ஈழத் தமிழர்களைப் பற்றி இந்திய ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை - நல்லகண்ணு

0 comments
[ திங்கட்கிழமை, 30 மே 2011, 10:07.17 AM GMT ]
இந்திய ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் ஐநா அறிக்கை குறித்து மத்திய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் தமிழ்வெளி இலக்கிய அமைப்பு சார்பில், இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி ஐநாவை வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு,
ஈழத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள தாய்த் தமிழர்களுக்கும் பல்வேறு பிணைப்புகள் உண்டு. இந்தியாவுக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற இலங்கை தொடக்கத்தில் இருந்தே அங்குள்ள ஈழத் தமிழர்களை அழிப்பதில் முனைப்புக் காட்டி வருகிறது. அவர்களுக்கான உரிமைகளை மறுத்ததோடு அவர்களை அழிக்கவும் செய்து வருகிறது.
இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளியாகி இருக்கின்ற இந்த சமயத்தில், கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ஈழத் தமிழர்களுக்காக என்ன செய்தன என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும்.
தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததால், இன்றளவும் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இலங்கை அரசு நடத்திய சூதாட்டத்தில் தமிழர்கள் பலியாகி விட்டார்கள். இந்திய ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை குறித்து மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் இணைந்து நின்று குரல் கொடுத்து கொடுங்கோல் ஆட்சியை தனிமைப்படுத்தி ஈழத் தமிழர்களுக்கு வாழ்வு கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்றார்.

thanks to http://www.tamilwin.com/view.php?22a8299N320eDppGi04eecoQjj2ccbdZVLmucddd3cIBP4bbc4VjQQ6be44QGGp1d003eF922g02
read more...
ஈழத் தமிழர்களைப் பற்றி இந்திய ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை - நல்லகண்ணுSocialTwist Tell-a-Friend
0 comments

read more...
SocialTwist Tell-a-Friend

ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள்! பழ. நெடுமாறன் அறிக்கை

0 comments
ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும்
தீங்கிழைக்க மாட்டார்கள்!
பழ. நெடுமாறன் அறிக்கை
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் தான் திட்டம் தீட்டினார் என விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொண்ட குமரன் பத்மநாபன் கூறி இருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் நீக்கி வைக்கப்பட்டவருக்கு புலிகளின் சார்பில் பேசுவதற்கு எத்தகைய உரிமையும் கிடையாது. அதிலும் தற்போது அவர் சிங்கள அரசின் கைப்பாவையாக மாறி உலகெங்கும் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை அடையாளம் காட்டும் துரோகப் பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட உடனேயே விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலகத்தின் பொறுப்பாளராக இருந்த தளபதி கிட்டு இக்கொலைக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் இக்கொலை சம்பந்தமான சில உண்மைகள் தங்களுக்குத் தெரியும் என்றும் இந்திய புலனாய்வுத் துறை அணுகினால் அவர்களுக்கு அவற்றைத் தெரிவிக்கத் தயாராக இருப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் இந்திய புலனாய்வுத் துறை இறுதிவரை அவரைச் சந்தித்து அந்த உண்மைகளைப் பெற முயற்சிக்கவில்லை.
இத்தனை ஆண்டு காலம் கழித்து குமரன் பத்மநாபன் மூலமாக இத்தகையப் பிரச்சாரம் செய்யப்படுவது தமிழக மக்களைக் குழப்புவதற்கு இந்திய உளவுத் துறையும் சிங்கள உளவுத் துறையும் இணைந்து செய்யும் சதியே இப் பொய்ப் பிரச்சாரம் ஆகும்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியும் அதற்குத் துணையாக தி.மு.க.வும் செய்த துரோகத்திற்கு தமிழக மக்கள் கடந்த தேர்தலில் சரியான பாடம் கற்பித்திருக்கிறார்கள். எனவே மக்களைக் குழப்பித் திசைத் திருப்பத் திட்டமிட்டு குமரன் பத்மநாபன் மூலம் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஈழத் தமிழர் பிரச்சினையில் அண்மையில் வெளியிட்ட அறிவிப்புகள் தில்லி அரசைக் கலக்கமடைய வைத்துள்ளன. மத்திய அரசின் கொள்கைக்கு எதிரான நிலையை தமிழக முதலமைச்சர் எடுப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என அஞ்சும் தில்லி அரசின் உளவுத்துறை குமரன் பத்மநாபன் மூலமாக ஜெயலலிதாவை படுகொலை செய்ய புலிகள் திட்டம் தீட்டியதாக செய்தியைப் பரப்பியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு செய்த பேருதவிகளை புலிகள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரைப் பின்பற்றும் ஜெயலலிதாவிற்கோ அல்லது வேறு யாருக்கும் ஒரு போதும் எவ்வித தீங்கும் இழைக்க மாட்டார்கள்.

( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
read more...
ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள்! பழ. நெடுமாறன் அறிக்கைSocialTwist Tell-a-Friend

ராஜபக்சேவை உடனடியாக சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.எம்.வாண்டையார்

0 comments


 சிதம்பரம்:

               மூவேந்தர் முன்னேற்றக்கழக அவசர செயற்குழு மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மூ.மு.க.தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது  மூவேந்தர் முன்னேற்றக்கழக .தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் பேசியது:-

            நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நாம் கடுமையாக உழைத்தோம்.கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபட்டோம். எனக்காக கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்தனர்.அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த தேர்தலில் நான் தோல்வி அடைந்ததால் தவறான பாதையில் சென்று விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள். நான் மட்டும் அல்ல, தி.மு.க.கூட்டணியிலும் 200-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தோல்வியை தழுவி விட்டார்கள். மக்களின் எண்ணம் மாறி விட்டது.ம க்களின் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம். தலை வணங்குவோம். இனி வரும் தேர்தலில் மக்களை கவரும் வகையில் செயல்பட வேண்டும்.

           நாங்கள் தவறான பாதையில் (கூட்டணி) செல்ல வில்லை. தி.மு.க.கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் 10 தொகுதிகளிலும் தோல்வி அடைந்து விட்டது. பா.ம.க. 3 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் 63 தொகுதிகளில் 5 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதைவைத்து நாம் தவறான பாதையில் சென்று விட்டோம் என்று கூற முடியாது. நாம் தவறான முடிவும் எடுக்கவில்லை. தி.மு.க.தலைவர் கருணாநிதி நாம் வைத்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளார். அதன் அடிப்படையில் தான் நாம் தி.மு.க.கூட்டணியில் சேர்ந்து உள்ளோம். மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்.அ தனால் நாம் தோல்வி அடைந்து விட்டோம். விரைவில் எம்.பி.தேர்தல் வரப்போகிறது. அதற்கு நாம் ஓராண்டுக்கு முன்பே தயாராக இருக்க வேண்டும்.

            உள்ளாட்சி தேர்தலிலும் நாம் அதிக இடங்களில் போட்டியிட தயாராக வேண்டும். அடுத்த தேர்தலில் சரியான பாதையில் செல்ல வேண்டும். நமது கட்சி நிர்வாகிகள் யாருடைய அச்சுறுத்துதலுக்கும் பயப்பட தேவையில்லை .மதுரை விமான நிலையத்திற்கு முத்து ராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட வேண்டும். அகமுடையார், கள்ளர், மறவர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். காவிரி நதிநீர்ப்பிரச்சினையை தீர்க்க வேண்டும். முல்லை பெரியாறு பிரச்சினையை தீர்க்க வேண்டும்.இதையெல்லாம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா செய்து கொடுப்பாரா? அப்படி செய்து கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அனைத்தும் போராடுகிற நிலையில் நிலுவையில் உள்ளது.

            அடுத்த சட்டசபை தேர்தலில் நாம் கேட்கிற தொகுதிகள் தி.மு.க., அ.தி.மு.க. விடம் இருந்து கிடைக்க வில்லையென்றால் நாம் நமக்கென்று 25 தொகுதிகளை இப்போதே தயார் செய்து வைத்து கொள்ளுங்கள். 25 தொகுதிகளில் நாம் போட்டியிட்டு வெற்றி பெறலாம்.அ தன்பிறகு நாம் கேட்காமலேயே நமக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். சிதம்பரம் தொகுதியில் எனக்கு அனைத்து சமூகத்தினரும் வாக்கு அளித்து உள்ளனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா சொன்ன வாக்குறுதிகளை 1 ஆண்டுகளில் நிறைவேற்றுவேன் என்று கூறினார்.ஆனால் பதவி ஏற்று 7 வாக்குறுதிகளை மட்டும் உடனடியாக நிறை வேற்றுவதாக கூறியுள்ளார். ஆனால் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவி, கான்கிரீட்வீட்டுக்கு கூடுதல் நிதி உதவி போன்ற நல்ல திட்டங்களை நிறை வேற்றவில்லை.ஆகவே நாம் விரைவில் இது போன்ற மக்கள் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். இவ்வாறு மூ.மு.க.தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் கூறினார்.

               கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் கேப்டன் நடராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் செல்வராஜ், மாநில பொருளாளர் அபிராமம் கோவிந்தசாமி, மாநில இணை தலைவர் ஆறுமுக நாட்டார், இணை செயலாளர் ராஜா, முத்து, மறவன்நடராஜன், ஐரோப்பிய மாணவரணி தலைவர் கோகுல்வாண்டையார், மாவட்ட இளைஞரணி வேல்ராஜ், மதியழகன், மதுரை சுரேஷ், நாகவேல், ஜோதி மணி உள்பட தஞ்சை, நாகை, திருவாரூர், திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

          சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட தலைவர் ஸ்ரீதர்வாண்டையாருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, ஐ.நா.சபையின் அறிக்கையின்படி போர்க்குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சேவை உடனடியாக சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

              பெட்ரோல் ,டீசல் மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும். காவிரி டெல்டா பாசனத்திற்கு தங்கு தடையின்றி தண்ணீர் திறந்து விட வேண்டும்.கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையாருக்கு முழு அதிகாரம் அளிக்கிறது.

              அதன்படி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுச் செயலாளர் ராமசுப்பிரமணிய காடுவெட்டியார், இளைஞர் அணி துணை தலைவர் சிற்றரசு, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் இந்திரக்குமார் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் இருந்துநீக்குவதற்கு முழு ஆதரவு அளிப்பது, சாதி வாரியாக கணக்கு எடுக்கும் பணிக்கு உத்தரவிட்ட மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கட்சி புதிய மாநில பொதுச்செயலாளராக கேப்டன் நடராஜன், மாநில இணை தலைவராக ஆறுமுக நாட்டார், மாநில துணை தலைவராக ஒச்சாயி தேவர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

thanks to http://cuddalore-news.blogspot.com/2011/05/blog-post_25.html
read more...
ராஜபக்சேவை உடனடியாக சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.எம்.வாண்டையார்SocialTwist Tell-a-Friend

கல்வித் துறையால் புறக்கணிக்கப்படும் கள்ளர் பள்ளிகள்-09-11-2009

0 comments
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்புத் துறை சார்பில் 260 பள்ளிகள் உள்ளன.

இதில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 45. இப்பள்ளிகளின் வளர்ச்சியில் கல்வித்துறை போதிய அக்கறை காட்டவில்லை என கள்ளர் பள்ளிகளின் ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

இதற்கு உதாரணமாக பல புகார்களையும் தெரிவிக்கின்றனர். பள்ளிகளில் சிறப்பு கட்டணம், கல்வி கட்டணம் வசூலிக்க தடைவிதித்து அரசு உத்தரவிட்டது. அதற்கு பதிலாக பள்ளிகளுக்கு அரசே கட்டணத்தை வழங்கி உதவியது. இவை அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுவிட்டது.

இரண்டு ஆண்டுகளாக கள்ளர் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. நிலுவைத் தொகை ரூ. 17 லட்சத்து 98 ஆயிரத்து 701. ஆண்டுதோறும் நூறு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டும் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளர் பள்ளிகள் ஒன்று கூட தரம் உயர்த்தப்படவில்லை. கள்ளர் பள்ளிகளில் 110 பட்டதாரி ஆசிரியர், 52 முதுகலை ஆசிரியர், 40 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2 ஆண்டுகளாக இப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. காமராஜர் பிறந்த நாளான ஜூலை 14ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறோம்.

இதற் காக மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 300ம், உயர்நிலைப் பள்ளிக்கு ரூ. 200ம் வழங்கப்பட்டது. இது மற்ற பள்ளிகளுக்கு வழங்கப்பட்டும் கள்ளர் பள்ளிகளுக்கு இதுவரை வழங்கவில்லை. ஆண்டு துவக்கத்தில் அரசு இலவச பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல ரூ.ஆயிரத்து 200 வழங்கப்படும். இதுவும் தராமல் கள்ளர் பள்ளிகள் வஞ்சிக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரப்படி விளையாட்டு ஆசிரியர், அலுவலர் பணியிடம் எந்த கள்ளர் பள்ளியிலும் நியமிக்கப்படவில்லை.

நபார்டு வங்கி மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் கட்டடம், தளவாடங்கள் வாங்குகின்றனர். கள்ளர் பள்ளிகளுக்கு எதுவும் வழங்கப்படுவதில்லை. ரூ. 27 கோடி அளவுக்கு கருத்துரு அனுப்பியும் நீண்ட நாட்களாக பலனில்லை. இதுபோன்ற பல குறைபாடுகள் உள்ளன.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர் எம்.சின்னப் பாண்டி கூறுகையில், கள்ளர் சீரமைப்புத் துறையில் பலகுறைபாடுகள் இருந் தாலும் கடந்த ஆண்டு 10ம் வகுப்பில் 83, பிளஸ் 2ல் 73 சதவீதம் தேர்ச்சி இருந்தது. பெண்களுக்கென உயர் நிலை,மேல்நிலை பள்ளிகள் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. கள்ளர் பள்ளிகள் புறக்கணிக்கப்படும் நிலையில் உள்ளன. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
thanks to http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?cat=1&id=5052
read more...
கல்வித் துறையால் புறக்கணிக்கப்படும் கள்ளர் பள்ளிகள்-09-11-2009SocialTwist Tell-a-Friend

அதிமுக கூட்டணிக்கு 203 இடங்களில் அமோக வெற்றி-திமுக கூட்டணிக்கு 31

0 comments
திருக்குறள் 


பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்

Newton's third law

To every action there is always an equal and opposite reaction

சிலப்பதிகாரம்
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்;
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்



சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 147 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இந்தத் தேர்தலில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் மிக அதிக அளவாக 78.80 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 204 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 150 தொகுதிகளில் வென்றுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 41,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

234 தொகுதிகளின் முடிவுகளும் நேற்று நள்ளிரவு வாக்கில் தெரிய வந்தன.

அதிமுக கூட்டணிக் கட்சிகள் வென்ற இடங்கள் (போட்டியிட்ட இடங்கள் அடைப்புக் குறிக்குள்):

அதிமுக- (160)- 150
தேமுதிக-(41)- 28
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் -(12)- 09
இந்திய கம்யூனிஸ்ட்- (10)- 08
மனிதநேய மக்கள் கட்சி- (03)- 02 சமத்துவ மக்கள் கட்சி- (03)- 02
புதிய தமிழகம்- (03)- 02
கொங்கு இளைஞர் பேரவை- (01)- 01
இந்திய குடியரசு கட்சி- (01)- 01
பார்வர்டு பிளாக்- (01)- 01
சேதுராமனின் மூவேந்தர் முன்னணி கழகம்- (01)- 00

திமுக கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 31 இடங்களில் தான் வென்றுள்ளது. திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் கருணாநிதி 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திமுக கூட்டணிக் கட்சிகள் வென்ற இடங்கள் (போட்டியிட்ட இடங்கள் அடைப்புக் குறிக்குள்):

திமுக- (119)- 23
காங்கிரஸ்- (63)- 05
பாமக- (30)- 03
விடுதலை சிறுத்தைகள்- (10)- 00
கொங்கு முன்னேற்றக் கழகம்- (07)- 00
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- (03)- 00
வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்- (01)- 00
பெருந்தலைவர் மக்கள் கட்சி- (01)- 00

பாஜகவும் படுதோல்வி:

193 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவும் அதனுடன் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளில் போட்டியிட்ட சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சி, 5 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இதேபோல் 142 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய ஜனநாயகக் கட்சி, 25 தொகுதிகளில் போட்டியிட்ட புரட்சி பாரதம், 230 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் ஆகியவையும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/05/14/admk-wins-147-seats-just-23-dmk-aid0091.html
read more...
அதிமுக கூட்டணிக்கு 203 இடங்களில் அமோக வெற்றி-திமுக கூட்டணிக்கு 31SocialTwist Tell-a-Friend

முறைகேடாக பட்டாமாறுதல் வி.ஏ.ஓ.,க்கள் மீது புகார்

0 comments
தேனி:கள்ளர் ஜாரி நிலம் வாங்கிய வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு வி.ஏ.ஓ.,க்கள் பட்டா மாறுதல் வழங்கி உள்ளதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் டி.ஆர்.ஓ.,விடம் புகார் செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் கள்ளர்ஜாரி நிலங்கள் உள்ளன.
இந்த நிலத்தை கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் விலைக்கு வாங்க கூடாது என சட்டத்தில் தடை உள்ளது. ஆனாலும் பெரும்பாலான நிலங்கள் வேறு சமுதாயத்திற்கு விற்பனை செய்துவிட்டனர்.

முறைகேடாக கள்ளர்ஜாரி நிலங்களை வாங்கியவர்களுக்கு வி.ஏ.ஓ.,க்களே பட்டா மாறுதலும் வழங்கி உள்ளனர். வி.ஏ.ஓ.,க்கள் பட்டா மாறுதல் வழங்குவது தவறுக்கு துணை போவது போல் உள்ளது என மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் டி.ஆர்.ஓ., பிருந்தாதேவியிடம் புகார் செய்துள்ளனர்.இது குறித்து வி.ஏ.ஓ.,க்கள் கூறுகையில், "முறைகேடாக வாங்கப்படும் நிலங்களுக்கு நாங்கள் பட்டா மாறுதல் செய்வதில்லை. கள்ளர்ஜாரி நிலங்களை வாங்குபவர்களுக்கு போலீசார் கூறுவது போல் நாங்கள் பட்டா மாறுதல் செய்யவில்லை' என்றனர்
 thanks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=236898
read more...
முறைகேடாக பட்டாமாறுதல் வி.ஏ.ஓ.,க்கள் மீது புகார்SocialTwist Tell-a-Friend

திருமங்கலம் அருகே தீண்டாமை காரணமாக கலவரம்: துப்பாக்கி சூடு 45 பேர் கைது 150 பேர் மீது வழக்குப் பதிவு

0 comments
thanks to http://www.inneram.com/2011050216136/2011-05-02-15-33-28
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ளது வில்லூர் கிராமம். இந்த கிராமத்தின் மெயின் பஜார் வழியாக ஒரு பிரிவினர் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்வதற்கு இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள்.   இது தொடர்பாக அவ்வப்போது பிரச்சனை ஏற்படுவதும் சமரச பேச்சு நடத்தப்படுவதுமாக இருந்துள்ளது.  எனினும் பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வில்லூரை சேர்ந்த தங்கப் பாண்டியன் (வயது27)  என்பவர் மோட்டார் சைக்கிளில் மெயின் பஜார் வழியாக சென்றுள்ளார்.   தங்கப்பாண்டியன் ஒத்தப்பட்டி தெருவை அடைந்த போது, அந்த பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், , கரந்தமலை, சமயன், பிரதாப் சிங் மற்றும் பாலமுருகன் ஆகிய 5 பேரும் சேர்ந்து தங்கப்பாண்டியனை வழிமறித்து அத்தெரு வழியாக வரக்கூடாது என்று கூறி தகராறு செய்துள்ளனர்.


எனவே, தங்கப்பாண்டியன்அவர்கள் 5 பேரும் தன்னை ஜாதி பெயரை சொல்லி தகராறு செய்து திட்டியதாக காவல் துறையில் புகார் கொடுக்கவே, அவர்கள்  5 பேரையும் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்தது.   இந்நிலையில் அவர்களை சேர்ந்தவர்கள் 5 பேரையும் விடுவிக்கக் கோரி காவல்நிலையம் முன்பு திரண்டு கோஷமிட்டனர்.   இதற்கிடையில் புகார் கொடுத்தவரின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது.  எனவே இரு தரப்பிலும் பதட்டநிலை ஏற்பட்டு கலவர சூழல் உருவானது.  நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே பாதுகாப்புக்காக கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர்.


காவல்துறையின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  அப்போது அங்கு  கும்பலாக கூடியிருந்தவர்கள் காவல்துறையின் வாகனங்கள் மீது   கல் வீசி தாக்கினர்.  கல்வீச்சில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களும் காயமடைந்தனர்.  தடியடி நடத்தியும், நிலைமை கட்டுக்குள் வராததால் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.  ஆனாலும் கும்பல் கலையாததால் 2 தடவைகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.


நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காளிமுத்து என்ற வாலிபருக்கு தொடையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால், படுகாயமடைந்தார். மேலும் நடத்தப்பட்ட தடியடியிலும் பலர் காயமடைந்தனர்.   காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இக்கலவரம் தொடர்பாக 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் 45 பேரை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.  மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கடுமையான அளவில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


thanks to http://thatstamil.oneindia.in/news/2011/05/03/police-warn-stern-action-against-untouchability-aid0090.html

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூர் கிராமத்தில் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்ட 54 பேர் கைது செய்யப்பட்டனர்.


டி.கல்லுப்பட்டி அருகே உள்ள இந்த கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு, இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தினர். ஆனால், கலவரம் நீடித்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இச்சம்பவத்தில் மதுரை மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கர்க், பேரையூர் டி.எஸ்.பி. அன்வர் ஷா ஆகியோரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கலவரக் கும்பல் கற்களை வீசித் தாக்கியதில் 15க்கும் மேற்பட்ட போலீஸாரும் காயமடைந்தனர்.

போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் செந்தில் மற்றும் பழனி ஆகியோர் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கலவரம் குறித்து ஐ.ஜி. மஞ்சுநாதா நிருபர்களிடம் கூறுகையில், வில்லூர் கிழக்குத் தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்ற தங்கபாண்டியன் என்பவரை சிலர் தடுத்து நிறுத்தி பைக்கை பறித்துள்ளனர். இதுதொடர்பாக, 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அவர்களுடன் எஸ்.பி. அஸ்ரா கர்க் பேச்சு நடத்தினார். பேச்சுவார்த்தையில் அமைதி ஏற்படுத்தப்பட்ட நிலையில் இன்னொரு பிரிவினரது வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன.

மேலும், வில்லூர் காவல் நிலையத்துக்கு ஆயுதங்களுடன் திரண்டு வந்த சிலர் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். எஸ்.பி. மற்றும் பேரையூர் டி.எஸ்.பி. ஆகியோரது கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதையடுத்து கலவரக் கும்பலைக் கலைக்க தடியடி,கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கலவரக்காரர்கள் 45 பேர் கைது செய்யப்பட்டு 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி கோட்டாட்சியர் புகழேந்தி, திருமங்கலம் தாசில்தார் பரமேஸ்வரி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வில்லூரில் முகாமிட்டுள்ளனர். 5 மாவட்டங்களில் இருந்து ஆயுதப் படை போலீஸார் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரட்டை டம்ளர் முறை, வாகனங்களில் குறிப்பிட்ட தெருவுக்குள் செல்லக் கூடாது என யாராவது தீண்டாமைக் கொடுமையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஐ.ஜி.
read more...
திருமங்கலம் அருகே தீண்டாமை காரணமாக கலவரம்: துப்பாக்கி சூடு 45 பேர் கைது 150 பேர் மீது வழக்குப் பதிவுSocialTwist Tell-a-Friend

நல்லக்கண்ணுக்கு "தர்மத் தலைவர்' விருது

0 comments
திருநெல்வேலி : இந்திய கம்யூ., கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் நல்லக்கண்ணுக்கு, "தர்மத் தலைவர்' என்ற விருதை, மகாத்மா காந்தி உதவியாளர் கல்யாணம் வழங்கினார். நல்லக்கண்ணு, பொதுமக்கள் நலனுக்காக, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளார். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்து, அவரே ஆஜராகி வாதாடினார்.
கோர்ட் உத்தரவுப்படி, இந்த ஆற்றிலுள்ள ஐந்து குவாரிகளில், நிபுணர் குழு ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்தது. அறிக்கையை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், ஐந்து ஆண்டுகளுக்கு, இக்குவாரிகளில் மணல் அள்ளத்தடை விதித்தது. தாமிரபரணியை காப்பாற்ற, நல்லக்கண்ணு எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது.
விருது வழங்கல்: இதையடுத்து நேற்றிரவு பாளையங்கோட்டையில், தாமிரபரணி அமைப்பு சார்பில், நல்லக்கண்ணுக்கு, பாராட்டு விழா நடந்தது. அந்த அமைப்பின் அகில பாரத தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் வரவேற்றார். முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், தஞ்சை பல்கலை., ஆட்சிக்குழு உறுப்பினர் பரமசிவன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., பேராசிரியர் அருணாச்சலம், அறக்கட்டளை நிர்வாகிகள் பேசினர். மகாத்மா காந்தி நேரடி உதவியாளர் கல்யாணம், நல்லக்கண்ணுக்கு, "தர்மத் தலைவர்' என்ற விருதை வழங்கினார். நல்லக்கண்ணு ஏற்புரை வழங்கினார்.

thanks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=235932


என்னை அரசியலை விட்டே ஓடச் சொன்னார்கள்: ஆர். நல்லகண்ணு பேச்சு

தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ளத் தடை உத்தரவு பெற்றுத் தந்ததற்காக ஆர். நல்லகண்ணுவுக்குதாமிரபரணி அமைப்பு சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் மைதானத்தில் நேற்று இரவு பாராட்டு விழா நடந்தது.

அப்போது நல்லகண்ணு பேசியதாவது,

மனிதன் இன்று தான் அனுபவிக்கும் இயற்கை வளங்களை எதிர்கால சமுதாயத்திற்கும் விட்டுச் செல்ல வேண்டும். அதை தன் வாழ்நாளிலேயே அழித்துவிடக் கூடாது.

தமிழ் வளர்த்த பெருமை உடைய ஆறு தாமிரபரணி. ஆற்றங்கரையோரங்களில் தமிழ் மொழி செழித்து வளர்ந்துள்ளது. அத்தகைய நதியை நாம் பாதுகாக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இன்று காவிரி, வைகை, பாலாறு ஆகிய நதிகள் அழிந்து வருகின்றன. இந்த நதிகளில் எல்லாம் இப்போது தண்ணீர் வருவதில்லை. காவிரி நதியில் ஆடிப் பெருக்குக்குக் கூட தண்ணீர் வருவதில்லை.

பாலாறு பாழடைந்து விட்டது. வைகைக்கும் சிக்கல் வந்து விட்டது. தாமிரபரணி மட்டுமே தகராறு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

செல்வம் செழிக்கும் ஜீவநதியான தாமிரபரணி தான் செல்லும் இடங்களில் எல்லாம் வளமையை ஏற்படுத்துகிறது. ஆனால் அதன் தன்மை இன்று கெட்டு விட்டது. அதைப் பாதுகாக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தாமிரபரணியை பாதுகாக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. இந்த ஆற்றில் மணல் அள்ள நான் தடையாணை வாங்கியதை கண்டித்து சிலர் 'அரசியலை விட்டு ஓடு' என்று சுவரொட்டிகள் ஒட்டினர். அதை யார் ஒட்டினார்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் பிறப்பதற்கு முன்பே நான் பிறந்தவன், அரசியலுக்கு வந்தவன்.

தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதைத் தடுக்க நாம் உறுதி கொள்ள வேண்டும். நீதிமன்ற தடையாணையை அகற்ற முயற்சிகள் நடந்து வருகின்றது. அதை முறியடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாம் அனைவரும் உறுதியாக இருந்தால்தான் தாமிரபரணியை பாதுகாக்க முடியும் என்றார்.

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/05/04/people-asked-me-get-away-from-politics-nallakannu-aid0128.html

read more...
நல்லக்கண்ணுக்கு "தர்மத் தலைவர்' விருதுSocialTwist Tell-a-Friend