வாழும் புத்தரை சிறையில் அடைத்தது சீனா!

திபெத்தியர்களால் வாழும் புத்தர் என்று போற்றப்படும் பெளத்த மதத் துறவியான ்பிர்பு ரின்போச்சே மீது ஆயுதம் வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தி, எட்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது சீன நீதிமன்றம்.




புத்தரின் 5வது அவதாரமாக திபெத்தியர்களால் கருதப்படும் ரின்போச்சேயை ‘புரன்கமா’ என்ற பட்டத்துடன் அழைக்கப்படுகிறார். 2008ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி திபெத்தை சீனா கைப்பற்றிய 50வது ஆண்டையும், தலாய் லாமா திபெத்தை விட்டு வெளியேறிய நாளையும் நினைவுறுத்தி திபெத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அப்போது ரின்போச்சேயை கைது செய்தது சீன அரசு.

ரின்போச்சே ஆயுதம் வைத்திருந்ததாகவும், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்ததாகவும் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த காங்டிங் நகர நீதிமன்றம் 52 வயதான அந்தத் துறவிக்கு எட்டரையாண்டுக் கால சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுள்ளது.



தனித்த பாரம்பரியம் கொண்ட தனி நாடாக இருந்த திபெத்தை 1958ஆம் ஆண்டு பெரும் படையெடுத்த சீனா ஆக்கிரமித்தது. அதனை எதிர்த்த பல்லாயிரக்கணக்கான திபெத்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இராணுவ வலிமையால் திபெத்தை சீனா ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து தலாய் லாமா இரகசியமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
thanks to http://tamil.webdunia.com/newsworld/news/international/0912/31/1091231047_1.htm
வாழும் புத்தரை சிறையில் அடைத்தது சீனா!SocialTwist Tell-a-Friend

No comments: