நடிகர் கார்த்திக் கட்சி சார்பில் 14 வேட்பாளர்கள் அறிவிப்பு

thanks to  http://election.dinamalar.com/election_news_detail.php?id=1129


சென்னை : நடிகர் கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி, முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சங்கரன்கோவில் தொகுதியில் கூலி தொழிலாளி சுப்புலட்சுமி போட்டியிடுகிறார். சென்னையில் நேற்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக், அவரது கட்சி வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டு, வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் கட்சி சார்பில் 41 தொகுதிகளை தேர்வு செய்து, இதில் 30 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளேன். தற்போது முதல் கட்டமாக 14 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த பட்டியல் இன்று அல்லது நாளை வெளியிடப்படும். எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடாத தொகுதிகளில் எங்கள் கட்சியின் ஆதரவு யாருக்கு என்று இரண்டு நாளில் தெரிவிப்பேன்.

ஜெயலலிதாவுக்கு சரியான வழிகாட்டி இல்லை. அவரது தன்னிச்சையான நடவடிக்கை, அவரது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். கருணாநிதி நாகரிகமாகவும், அனைவரையும் அரவணைத்தும் கட்சியை பலப்படுத்தி ஓட்டுகளை பெற முயன்று வருகிறார். தி.மு.க., அரசை மைனாரிட்டி அரசு என்று வர்ணித்து வந்த ஜெயலலிதா, தேர்தலில் மெஜாரிட்டியான இடத்தை தன் கட்சி மட்டுமே பெற வேண்டும் என நினைத்து 160 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். அவரது நினைப்பும், செயல்பாடும் சரியானது தானா என தேர்தல் முடிவு வந்தால் தெரியும். இவ்வாறு கார்த்திக் கூறினார்.

போலி வேட்பாளர் : ""அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியில் இல்லாத ஒருவர், தன்னை கார்த்திக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று குறிப்பிட்டு கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் எங்கள் கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தி வேறு ஏதோ ஆதாயம் கருதி, மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளோம்,'' என்று கார்த்திக் தெரிவித்தார்.
நடிகர் கார்த்திக் கட்சி சார்பில் 14 வேட்பாளர்கள் அறிவிப்புSocialTwist Tell-a-Friend

No comments: