ஆப்கனில் கனிம வளங்கள்

0 comments
சமீபத்திய செய்திகளில் ஆப்கானிஸ்தானில் சுமார் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான கனிமவளங்கள் தோண்டப்படாமல் உள்ளன என்பது தான். உடனே ஆப்கானிஸ்தான் உலக சுரங்கங்களின் மையமாக திகழும் அந்த நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துவிடும் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது அல்கயிதா தீவிரவாதத்தை ஒடுக்க போர் தொடுத்தபோது அது இரட்டை கோபுரத்தை தாக்கிய உலக மகா தீவிரவாதத்தை அழிப்பதற்குத் தான் ஆப்கனில் தனது ராணுவத்தை நிலை நிறுத்திவைத்துள்ளது என நம்பப்பட்டது ஆனால் நாளடைவில் வறட்சிமிக்க இயற்கைவளமில்லாத, ஏன் தன்னுடைய உள்நாட்டிற்கே தேவையான உணவளிக்க முடியாத ஒரு நாட்டில் அமெரிக்காவும் அதன் கூட்டணியினரும் ஏன் டேரா போடவேண்டும் என யோசிக்கவைத்தது. ஒருவேளை ஆசியப் பிராந்தியத்தில் பொருளாதாரரீதியாகவும் ராணுவரீதியாகவும் வளர்ந்து வருகிற சீனாவை கண்காணிக்கவும் அதேவேளை இந்தியாவையும் கண்காணிக்கலாம் என ஆப்கனில் தன்னுடைய ராணுவத்தை வைத்திருக்கிறதோ என ஐயம் ஏற்பட்டது. கடைசியில் அந்த நாட்டில் புதைந்துகிடக்கிற கனிம வளங்கள் தான் அதற்கு காரணம் என புலப்படுகிறது.



ஈராக் நாட்டை சதம்ஹூசேன் கிருமி,ரசாயன ஆயுதங்கள் வைத்துள்ளார் என ஆரம்பித்து அந்த நாட்டின் எண்ணெய் வளத்தை சூரையாட போர் தொடுத்து சதாம் கொல்லப்பட்டு வேறு அவர்கள் பாணியிலான ஜனநாயக ஆட்சி அமைந்தபின்பும் அமெரிக்க ராணுவம் விலக்கிக்கொள்ளப்படவில்லை. அதே நிலைமை தான் ஆப்கனில் ஏற்படும்.

ஒரு வேளை ஆப்கன் மக்கள் புதிய கனிமவளங்கள் மூலம் தங்கள் நாடும் மக்களும் வளம்பெறுவார்கள் என்று நினைத்தால் அவர்கள் எண்ணம் தவறாக இருக்கும். ஆப்பிரிக்க ஏழைநாடுகளில் காங்கோ,சியாரோ-லியோன், நைஜீரியா போன்றவற்றில் கனிமவளங்கள், தங்கச்சுரங்கம், கச்சாஎண்ணெய் வளம் நிறைந்திருந்தாலும் உள் நாட்டுப் போர்களால் அந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள் அடுத்த வேளை உணவிற்காக அல்லல் படுகின்றனர். ஆனால் உள் நாட்டுப் போர்களின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்கு ஒன்றும்குறைவில்லை. இன்று மூன்றாம் உலக நாடுகளில் அன்னியமூலதனம் என்ற பெயரால் அந்த நாட்டின் செல்வத்தை போர் தொடுக்காமல் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடித்துச் செல்கின்றன. இந்தியாவில் கச்சா எண்ணெய் வளம் குறைவாக இருந்தாலும் கனிமவளத்திற்கு குறைவில்லை, ஆனால் இந்த இயற்கை வளம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படாமல உலகமயம், தனியார்மயம் என்ற கொள்கையால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுரங்கங்களை குத்தகைவிட்டுள்ளனர். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர்,ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் இரும்பு, நிலக்கரி, காப்பர், பாக்சைட் போன்ற கனிமங்கள் அதிகமாக இருக்கின்றன. பழங்குடியினர் பெருமளவு உள்ள இந்த பகுதிகளில் தான் கனிமவளங்கள் உள்ளன, அந்த மக்களை காடுகளிலிருந்து விரட்டிவிட்டு அந்த கனிமவளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கின்றனர்.

இந்தியாவில் கிடைக்கக்கூடிய 60% பாக்சைட்,95% குரோமைட், 90% நிக்கல், 70% கிராபைட், 67% மாங்கனீசு, 30% இரும்புத்தாதன் மற்றும் 25% நிலக்கரி ஒரிஸ்ஸாவில் கிடைக்கிறது. அந்த மாநிலம் ஒன்றும் வளர்ச்சி கண்டுவிடவில்லை. அங்குதான் பழங்குடிமக்கள் பட்டினியால் இறந்தனர். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் அதே நிலைமை தான். பாஜக அரசு சிறிய மாநிலங்களாக பிரிக்கப்பட்டால் அந்த மாநிலங்கள் நன்றாக முன்னேறும் என்று சிறிய மாநிலங்களாக மாற்றியமைத்தனர், ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கவும் அதற்கு உடந்தையாக மதுகோடா வகையாறாக்கள் ஊழலில் நாறியதும் இந்த நாடறியும். ரெட்டி சகோதரர்கள் அனுமதி பெறாமல் ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் சுரங்கங்கள் அமைத்து நாட்டிற்கு பெருமளவு அந்நிய செலவானியை? களவானித்தனமாக ஈட்டுத்தந்தனர். இதையெல்லாம் பார்க்கும் போது இயற்கை வளங்களே வேண்டவே வேண்டாம் என எண்ணத்தோன்றுகிறது.உலகமே இன்று கனிமவளங்களுக்காகவும் கச்சா எண்ணெய்க்காகவும் தேடியலைகிறது. ஆனால் இந்தியாவில் கிடைக்கின்ற கனிமவளத்தை பன்னாட்டு நிறுவங்களுக்கு சொற்ப பணத்திற்காக ஏலம்விடப்படுகிறது. கிருஷ்னா-கோதாவரி ஆற்றுப்படுகையில் கிடைக்கும் எண்ணெய் வளத்தை ரிலையன்சிற்கு கொடுத்துவிட்டு GAIL, ONGC போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சூடானுக்கும், ரஷ்யாவிற்கும் ஓடுகிறது. இப்போது காப்பர், அலுமினியம் போன்றவற்றை Vedanta விற்கு கொடுத்துவிட்டு இதற்காக ஆப்கனில் உள்கட்டமைப்பை இந்தியா அமைக்கப்போகிறது.

வளர்ந்துவருகிற இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளே பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறிவரும்போது அமெரிக்காவையே நம்பியிருக்கிற ஆப்கானிஸ்தானால் என்ன செய்யமுடியும்.
http://bala-bharathi.blogspot.com/2010/06/blog-post_25.html
read more...
ஆப்கனில் கனிம வளங்கள்SocialTwist Tell-a-Friend

சின்ன நூல் கண்டா நம்மை சிறைபடுத்தும்?

0 comments
உள்ளே நுழைந்த போது முதலில் அறிமுகமானது நூல் கடையே.  திருப்பூரைப் பற்றியோ நூல்களில் இருக்கும் எந்த வகைகளையும் தெரியாமல் பயணம் தொடங்கியது. அப்பொழுதெல்லாம் தெரிந்த அதிகபட்ச நூல்கள் என்பது,  படித்த நூல்களும் அவ்வவ்போது டவுசர் பின்னால் தபால் பெட்டி போல் கிழித்துக்கொண்டு வந்து நிற்கும் போது அக்காக்கள் திட்டிக் கொண்டு தைத்து கொடுக்க வாங்கி வரச் சொன்ன ஒரு ரூபாய வெள்ளை நூல் கண்டு மட்டுமே தெரியும்.  அழைத்து வந்தவருக்கு அசாத்தியமான தைரியம்.  மொத்த பொறுப்பையும் வழங்கி வானளாவ வாழ்த்தி மற்றொருமொரு புதிய வாழ்க்கையை தொடங்கி வைத்தார். புதிதாக பார்க்கத் தொடங்கிய சமூக வாழ்க்கையைப் போலவே இந்த நூல்களும் அதிக ஆச்சரியத்தை தந்தது.  ஒவ்வொன்றாக நூல் உலகம் பற்றிய புரிதல்கள் அன்று தான் தொடங்கியது.

இன்று திருப்பூரில் முதன்மையாக இருக்கும் பல நிறுவனங்களுக்கு சொந்தமாகவே நூற்பாலைகள் உண்டு.  அதிபர்கள் வைத்துருக்கும் வெளிநாட்டு வாகனங்களைப் போலவே அவர்கள் வைத்துருக்கும் நூற்பாலைகளில் உள்ள கதிர்கள் (SPINDLES) என்பது அவர்களின் தொழில் வாழ்க்கையில் உள்ள கௌரவம் சார்ந்த விசயம்.  5000 கதிர்கள் முதல் ஒரு லட்சம் கதிர்கள் வரைக்கும் அவரவர் வாங்கி இருக்கும் கடன்கள் பொறுத்து இருக்கும்.  இந்த நூற்பாலைகள் உற்பத்தி செய்யும் நூல்களை எவரும் நேரிடையாக விற்பனை செய்வது இல்லை.  இடையில் ஒருவர் இருப்பார்.  திண்டுக்கல் மாவட்டத்தில் அப்போது தான் நூற்பாலைகள் வளரத் தொடங்கிய நேரம்.  இது போக உடுமலைப் பேட்டையில் ஜீவிஜி மூலம் நூல் பைகள் வந்துகொண்டுருந்தது. விட்ட குறை தொட்ட குறையாக அங்கங்கங்கே இத்துப் போன மில்கள் என்று தனியாக இருந்தது. இன்றைய இறக்குமதியாளர்கள் எதிர்பார்க்கும் உச்சகட்ட தரம் என்பதெல்லாம் அன்று எவர் மனதிலும் இல்லை. கடனில் தொடங்கி கடனுக்கே வாங்கி செய்த வேலைகளையும் கடனுக்கே என்று செய்து காசு பார்த்த காலமது.
readmore
http://deviyar-illam.blogspot.com/2010/06/blog-post_15.html
read more...
சின்ன நூல் கண்டா நம்மை சிறைபடுத்தும்?SocialTwist Tell-a-Friend

ஓவியர் புகழேந்தி அவர்களுடன் ஒரு நேர்காணல்:

0 comments
உறுதி மிக்க உள்ளத்தோடு மக்களின் பிரச்சினைகளை, ஒடுக்குமுறைகளை மற்றும் சமூக அநீதிகளை மையப்படுத்தி, தீவிரமான அக்கறை உணர்வினையே லட்சியமாகக்கொண்டு ஓவியங்கள் தீட்டிவரும் கு. புகழேந்தி, சர்வதேச அளவில் பரவலாகப் பேசப்படும் மிக முக்கியமான ஓவியராவார்.  அவரது படைப்புகளும், மக்களும், சமூகப் பிரச்சினைகளும் உணர்வின் கயிறால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. புகழேந்தி தனது ஓவியங்களை காட்சிப்படுத்துகிற விதமும் அவரது ஓவியங்களின் உள்ளீடும் இத்தகையதோர் பிணைப்புக்கு முக்கிய காரணமாய் அமைகின்றன.   மனிதத்தின் மீதிருக்கும் நிஜமான அக்கறையும், மனித உரிமை மீறல்களின் அல்லது அடக்குமுறையின் மீதான தார்மீகமான கோபமும் இவரது விரல்களின் வண்ணத்தீற்றல்களில் விரிகின்றன.  
விடுதலையின் அரசியலை தூரிகை வழி தீட்டும் ஓவியர் புகழேந்தி அவர்களுடன் ஒரு நேர்காணல்:
http://www.chikkymukky.com/interview.htm 
read more...
ஓவியர் புகழேந்தி அவர்களுடன் ஒரு நேர்காணல்:SocialTwist Tell-a-Friend

கடல் எரிசக்தி வளங்களை பயன்படுத்த வேண்டும்

0 comments
கடலில் அதிக வளங்கள் இருந்தும், நமக்கு தெரிந்த மீன்வளத்தை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துவதால் மீன்வளம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன தடுக்க ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன பணியாளர் நியமன மற்றும் மதிப்பீட்டு மைய தலைவர் டாக்டர் பி எஸ் கோயல் கூறினார்.

இவ்வாறு சென்னயில் தேசிய கடல்சார் மையம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச கடல் ஆராய்ச்சி மற்றும் துருவ பொறியியல் வல்லுனர்கள் சங்கத்தின் 8 வது ஆழ்கடல் கனிம சுரங்க தொழில்நுட்ப ஆராய்ச்சி மாநாட்டை துவக்கி வைத்துப் பேசுகையில் டாக்டர் பி எஸ் கோயல் கூறினார். 

அவர் மேலும் தொடர்ந்து பேசுகையில், நாம் மனிதவளம் சிறப்பாக இருப்பதற்காக பூமியின் மேல் பரப்பில் உள்ள அனைத்து வளங்களயும் பயன்படுத்தி வருகின்றோம். மேலும் சந்திரனில் இருந்தும் ஹீலியம் 3 மற்றும் இதர கனிம வளங்கள எடுத்து வரவும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம்.

இவையெல்லாம் அறிவியல் அளவில் நல்ல சிந்தனகளே. ஆனால் எதிர்கால சந்ததியினருக்கு இது ஒரு நிரந்தர தீர்வு அல்ல.

கடலில் அதிக அளவில் வளங்கள் இருந்தும் பெரும்பாலனாவை பயன்படுத்தப்படாமல் உள்ளன. நமக்கு தெரிந்த மீன்வளங்கள மட்டும் நாம் அதிக அளவில் பயன்படுத்கிறோம். எதிர்காலத்தில் மீன் வளங்களே இல்லாத நிலை ஏற்படும். மீன்வளங்கள் தொடர்ந்து பாதுகாக்க ஒழுங்குமுறே நடவடிக்கைகளை கடை பிடிக்க வேண்டும்.  

இது மட்டுமல்ல கடலில் மங்கனீஸ், சல்பட் மற்றும் வாயு படிமங்கள் அதிக அளவில் உள்ளன. நமக்கு தேவையான மாற்று எரிசக்தி கடலில் ஏராளமாக உள்ளது.

கடல் சூரியனிடமிருந் சக்தியை பெற்று தன்னகத்தே எரிசக்தி வளங்கள கொண்டுள்ளது. கடல்வள ஆராய்ச்சி, தொழில்நுட்பம், வாயு படிமங்கள், கடலில் உள்ள எரிசக்தி ஆகியவற்றை பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இவற்றில் சில தொழில்நுட்பங்கள இந்தியாவில் உள்ள கடல்சார் ஆராய்ச்சி தொழில்நுட்பம் மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் கண்டுள்ளோம். இதில் கடல் நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பமும் ஒன்று.

இபோன்ற ஒரிரு சாதனைகள் செய்யப்பட்டாலும் இன்னும் நாம் கடல்சார் துறையில் மேலும் பல சாதனைகள் செய்ய வேண்டியுள்ளன

உலக அளவில் கடல்சார் ஆராய்ச்சியில் தற்போது போதிய அளவில் விஞ்ஞானிகள், தொழில்நுட்பம் வல்லுனர்களும் இல்லாததது பெரும் குறையாகவே உள்ளது.

அத்துடன் நாட்டின் மனிதவள மேம்பாட்டிற்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் எரிசக்தி முக்கிய பங்காற்றுகிறது. அதாவது நாட்டில் உள்ள 40 கோடி மக்கள் நாளென்றுக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருவாயும் 30 கோடி மக்கள் இரண்டு டாலருக்கு குறைவாக வருவாயை பெறுகிறார்கள்.

இதே போன்று நாம் 10 விழுக்காடு மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடைய வேண்டும் என்றால், நம்முடைய எரிசக்தி ஆண்டுக்கு தற்போது உள்ளதைவிட 5 விழுக்காடு அதிகமாக தேவைப்படுகிறது. 

இன்று எரிசக்தி தேவையில் 90 விழுக்காடு பெட்ரோலிய பொருட்களிலிருந்தும், மீதமுள்ள 10 விழுக்காடு காற்று, பிறசக்திகளிலிருந்து பெறுகிறோம். எதிர்காலத்தில் இந்த எரிசக்தி பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. கடலில் ஏராளமான எரிசக்தி வளங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் கடல்வளம் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த பரிந்துரைகளை, ஆழ்கடல் கனிம சுரங்கம், கடல் தொழில்நுட்பம் மற்றும் கடல் வளங்கள் சார்ந்த துறைகளுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு பெற்று தர அரசு அதிகாரிகளுக்கு இதுகுறித்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அனைத்து நாடுகளுடனும் இணந்து செயல்படுத்துவதற்கான நீண்டகால ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கோயல் தெரிவித்தார்.

சர்வதேச கடல் ஆராய்ச்சி மற்றும் துருவ பொறியியல் வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஜின் சூ ஜுங், தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் எஸ் கே தாஸ் ஆகியோர் உரையாற்றினர்.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய பல்வேறு நாடுகள சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட அறிவியல்,பொறியியல் தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்றனர்.    
read more...
கடல் எரிசக்தி வளங்களை பயன்படுத்த வேண்டும்SocialTwist Tell-a-Friend