
சென்னை, நடுக்கடலில் நிற்கும் கப்பலில் கதிர் வீச்சு பொருட்கள் இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கல்பாக்கம் அணு விஞ்ஞானிகள், கடலோர காவல் படையினர் கப்பலை ஆய்வு செய்து வருகின்றனர். விசாகப்பட்டினம் வைஷாக் துறைமுகத்தில் இருந்து கிரானைட் கற்களுடன் ஒரு சரக்கு கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வந்துகொண்டிருந்தது. கப்பலை நிறுத்துவதற்கு பிளாட்பாரம் கிடைக்காததால் துறைமுகத்தில் இருந்து 1.6 நாட்டிகல் மைல் (3 கி.மீ) கடலில் கடந்த 2 நாட்களாக அந்த கப்பல் இருக்கிறது. இந்நிலையில் அந்த கப்பலில் கதிர் வீச்சு (ரேடியேஷன்) பொருட்கள் இருப்பதாக துறைமுக உயர் அதிகரிகளுக்கு தகவல் வந்தது. துறைமுக அதிகாரிகள் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து விஞ்ஞானிகள் இன்று காலை சென்னை துறைமுகம் வந்தனர். அதிகாரிகளுடன் கலந்து பேசி கப்பலை ஆய்வு செய்ய முடிவு செய்தனர். அதன்பின் விஞ்ஞானிகள், கப்பல் படையினர், கடலோர காவல்படையினர் போன்ற அதிகாரிகளுடன் சேர்ந்து கப்பலை ஆய்வு செய்வதற்காக மற்றொரு கப்பல் மூலம் நடுகடலுக்கு சென்றனர். கப்பலை ஆய்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.
No comments:
Post a Comment