மலேசியாவில் விரைவிலேயே இந்திய இனத்தவர்கள் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய இந்து சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
மலேசியாவில் வசிக்கும் பெரும்பான்மையான இந்தியர்கள் தங்களது குடும்பத்தில் ஓரிரு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்கின்றனர். இந்த நடைமுறை ஏறக்குறைய அனைத்து இந்தியக் குடும்பங்களிலும் காணப்படுகிறது.
இதன் காரணமாக விரைவிலேயே மலேசியாவிலிருந்து இந்திய இனத்தவர்கள் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் பாலதருமலிங்கம் கூறியதாக, கோலாலம்பூரிலிருந்து வெளியாகும் 'தமிழ் நேசன்' என்ற நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
பல இனத்தவர்கள் வாழும் மலேசியாவில், மலேய இனத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக சீனர்கள் 25 விழுக்காடும், இந்தியர்கள் 8 விழுக்காடும் - இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள் - உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
thanks to http://tamil.webdunia.com/newsworld/news/international/0912/31/1091231043_1.htm
'மலேசியாவில் இந்தியர் இனம் விரைவில் காணாமல் போகும்'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment