன். இப்போது அவரிடம் சிக்கியிருப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் பங்கு. அவரிடம் பேசிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைச் சொல்லி மலைக்க வைக்கிறார்.

இனி அவரிடம் பேசியதிலிருந்து...

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறன் பெயரும் அடிபடுகிறதே...?

‘‘இந்த மாறன்கள் ஆசியாவின் பெரிய பணக்காரர்களான கதை அவர்களது தந்தை முரசொலி மாறனில் இருந்தே தொடங்குகிறது. திருவாரூரில் இருந்து சென்னைக்கு கல்லூரிப் படிப்புக்காக வந்த மாறன், முரசொலி அலுவலகப் பொறுப்பைக் கவனிக்கத் தொடங்கினார்.ஒரே ஒரு கதை எழுதி எழுத்தாளரானார். ‘மேகலா பிக்சர்ஸ்’ என்ற படக் கம்பெனியை ஆரம்பித்து ஊரெல்லாம் கடன் வாங்கினார்.அவரின் கடன்களை அடைக்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இலவசமாகவே ஒரு படத்தில் நடித்துக் கொடுத்தார்.

67 தேர்தலுக்குப் பிறகு தனது எம்.பி. பதவியை விட்டு அண்ணா விலகியதும், அந்த இடத்திற்கு மாறனை நியமிக்கும்படி கருணாநிதி நிர்ப்பந்தித்தார். அதன் காரணமாக அண்ணா மாறனுக்கு அந்த வாய்ப்பை வழங்கினார்.1990-ம் ஆண்டுவரைக்கும் மாறன் வெறும் எம்.பி.தான்.வி.பி.சிங் பதவியேற்ற போதுதான் மத்திய அமைச்சரானார்.அதன் பின்னர்தான் அவருடைய சொத்துக்கள் உயர ஆரம்பித்தது.ஸ்பெக்ட்ரம் ஊழலை தயாநிதிதான் வெளியே கொண்டு வந்தார். அவரே அதில் சிக்கிக் கொண்டார்.’’

அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதுதானே டி.வி.யை ஆரம்பித்தார்கள்?

‘‘உண்மைதான். வி.பி.சிங் உதவியாலும், சில தொழிலதிபர்களின் உதவியாலும் ஐந்து லட்ச ரூபாய் முதலீட்டில் சன் டி.வி.  ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஜெயலலிதாதான் முதல்வராக இருந்தார்.அவர் நினைத்திருந்தால் டி.வி. தொடங்கப்படுவதைத் தடுத்திருக்க முடியும்.ஆனால்,அவர் அதைச் செய்யவில்லை.’’

தயாநிதி மாறனுக்கு எதிராகத் திரும்பியிருக்கும் சிவசங்கரன் ஆரம்ப காலங்களில் அவர்களுக்கு நெருக்கமாகத் தானே இருந்தார்?

‘‘90-களில் இருந்தே எனக்கு சிவசங்கரனைத் தெரியும். 91-ம் ஆண்டு அவர், ‘தான் ஒரு தொலைக்காட்சி தொடங்க இருப்பதாகவும், அதற்கு உதவ வேண்டும்’என்றும் கேட்டு என்னைச் சந்தித்தார்.போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எதிரில் நூறு ஏக்கரில் தனக்கு இடம் இருப்பதாகவும், அங்கு அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப் போவதாகவும் கூட தெரிவித்தார். இதற்கு அனுமதி கிடைக்க உதவி கேட்டார்.நான் அவரை அமைச்சர் செல்வகணபதியிடம் போகச் சொன்னேன்.

மறுநாளே, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிறுவனர் ராமசாமி உடையார் என்னைச் சந்தித்து, குறிப்பிட்ட நூறு ஏக்கர் இடம் தன்னுடையது என்றும், தன்னிடம் இருந்து முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜன், முரசொலி மாறன் ஆகியோர் மிரட்டி பறித்து விட்டனர்’ எனவும் தெரிவித்தார்.

இந்த நிலத்திற்குப் பக்கத்தில் மாறனுக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. எனவே, நூறு ஏக்கர் நிலத்தையும் சேர்த்து வளைக்க வேண்டும் என்று மாறன் திட்டம் தீட்டினார். தன் பெயரில் வாங்கினால் பிரச்னை வரும் என்பதால் பினாமி பெயரில் நிலத்தை மிரட்டி வாங்கியிருக்கிறார்.இந்த இடத்திற்குதான் அனுமதி வாங்க சிவசங்கரன் என்னை அணுகியிருந்தார்.

அடுத்ததாக, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை சிவசங்கரன் வாங்கினார். இதற்கும் முழு உதவி செய்தது முரசொலி மாறன்தான்.இதனால் கோபமடைந்த நாடார் சமுதாய மக்கள், தி.மு.க.விற்கு எதிராக தெருவுக்கு வந்து போராடினார்கள். காமராஜர் பிறந்தநாளில் நடந்த பேரணியில், காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த ஸ்டாலின் மீது, பேரணியில் கலந்து கொண்டவர்கள் செருப்புகளை வீசினர். கோபமடைந்த கருணாநிதி, ரவுடிகளை வைத்து பேரணிக்குள் புகுந்து அடித்தார். அந்தப் பேரணி நடிகர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.’’

ஆனால், அந்த மக்களின் கோரிக்கைப்படி, மெர்க்கண்டைல் வங்கி மீண்டும் நாடார் சமுதாய மக்களிடமே ஒப்படைக்கப்பட்டுவிட்டதே?

‘‘ஆமாம். வேறுவழியில்லாததால் மாறன் அறிவுறுத்தல்படி, சிவசங்கரன் 150 கோடி ரூபாய்க்கு வங்கியை விற்றுவிட்டார். நாடார் மக்களை திருப்திப்படுத்த சரத்குமாரையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார் கருணாநிதி. அதன்பின்தான் சிவசங்கரன் ஆர்.பி.ஜி., ஏர்செல் போன்ற நிறுவனங்களைத் தொடங்கினார்.’’

முரசொலி மாறனோடு நெருக்கமாக இருந்த சிவசங்கரன் தயாநிதி மாறனுக்கு எதிராகத் திரும்ப வேண்டிய அவசியம் என்ன?

‘‘தேவேகவுடா, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய் என அடுத்தடுத்த பிரதமர்கள் காலத்தில் மாறன் தொடந்து மத்திய அமைச்சராகவே இருந்தார்.இந்த காலகட்டங்களில் தன் குடும்பத்தை மட்டுமே அவர் பெருமளவு விரிவுபடுத்தினார். அவர் குடும்பத்தில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் புதிதாக முளைத்தன.

2004-ம் ஆண்டு கிட்னி பாதிப்பால் அவர் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார்.மாறனின் தொழில் நிறுவனங்களை நடத்தி வந்த சிவசங்கரனை கலாநிதிக்கும், தயாநிதிக்கும் பிடிக்காமல் போனது. தயாநிதி அமைச்சரானதும்,தன் ஏர்செல் நிறுவனத்தை விரிவுபடுத்த சிவசங்கரன் முடிவு செய்தார்.முறைப்படி இதற்காக விண்ணப்பங்களை அவர் அனுப்பிக் கொண்டே இருந்தார்.ஆனால் அதற்கு அனுமதி கொடுப்பதில்லை என்கிற முடிவோடு இருந்தார் தயாநிதி மாறன்.

இந்தப் போராட்டத்தில் சிவசங்கரனை தொழிலில் இருந்தே வெளியேற்ற நினைக்கிறார்கள் மாறன் சகோதரர்கள். ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிம் என்கிற மலேஷிய நிறுவனத்துக்கு விற்கச் சொன்னார்கள். மிரட்டல் தாங்க முடியாமல் ஏர்செல் நிறுவனத்தை விற்றார் சிவசங்கரன்.’’

மேக்ஸிம் நிறுவனத்துக்கும் மாறன் சகோதரர்களுக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் ஏன் ஏர்செல்லை குறிப்பிட்ட நிறுவனத்திடம் விற்கச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்?

‘‘ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய அனந்தகிருஷ்ணன் என் நண்பர்தான். இந்த வழக்கு தொடர்பாக அரசு விசாரணை கமிஷன் அமைத்த பிறகு, அனந்த கிருஷ்ணனையே அழைத்து வந்து உண்மையைப் பேச வைப்பேன். இதற்குப் பின்னணியில்ரி.ஞி. சகோதரர்களின் (கலாநிதி, தயாநிதி) பங்கு, எவ்வளவு பணம் பரிமாறப்பட்டது என எல்லா விவரங்களும் ஆதாரத்தோடு என்னிடம் இருக்கிறது.’’



இந்த காலகட்டங்களில் சிவசங்கரனை நீங்கள் சந்தித்து இருக்கிறீர்களா?

‘‘தயாநிதி மத்திய அமைச்சராக இருந்தபோது, 2005-ல் நான் டெல்லி சென்றிருந்தேன்.அங்கு ஹோட்டலில் சிவசங்கரனை தற்செயலாக சந்தித்தேன்.என் அறைக்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவருக்கு ஒரு போன் வந்தது. அது மாறனிடம் இருந்து வந்தது எனப் புரிந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து கிளம்பினார்.

தன் அப்பாவின் பணத்தை சிவசங்கரனிடம் இருந்து பறிக்கும் முயற்சியில்தான் அவருக்கும், மாறன் சகோதரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.சகோதரர்களின் நெருக்குதல் தாங்க முடியாமல் சிவசங்கரன் அமெரிக்கா போய்விட்டார்.அவர் மீதுள்ள கோபத்தை சிவசங்கரனின் ஸ்டெர்லிங் டவர்ஸ் நிறுவனத்தின் மீது காட்டியதில், ஊழியர்கள் ஆறுபேர் சிறைக்குப் போனார்கள்.’’

2ஜி வழக்கில் தயாநிதி மாறனுக்கு எப்படியெல்லாம் தொடர்பு இருப்பதாக நினைக்கிறீர்கள்?

‘‘இந்த அலைக்கற்றை ஊழலைத் தொடங்கி வைத்ததே தயாநிதிதான். தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது,அவர் தலைகால் புரியாமல் ஆடினார். தமிழகத்தில் யாருக்கும் டி.வி.சேனல் தொடங்க அனுமதி கொடுக்கப்படவில்லை. அவர்கள் நினைத்தால் ஒரு டி.வி.யை ஆக்கவோ, அழிக்கவோ முடியும் என்கிற நிலைதான் இருந்தது.

2004-ம் ஆண்டு தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தபோதே அலைக்கற்றை ஊழலில் அவர் பெருமளவு கொள்ளையடித்து விட்டார்.அந்தப் பணம்தான் 2009 தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டது.

2 ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா ராஜினாமா செய்ததும், கபில்சிபல் அந்தத் துறை பொறுப்பை ஏற்கிறார். சிவராஜ்பட்டீல் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் அறிக்கை மூலம்தான் தயாநிதி மாறனின் வேடம் கலைகிறது. அலைக்கற்றை உரிமங்களை தன் விருப்பப்படி விற்பனை செய்யவும்,அதற்கான அதிகாரத்தை தான் ஒருவனே எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்து அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு அவரது கனவைத் தகர்த்தது.

2 ஜி உரிமத்துக்காக பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாநிதிக்கு பெருமளவு முன்பணம் கொடுத்திருந்தன. அதை அவர்கள் புதிய அமைச்சர் ராசாவிடம் தெரிவித்தபோது, ‘தயாவிடம் கொடுத்ததை அவரிடம் வாங்கிக் கொள்ளுங்கள். எனக்கு புதிதாக தரவேண்டும்’ என்று கூறுகிறார் ராசா. இதைக் கேள்விப்பட்டு கோபமடைந்த தயாநிதி, தன்னிடம் இருந்த ஆவணங்களை ஊடகங்கள் மூலம் வெளியிட வைத்து, ராசாவை சிறைக்கு அனுப்பினார். இப்போது அந்த ஆவணங்களே தயாவுக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது.

அலைக்கற்றை வழங்கும் விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் தயாவுக்கும் இடையே ஏராளமான தொழில் தொடர்புகள் உண்டு. அதில் ஒரு அம்சமாக சன் டி.வி.யின் பங்குகளை அதிக விலை கொடுத்து ரிலையன்ஸ் வாங்கியது. இதனால் மார்க்கெட்டில் சன் டி.வி.யின் பங்குகளுக்கு விலை கூடியது.இந்த லாபத்தை தாங்களே அனுபவிக்க நினைத்த மாறன் சகோதரர்கள், அதற்கு முன்னரே சன் டி.வி.யில் கருணாநிதிக்கு இருந்த பங்குகளை பிரித்துக் கொடுத்தனர்.’’

2 ஜி ஊழலுக்கு முக்கிய காரணம் தயாநிதி மாறன் என்று கூறுகிறீர்கள். இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா?

‘‘தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, அவருக்கு உதவியாளராக இருந்தவர்தான் ஆ.ராசாவுக்கும் உதவியாளராக இருந்தார். தயாநிதி மாறனின் பணம் நெதர்லாந்து நாட்டுக்குப் போய், அங்கிருந்து திரும்பி இந்தியாவுக்கு வந்த கதையெல்லாம் இப்போது மெல்ல மெல்ல வெளியே வருகிறது.

அரசுக்கு ஏற்பட்டுள்ள ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்புக்கு முழுக் காரணமும் தயாநிதி மாறன்தான்.அவர் அமைச்சரான பிறகு கலாநிதியுடன் சேர்ந்து தன் தொழிலை பெருமளவு விரிவுபடுத்தி இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 32 தொழில்களை அவர்கள் நடத்தி வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் இவர்கள் வெளிநாடுகளிலும் பணத்தைச் சுருட்டி வருகிறார்கள்.

சுமங்கலி கேபிள் விஷன் மூலம் தமிழகத்தில் கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டி வைத்திருக்கிறார்கள். 2005-ல் கேபிள் டி.வி. அரசுடைமையாக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தபோது,தங்கள் தாத்தா மூலம் கவர்னரிடம் பேசவைத்து தீர்மானத்தையே முடக்கினார்கள்.

ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆகியிருப்பதால்,இந்த கேபிள் டி.வி. மசோதா தூசுதட்டப்படுகிறது. சன் டி.வி.யோ எம்.எஸ்.ஓ. என்ற தகுதிகளைக் கைப்பற்ற ரகசியமாக திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை இரு பிரிவுகளாகப் பிரித்து பெரும் சூழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். இதற்காக பெருமளவு பணம் செலவு செய்யப்படுகிறது.

எம்.எஸ்.ஓ.க்களைக் கைப்பற்ற சாக்ஸ் என்ற சக்ஸேனாவை களமிறக்கியுள்ளார்கள். இவரின் மோசடிகள் இப்போது வெளிவரத் தொடங்கி விட்டன.கருணாநிதியின் குடும்பத்தினர் நடத்திய எந்த மோசடியை விசாரிக்கத் தொடங்கினாலும்,அதற்குள்ளிருந்து ஏராளமான மோசடிகள் வெளிவருகின்றன.கருணாநிதி குடும்பத்தினரின் முகமூடியைக் கிழித்தெறிந்து, அவர்களின் அவலங்களை எல்லாம், மக்கள் முன் தோலுரித்துக் காட்டும் நாள் நெருங்கிவிட்டது’’ என்று மர்மமாக முடித்தார் நடராஜன்.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்
THANKS TO http://savukku.net/pidithadu/965-2011-06-21-09-02-33.html
read more...
மாறன்களின் சரியும் சாம்ராஜ்யம் - நடராஜன் பேட்டிSocialTwist Tell-a-Friend

மதுரை அரசு மருத்துவமனையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளை திருடிய கும்பல்-பெண் ஊழியர் உடந்தை!

0 comments
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை திருடி விற்ற புரோக்கரையும் அவருக்கு உடந்தையாக இருந்த அரசு மருத்துவமனை பெண் ஊழியரையும் போலீசார் கைது செய்தனர்.

மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அடிக்கடி குழந்தைகள் திருட்டு போவதாக எழுந்த புகாரை அடுத்து அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாட்களாக அண்ணாநகர் போலீசார் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, மதுரை சுடுதண்ணீர் வாய்க்கால் பகுதியை சேர்ந்த புரோக்கர் சுப்பிரமணி (65) போலீசிடம் சிக்கினார். விசாரணையில், சென்னையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மனைவி கற்பகம் என்ற பெண்ணிடம் ஆண் குழந்தை திருடி தருவதாக கூறி, ரூ.7 ஆயிரம் வாங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் அரசு மருத்துவமனை பெண் ஊழியர் அமுதவல்லி என்பவருக்கும் குழந்தை கடத்தலில் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

25 ஆண்டுகளாக திருட்டு

குழந்தை கடத்தல் பற்றி சுப்பிரமணி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மருத்துவமனையில் குழந்தைகளை திருடி விற்று வந்து உள்ளேன். இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகளை வார்டில் இருந்து திருடி விற்றுள்ளேன்.

என்ஜினீயரிங் மாணவி ஒருவருக்கு பிறந்த குழந்தையை திருடி கூடல்புதூர் பகுதியை சேர்ந்த ஒரு டாக்டருக்கு விற்றேன். சமீபத்தில் அந்த டாக்டர் இறந்து விட்டார். அதன்பின் அந்த குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

யார் யார் சிக்குவார்கள் ?

புரோக்கர் சுப்பிரமணியின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது வாக்குமூலத்தையடுத்து குழந்தைகளை வாங்கியவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

புரோக்கர்கள் ஓட்டம்

போலீசார் தரப்பில் கூறும் போது, `இவர் ஒரு நபராக இத்தனை குழந்தைகளை கடத்தி விற்று இருக்க முடியாது. இவருக்கு உதவியவர்கள் யார், யார்? பின்னணி என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர். இதற்கிடையில், குழந்தைகள் திருட்டை ஒழிக்கவும், புரோக்கர்களை தடுக்கவும் ஆயுதப்படை போலீசார் 10 பேர் தினமும் மதுரை பெரிய மருத்துவமனையில் சாதாரண உடையில் ரோந்து சுற்றி வருகின்றனர். இதனால் புரோக்கர்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/06/14/tout-nurse-assistant-arrested-aid0090.html
read more...
மதுரை அரசு மருத்துவமனையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளை திருடிய கும்பல்-பெண் ஊழியர் உடந்தை!SocialTwist Tell-a-Friend

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 comments
புதன்கிழமை, 08 ஜூன் 2011 17:47
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:

இலங்கையில் சம உரிமைக்காக போராடி வரும் தமிழர்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன.


இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐநா சபை பொதுச்செயலரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்துள்ளது. எனவே, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐநா சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

 மேலும், சிங்களர்களுக்கு இணையாக, தமிழர்களுக்கு அனைத்து குடியுரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இதற்காக, இலங்கை அரசின் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடையை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை கேட்டுக் கொள்கிறது.
 
இவ்வாறு ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டார்.
 
இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசினர். முதல்வரின் பதில் உரைக்கு பின்னர் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது
THANSK TO http://savukku.net/home1/922-2011-06-08-12-17-57.html
read more...
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.SocialTwist Tell-a-Friend

ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதற்கு வலு சேர்க்க இந்தியத்தலைவர்களின் ஆதரவை திரட்ட வேண்டும் : ஜெ.வுக்கு நெடுமாறன் வேண்டுகோள்

0 comments
இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா.

இதனால் பழ. நெடுமாறன் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’ராஜபக்சே போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுக்கவும் இந்திய அரசு முன் வரவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதோடு அவரை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.


ஆறரைக் கோடி தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பான தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும்.

ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் தீர்மானம் ஆகும்.

இந்தியா முழுவதும் உள்ள அகில இந்தியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களை அழைத்து டெல்லியில் கூட்டம் ஒன்று நடத்தி இத்தீர்மானத்திற்கு அவர்களின் ஆதரவையும் பெறுவதின் மூலம் மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கவும், இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சினைக்கு ஆதரவு திரட்டவும் வழிவகுக்கும்.

எனவே இந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு முதல்வர் ஜெயலலிதாவை வேண்டிக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
நக்கீரன்.
thanks http://www.yarl.com/forum3/index.php?showtopic=86729
read more...
ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதற்கு வலு சேர்க்க இந்தியத்தலைவர்களின் ஆதரவை திரட்ட வேண்டும் : ஜெ.வுக்கு நெடுமாறன் வேண்டுகோள்SocialTwist Tell-a-Friend

ஜெயலலிதா அம்மையாருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாழ்த்து

0 comments
மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாருக்கு வாழ்த்துக்கள்

தமிழீழத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் இடையிலான உறவானது தொப்புள்கொடி உறவு போன்றது. அத்தகைய முக்கியத்தும் வாய்ந்த தமிழ் நாட்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தங்களது தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதனுடன் இணைந்த கட்சிகளும் பெரு வெற்றியீட்டியுள்ளமையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராட்டி வாழ்த்துகின்றது.

கடந்த 13-05-2011 அன்று தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தாங்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தமிழீழ மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலை தொடர்பாகவும், அவர்களது அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் தாங்கள் கூறியுள்ள கருத்துக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உன்னிப்பாக அவதானித்துள்ளதுடன், அக்கருத்துக்களை யாம் வரவேற்கின்றோம்.

மேலும், கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழீழ மக்கள் மீதான இன அழிப்பு உச்சம் பெற்றிருந்த காலகட்டத்தில், அதனை மூடி மறைப்பதற்கு பல நாடுகளும், பல அரசியல் சக்திகளும் முயற்சி செய்து கொண்டிருந்தன. அவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்கள் நாதியற்றவர்களாக நின்றிருந்த நிலையில் தமிழகத்தில் இருந்து தமிழீழத் தமிழ் மக்களுக்கான ஆதரவுக் குரலாகவும், நீதியின் குரலாகவும் உங்கள் குரல் வெளிவந்திருந்தது.

"இலங்கையில் தொடர்ந்தும் குண்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண ஒரே வழி தனி ஈழம் அமைப்பதுதான். நாம் சொல்வதைக் கேட்கும் மத்திய அரசு அமைந்தால் எப்படி இந்திரா காந்தி பாகிஸ்தானிடமிருந்து வங்காள தேசத்திற்கு விடுதலை பெற்றுத்தந்தாரோ அதைப் போலவே இலங்கையில் தனி ஈழம் அமைக்கத் தேவையான நடவடிக்கை எடுப்பேன்'' - (மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் ஏப்ரல்-மே 2009 இல் ஆரணி கோட்டை மைதானத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து)

"இலங்கையில் இல்லாமல் ஜெயலலிதா எங்கு வேண்டுமானாலும் தனி ஈழம் அமைக்கட்டும்' என்று இலங்கை அரச உயரதிகாரி ஒருவர் கூறியது தொடர்பாக நீங்கள் பதிலளிக்கையில் "ஈழத் தமிழர்கள் அவர்கள் மண்ணிலேயே ஈழம் காண்பார்கள். அவர்களது அன்னை பூமி அது. அவர்களது உரிமை பூமி அது. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி ஈழம் அமைப்பேன்'' அங்கே இப்பொழுது அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் தமிழர்களுக்காக எல்லா உதவிகளையும் செய்வது நாங்கள் அமைக்க இருக்கும் மத்திய அரசின் தலையாய கடமையாக இருக்கும் என்று உறுதி கூறுகின்றேன்.'' (மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் ஏப்பிரல் - மே 2009 இல் திருப்பூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் இருந்து)

"இலங்கை இராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் போக, எஞ்சி உயிரோடிருக்கின்ற இலங்கைத் தமிழர்களை சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கும் எண்ணமே இலங்கை அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது! எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களை அரசு நடத்தும் முகாம்களில் கைதிகளைப் போல், அடிமைகளைப் போல் அடைத்து வைத்து எல்லா உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில் நாளடைவில் அவர்களையும் அழித்து விடுவதே இலங்கை அரசின் பயங்கரமான திட்டமாகத் தெரிகிறது. உண்மை நிலை இப்படி இருக்க இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட ஐனநாயக ரீதியிலான தீர்வு காண்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது என்று பேசுவதெல்லாம் வீண்வேலை. அது வெறும் கண்துடைப்பு என்று தெரிகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களவர்களுடன் சம உரிமை வழங்கும் எண்ணமே இலங்கை அரசுக்குக் கிடையாது. ஒரேயடியாக இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்துவிட வேண்டும் என்பதுதான் இலங்கை அரசின் ஒரே செயற்திட்டமாக உள்ளது. இலங்கைத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஐ வாழ்வு வாழவேண்டும். சிங்கள மக்களுக்குள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும். இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பதுதான். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொற்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால் தனி ஈழம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன். இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண தனி ஈழம்தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்'' - (மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் ஏப்பிரல் - மே 2009 இல் சேலத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார ஊர்வலத்தில் ஆற்றிய உரையில் இருந்து)

- என்று நீங்கள் வெளியிட்ட கொள்கைப் பிரகடனம் யுத்தத்தினால் அழிந்து கொண்டிருந்த தமிழீழ மக்களுக்கு தாங்கள் காப்பாற்றப்படுவோம் என்ற பெரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.


இலங்கையில் கடந்த மூன்று வருடங்களாக மட்டுமல்ல கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தொடர்ந்தும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படும் தமிழீழ மக்களைப் பாதுகாப்பதற்கு, தமிழீழ தேசத்தின் தனித்துவமான இறைமையை அங்கீகரிப்பதே ஒரே வழியாகும்.

ஈழத் தமிழ் மக்களை இன அழிவில் இருந்து நிரந்தரமாகப் பாதுகாப்பதற்காக

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதனூடாக தமிழீழ தேசத்தின் தனித்துவமான இறைமையினை அங்கீகரிக்கும் தீர்மானத்தினை

தமிழக சட்டசபையில் தாங்கள் மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகின்றோம்.

தாங்கள் சபதம் எடுத்தால் சாதித்துக் காட்டியே தீருவீர்கள் என்பது அனைத்துத் தமிழ் மக்களதும் உறுதியான நம்பிக்கையாகும். தனிப் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குத் தமிழக மக்கள் தங்களுக்கு ஆணை வழங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில், தங்களுக்குள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி, தாங்கள் கடந்த தேர்தல் காலத்தில் வழங்கிய ஆணையின் அடிப்படையில் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதனூடாக தமிழீழ தேசத்தின் தனித்துவமான இறைமையினை நிலைநாட்டும் வகையிலான தீர்மானத்தினை தமிழக சட்டசபையில் நிறைவேற்றுவதன் மூலம் தமிழீழ மக்களை இன அழிப்பில் இருந்து நிரந்தரமாகப் பாதுகாக்கும் புனிதமான பணியை மேற்கொள்வீர்கள் என உறுதியாக நம்புகின்றோம்.

தமிழீழ தேசத்தின் தனித்துவமான இறைமை அங்கீகரிக்கப்படுவதன் மூலம் தமிழீழ மக்களது நலன்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமல்ல, தமிழ் நாட்டினதும், இந்தியாவினதும் நலன்கள் பாதுகாக்கப்படுவதனையும் உறுதிப்படுத்துவதாக அமையும் என்பது எமது உறுதியான நம்பிக்கை.

தமிழீழ மக்களை இன அழிப்பில் இருந்து நிரந்தரமாகப் பாதுகாக்க தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் அடிப்படையில் தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளுக்கும் பூரணமான ஆதரவினை வழங்கவும், இணைந்து செயற்படவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாராக உள்ளது என்பதனை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றது.

கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புத் தொடர்பாக பூரணமான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும். அதற்காக உரிய தரப்புக்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் அவ்வாறான விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என்றும் நம்புகின்றோம்.

மூன்றாவது தடவையாக தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுள்ள தங்களுக்கு தமிழக மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கு மதிப்பளித்து தமிழகத்தில் நல்லாட்சியை ஏற்படுத்தவும், தங்களது வாக்குறுதிகளைக் காக்கவும் தாங்கள் உழைப்பீர்கள் எனவும் உறுதியாக நம்புகின்றோம். மீண்டும் ஒருதடவை தங்களை வாழத்தி விடைபெறுகின்றோம்.

நன்றி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (16-5-2011)

thanks to http://www.thenseide.com/cgi-bin/Details.asp?selNum=10&fileName=Jun1-11&newsCount=5
read more...
ஜெயலலிதா அம்மையாருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாழ்த்துSocialTwist Tell-a-Friend