உறுதி மிக்க உள்ளத்தோடு மக்களின் பிரச்சினைகளை, ஒடுக்குமுறைகளை மற்றும் சமூக அநீதிகளை மையப்படுத்தி, தீவிரமான அக்கறை உணர்வினையே லட்சியமாகக்கொண்டு ஓவியங்கள் தீட்டிவரும் கு. புகழேந்தி, சர்வதேச அளவில் பரவலாகப் பேசப்படும் மிக முக்கியமான ஓவியராவார். அவரது படைப்புகளும், மக்களும், சமூகப் பிரச்சினைகளும் உணர்வின் கயிறால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. புகழேந்தி தனது ஓவியங்களை காட்சிப்படுத்துகிற விதமும் அவரது ஓவியங்களின் உள்ளீடும் இத்தகையதோர் பிணைப்புக்கு முக்கிய காரணமாய் அமைகின்றன. மனிதத்தின் மீதிருக்கும் நிஜமான அக்கறையும், மனித உரிமை மீறல்களின் அல்லது அடக்குமுறையின் மீதான தார்மீகமான கோபமும் இவரது விரல்களின் வண்ணத்தீற்றல்களில் விரிகின்றன.
விடுதலையின் அரசியலை தூரிகை வழி தீட்டும் ஓவியர் புகழேந்தி அவர்களுடன் ஒரு நேர்காணல்:
http://www.chikkymukky.com/interview.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment