முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி உற்சவ விழா


First Published : 16 Mar 2011 11:01:45 AM IST

பரமக்குடி, மார்ச் 15: பரமக்குடி அருள்மிகு ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் பங்குனித் திருவிழா 4-ம் திருநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை வன்னியகுல ஷத்திரிய மகாசபையினரால் வண்டி மாகாளி உற்சவ விழா நடைபெற்றது.

பரமக்குடி ஆயிர வைசியர்களுக்கு பாத்தியமான ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் பங்குனித் திருவிழா, மார்ச் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொ டங்கியது.செவ்வாய்க்கிழமை காலையில் ரிஷப வாகனத்தில் வன்னியர்குல சேர்வைக்காரர்கள் மண்டகப்படியில் எழுந்தருளினார். இதையொட்டி மாலை 4.30 மணிக்கு வன்னியகுல ஷத்திரியர்கள் வண்டி மாகாளி வேஷமிட்டும், புலி வேஷமிட்டும் ஊர்வலம் புறப்பாடாகி நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் ஆலயம் சென்றடைந்தனர்.மார்ச்-20-ம் தேதி இரவு 7.45 மணிக்கு விசேஷ மின்சார தீப அலங்காரத்துடன் அம்பாள் தேரோட்டம் நடைபெறும். 

அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு அம்பாள் கள்ளர் திருக்கோலத்துடன் புஷ்பப் பல்லக்கில் வைகை ஆற்றில் எழுந்தருளும் காட்சியும், மார்ச் 22-ம் தேதி அம்பாளுக்கு பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
thanks to http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Madurai&artid=391200&SectionID=137&MainSectionID=137&SEO=&Title=
முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி உற்சவ விழாSocialTwist Tell-a-Friend

No comments: