உள்ளே நுழைந்த போது முதலில் அறிமுகமானது நூல் கடையே. திருப்பூரைப் பற்றியோ நூல்களில் இருக்கும் எந்த வகைகளையும் தெரியாமல் பயணம் தொடங்கியது. அப்பொழுதெல்லாம் தெரிந்த அதிகபட்ச நூல்கள் என்பது, படித்த நூல்களும் அவ்வவ்போது டவுசர் பின்னால் தபால் பெட்டி போல் கிழித்துக்கொண்டு வந்து நிற்கும் போது அக்காக்கள் திட்டிக் கொண்டு தைத்து கொடுக்க வாங்கி வரச் சொன்ன ஒரு ரூபாய வெள்ளை நூல் கண்டு மட்டுமே தெரியும். அழைத்து வந்தவருக்கு அசாத்தியமான தைரியம். மொத்த பொறுப்பையும் வழங்கி வானளாவ வாழ்த்தி மற்றொருமொரு புதிய வாழ்க்கையை தொடங்கி வைத்தார். புதிதாக பார்க்கத் தொடங்கிய சமூக வாழ்க்கையைப் போலவே இந்த நூல்களும் அதிக ஆச்சரியத்தை தந்தது. ஒவ்வொன்றாக நூல் உலகம் பற்றிய புரிதல்கள் அன்று தான் தொடங்கியது.
இன்று திருப்பூரில் முதன்மையாக இருக்கும் பல நிறுவனங்களுக்கு சொந்தமாகவே நூற்பாலைகள் உண்டு. அதிபர்கள் வைத்துருக்கும் வெளிநாட்டு வாகனங்களைப் போலவே அவர்கள் வைத்துருக்கும் நூற்பாலைகளில் உள்ள கதிர்கள் (SPINDLES) என்பது அவர்களின் தொழில் வாழ்க்கையில் உள்ள கௌரவம் சார்ந்த விசயம். 5000 கதிர்கள் முதல் ஒரு லட்சம் கதிர்கள் வரைக்கும் அவரவர் வாங்கி இருக்கும் கடன்கள் பொறுத்து இருக்கும். இந்த நூற்பாலைகள் உற்பத்தி செய்யும் நூல்களை எவரும் நேரிடையாக விற்பனை செய்வது இல்லை. இடையில் ஒருவர் இருப்பார். திண்டுக்கல் மாவட்டத்தில் அப்போது தான் நூற்பாலைகள் வளரத் தொடங்கிய நேரம். இது போக உடுமலைப் பேட்டையில் ஜீவிஜி மூலம் நூல் பைகள் வந்துகொண்டுருந்தது. விட்ட குறை தொட்ட குறையாக அங்கங்கங்கே இத்துப் போன மில்கள் என்று தனியாக இருந்தது. இன்றைய இறக்குமதியாளர்கள் எதிர்பார்க்கும் உச்சகட்ட தரம் என்பதெல்லாம் அன்று எவர் மனதிலும் இல்லை. கடனில் தொடங்கி கடனுக்கே வாங்கி செய்த வேலைகளையும் கடனுக்கே என்று செய்து காசு பார்த்த காலமது.
readmore
http://deviyar-illam.blogspot.com/2010/06/blog-post_15.html
No comments:
Post a Comment