நம் கிறிஸ்தவ அகமுடையோர் உறவின் முறைக்கு அன்பு வணக்கம்.
வீரத்தின் விளைநிலம் தமிழகம்.வீரம் என்பது பழந்தமிழ்க் கவிதைகளில் அலங்காரச் சொல்லன்று; கற்பனைக் காவியங்களில் சிம்மாசனம் ஏறும் சீரழகுச் சொல்லன்று; வீரம் தமிழனின் உயிர் மூச்சு! நின்று நிலைக்கும் நெடிய வரலாற்றில் நித்தம் விளையாடும் வினைச் சொல். நாட்டின் விடுதலைப் போரில் திருப்பள்ளி எழுச்சி பாடிய திருவிடம் தமிழகமே! மாமன்னர் மருது வரலாறே அதற்குச் சான்று
செம்மண் பூமியாம் சிவகங்கைச் சீமையில் எம்மண் காப்போம் என வீறுகொண்டழுந்திட்ட வீரம் செறிந்தவர்கள் மருது சகோதரர்கள்.
கப்பமாய் வரியைக் கேட்கும்
கயவர்க்கு வரி கொடாமல்
துப்பியே அனுப்பி வைப்போம் ... !
- என்று தேசப்பற்றுடன் வாளேந்திய சகோதரர்களின் வாரிசுகளே..
கால வெள்ளத்தில் தேசத்தின் பல திசைகளுக்கும் அடித்துச் செல்லப்பட்டு இன்று மீண்டும் மருது சகோதரர்கள் கொடையாய் அளித்த சருகணி தேவாலயத்தின் முன் நாம் சங்கமம் ஆகி இருக்கிறோம்.
நம்முடைய உறவுமுறை கட்டமைப்பு வெறும் சாதி சங்கம் என்ற பட்டியலுக்குள் மட்டும் பதுங்கி விடக்கூடாது.மனித குலத்தில் சாதியத்தின் புகழ் பாடுவதும் நம் நோக்கமல்ல. இது நம் உறவுகளை ஒன்றிணைப்பதற்கான ஒரு பாலம் மட்டுமே என்பதில் நம் உறவினர்கள் தெளிவுடன் இருக்க வேண்டும்.
நம் முன்னோர்களால் ஏராளமான உயிர்ப்பலி கொடுத்துப் பெற்ற சுதந்திர தேசத்தை சாதிப் பிரிவினைகளால் கூண்டில் அடைப்பது நம் கோட்பாடும் அல்ல. ஆனால் சாதியக் கட்டமைப்பை முன்வைத்தே நம் கல்வி, அரசியல், சமூக, பொருளாதார நிலைப்பாடுகள் இயங்குவதால் சாதீயம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.மற்றபடி சாதீயத்துக்கு பல்லக்கு தூக்க வேண்டும் என்பது நம் நோக்கமல்ல.
எனவே நம் இனத்தவர்கள் தரமான கல்வியைப் பெற்று பொருளாதாரத்துறையில் முன்னேறி ஆட்சி அதிகார அமைப்புகளில் அமர்ந்து தெளிவான சிந்தனையுடன் நம் நாட்டை நல்வழிப்படுத்துவோம்.
நம் உறவுகளின் ஒன்றுசேரல் என்பது நம்மை உயர்த்துவதற்கே தவிர எவரையும் பழிப்பதற்கல்ல! எனவே நம் இனத்து இளைய தலைய முறையினரே இந்தப் புதிய சிந்தனையுடன் வன்முறையற்ற தேசத்தைக் கட்டி எழுப்புவோம்! அதுவே நம் மாமன்னர்கள் மருது சகோதரர்களுக்குச் செய்யும் மரியாதை.
thanks

http://www.christianagamudayar.com/#
SocialTwist Tell-a-Friend

No comments: