வங்கக்கடலில் கன்னியாகுமரிக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதன் காரணமாக மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
நேற்று பகலில் ஓரளவு வெயில் இருந்த நிலையில், பிற்பகலில் கனமழை கொட்டியது,மீண்டும் நள்ளிரவு முதல் இன்று காலை வரை விட்டு விட்டு பரவலாக கனமழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால், வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சாலைகளில் போக்குவரத்து ஓரளவு குறைந்து காணப்பட்டாலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதன் காரணமாக சென்னை உட்பட மாநிலம் முழுவதிலும், புதுவையிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
thanks to http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0911/15/1091115005_1.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment