சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை

0 comments
சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை


வரி ஏய்ப்பு வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் உள்ளிட்ட 5 பேருக்கு 2ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


1994-ல் பயன்படுத்தப்பட்ட கார் என்கிற பேரில் புதிய லெக்சஸ் காரை இறக்குமதி செய்ததாக நடராஜன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. இதன் மூலம் வரி ஏய்ப்பு நடந்திருப்பதும் கண்டறியப்பட்டது.

13 ஆண்டுகளாக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், நடராஜன் உள்ளிட்ட 4 பேருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.
thanks to dinamani tamil news paper
read more...
சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறைSocialTwist Tell-a-Friend

கல்வீச்சில் 29 பஸ்கள் சேதம்; 54 பேர் கைது

0 comments
உசிலம்பட்டி, ஜூலை 14: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் புதன்கிழமை பந்த் நடைபெற்றதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பஸ், ஆட்டோ மினி வேன் இயங்கவில்லை. அரசு பஸ்கள் மீது சில விஷமிகள் கல்வீசித் தாக்கினர். இதில் 29 பஸ்கள் சேதமடைந்தன. சாலை மறியலில் ஈடுபட்டதாகவும், கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் 54 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக் கோரி, பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.ஏ.முருகன்ஜீ தலைமையில் புதன்கிழமை தென்மாவட்டங்களில் பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உசிலம்பட்டி, செக்கானூரணி மற்றும் அப்பகுதி கிராமப்புறங்களில் காலை 6 மணி முதல் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ், ஆட்டோ, மினி வேன், கார் இயங்கவில்லை.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

அரசு பேருந்துகள் மட்டும் காலையில் இயக்கப்பட்டன. ஆனால், உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமப் பகுதியில் மதுரையிலிருந்து கம்பம் சென்ற அரசு பேருந்து மீது சிலர் கல் வீசித் தாக்கியதில் அதன் கண்ணாடி உடைந்து ஓட்டுநர் காயம் அடைந்தார்.

இதே போல் உசிலம்பட்டியிலிருந்து மறவபட்டி சென்ற நகர் பேருந்தின் கண்ணாடி கல் வீசி உடைக்கப்பட்டது. பொட்டுல்பட்டி விலக்கு பகுதியில், பண்ணைபட்டி விலக்கு, திருமங்கலம் விலக்கு, செக்கானூரணி போலீஸ் சரகத்திற்கு உள்பட்ட முதலைக்குளம், விக்ரமங்கலம் பிரிவு உள்ளிட்ட பகுதியில் 29 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாக போக்குவரத்துப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

பேருந்துகள் மீது கல் வீச்சு சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த போலீஸôர், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி (20), ஜெயக்குமார் (23), பாலமுருகன் (20), மகேந்திரன் (22), ராமசாமி (28), செக்கானூரணி பகுதியைச் சார்ந்த சுரேந்திரன் (37), முருகன் (32), செல்லபாண்டி (37), தமிழ்பாண்டி (35) உள்ளிட்ட 33 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல, உசிலம்பட்டி, செக்கானூரணி, மதுரை அவனியாபுரம் பகுதியில் சிலர் சாலை மறியலுக்கு முயன்றனர். அவனியாபுரம் பகுதியில் அரசு பேருந்து மீது சிலர் கல்வீசியதாகக் கூறப்படுகிறது.
மதுரை புறநகர் பகுதியில் புதன்கிழமை மட்டும் பந்த் மற்றும் மறியல் தொடர்பாக செக்கானூரணியில் 7 பேரையும், அவனியாபுரத்தில் 8 பேரையும் கைது செய்துள்ளதாகவும், உசிலம்பட்டியில் பேருந்து மறியல் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். புறநகர் பகுதிகளில் பேருந்துகள் மீது கல்வீசிய சம்பவத்தை அடுத்து 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புறநகர் போலீஸ் எஸ்.பி.மனோகரன் தெரிவித்தார்.

உசிலம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.புதன்கிழமை மாலைக்குப் பின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
thanks
n.t.r.thevar
read more...
கல்வீச்சில் 29 பஸ்கள் சேதம்; 54 பேர் கைதுSocialTwist Tell-a-Friend

அச்சம் தவிர் ....

0 comments















சத்திய மூர்த்தி மழவராயர் அமெரிக்காவில் உள்ள மினசோட்ட மாகாணத்தில்
மினசோட மாகாண தமிழ் சங்கத்தில் நடந்த பேச்சு போட்டிஇல் கொடுத்த உடனடி தலைப்பின் கீழ்

அச்சம் தவிர் .... என்ற தலைப்பில் மிக சிறப்பாக உரையாற்றி
வெற்றி கோப்பையை வென்றுடுதுள்ளர் ...
தமிழ்நாட்டினை சேர்ந்த இவர் சிறந்த கவி புனைவளரும் கூட .....
read more...
அச்சம் தவிர் ....SocialTwist Tell-a-Friend
0 comments
read more...
SocialTwist Tell-a-Friend

வைகோ, பழநெடுமாறன்,மா.நடராசன் கைது

0 comments
சென்னை, ஜுலை.14 (டிஎன்எஸ்) இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய  வைகோ, பழநெடுமாறன்,  மா நடராசன் உள்ளிட்ட தமிழ் ஆதரவாளர்கள் பலர் இன்று கைது செய்யப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்தும், இலங்கை அரசை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.நா குழுவை அனுமதிக்காததை கண்டித்தும், இலங்கை அரசுக்கு எதிராக சென்னை மைலாப்பூர் பகுதியில் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா பாண்டியன், இலங்கைத் தமிழர் பாதுகாப்புச் சட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பழநெடுமாறன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை இதுழாசிரியர் மா நடராசன் மற்றும் தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோ ர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று இலங்கை அரசை கண்டித்தும், மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள்.

ஐ.நா விசாரணைக் குழுவை அனுமதிக்க மறுக்கும் இலங்கை அரசுக்கு தமிழகத்தில் தூதரகம் இயங்கக்கூடாது என்று முழக்கமிட்டவாறு  ஆழ்வார்பேட்டையில் உள்ள தூதரகத்தை  நோக்கி செல்ல முயன்ற வைகோ, தா பாண்டியன், பழநெடுமாறன் உள்ளிட்ட அனைவரையும் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். (டிஎன்எஸ்)
THANKS
http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=7e548d28-0e0e-4fb7-b7ef-13f6d2a29e5e&CATEGORYNAME=TCHN
read more...
வைகோ, பழநெடுமாறன்,மா.நடராசன் கைதுSocialTwist Tell-a-Friend

ஐ.நா. குழுவை எதிர்க்க சீனாவுடன் கூட்டு சேருகிறது இந்தியா: தா.பாண்டியன்

0 comments
திகதி: 11.07.2010 // தமிழீழம்

ஐ.நா. குழுவை முறியடிக்க, தமிழர்களுக்கு எதிரான நிலையை மேற்கொண்டுள்ள இந்திய அரசு, இதற்காக சீனாவின் உதவியை நாடியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

இலங்கையில் நாலரை லட்சத்திக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறிய செயல் என ஐ.நா. விசாரணை குழு அமைத்துள்ளது.

இலங்கை அரசுடன் இந்திய அரசும் சேர்ந்து ஐ.நா.குழுவை எதிர்ப்பதற்கு சீன ஆதரவை கோரியுள்ளது. முதல்வர் கருணாநிதி அதிகாரத்தில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என சபதம் எடுத்து பொய்பிரசாரங்களை பேசி வருகிறார்.

கடந்த 5 ம் தேதி நடந்த பந்தில் தமிழக மக்கள் பங்கு பெற்று வெற்றி அடைய செய்துள்ளனர். பல கெடுபிடிகள் மிரட்டல்களையும் மீறி தமிழக மக்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வெற்றி அடைய செய்துள்ளனர்.

பெட்ரோல் விரை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருப்பதால்தான் பெட்ரோலிய பொருட்கள் அதிக அளவில் உயரவில்லை என்ற வாதத்தை தி.மு.க. பரப்பி வருகிறது என்றார்.


நன்றி - சங்கதி
read more...
ஐ.நா. குழுவை எதிர்க்க சீனாவுடன் கூட்டு சேருகிறது இந்தியா: தா.பாண்டியன்SocialTwist Tell-a-Friend
0 comments
நம் கிறிஸ்தவ அகமுடையோர் உறவின் முறைக்கு அன்பு வணக்கம்.
வீரத்தின் விளைநிலம் தமிழகம்.வீரம் என்பது பழந்தமிழ்க் கவிதைகளில் அலங்காரச் சொல்லன்று; கற்பனைக் காவியங்களில் சிம்மாசனம் ஏறும் சீரழகுச் சொல்லன்று; வீரம் தமிழனின் உயிர் மூச்சு! நின்று நிலைக்கும் நெடிய வரலாற்றில் நித்தம் விளையாடும் வினைச் சொல். நாட்டின் விடுதலைப் போரில் திருப்பள்ளி எழுச்சி பாடிய திருவிடம் தமிழகமே! மாமன்னர் மருது வரலாறே அதற்குச் சான்று
செம்மண் பூமியாம் சிவகங்கைச் சீமையில் எம்மண் காப்போம் என வீறுகொண்டழுந்திட்ட வீரம் செறிந்தவர்கள் மருது சகோதரர்கள்.
கப்பமாய் வரியைக் கேட்கும்
கயவர்க்கு வரி கொடாமல்
துப்பியே அனுப்பி வைப்போம் ... !
- என்று தேசப்பற்றுடன் வாளேந்திய சகோதரர்களின் வாரிசுகளே..
கால வெள்ளத்தில் தேசத்தின் பல திசைகளுக்கும் அடித்துச் செல்லப்பட்டு இன்று மீண்டும் மருது சகோதரர்கள் கொடையாய் அளித்த சருகணி தேவாலயத்தின் முன் நாம் சங்கமம் ஆகி இருக்கிறோம்.
நம்முடைய உறவுமுறை கட்டமைப்பு வெறும் சாதி சங்கம் என்ற பட்டியலுக்குள் மட்டும் பதுங்கி விடக்கூடாது.மனித குலத்தில் சாதியத்தின் புகழ் பாடுவதும் நம் நோக்கமல்ல. இது நம் உறவுகளை ஒன்றிணைப்பதற்கான ஒரு பாலம் மட்டுமே என்பதில் நம் உறவினர்கள் தெளிவுடன் இருக்க வேண்டும்.
நம் முன்னோர்களால் ஏராளமான உயிர்ப்பலி கொடுத்துப் பெற்ற சுதந்திர தேசத்தை சாதிப் பிரிவினைகளால் கூண்டில் அடைப்பது நம் கோட்பாடும் அல்ல. ஆனால் சாதியக் கட்டமைப்பை முன்வைத்தே நம் கல்வி, அரசியல், சமூக, பொருளாதார நிலைப்பாடுகள் இயங்குவதால் சாதீயம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.மற்றபடி சாதீயத்துக்கு பல்லக்கு தூக்க வேண்டும் என்பது நம் நோக்கமல்ல.
எனவே நம் இனத்தவர்கள் தரமான கல்வியைப் பெற்று பொருளாதாரத்துறையில் முன்னேறி ஆட்சி அதிகார அமைப்புகளில் அமர்ந்து தெளிவான சிந்தனையுடன் நம் நாட்டை நல்வழிப்படுத்துவோம்.
நம் உறவுகளின் ஒன்றுசேரல் என்பது நம்மை உயர்த்துவதற்கே தவிர எவரையும் பழிப்பதற்கல்ல! எனவே நம் இனத்து இளைய தலைய முறையினரே இந்தப் புதிய சிந்தனையுடன் வன்முறையற்ற தேசத்தைக் கட்டி எழுப்புவோம்! அதுவே நம் மாமன்னர்கள் மருது சகோதரர்களுக்குச் செய்யும் மரியாதை.
thanks

http://www.christianagamudayar.com/#
read more...
SocialTwist Tell-a-Friend