ஐ.நா. குழுவை எதிர்க்க சீனாவுடன் கூட்டு சேருகிறது இந்தியா: தா.பாண்டியன்

திகதி: 11.07.2010 // தமிழீழம்

ஐ.நா. குழுவை முறியடிக்க, தமிழர்களுக்கு எதிரான நிலையை மேற்கொண்டுள்ள இந்திய அரசு, இதற்காக சீனாவின் உதவியை நாடியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

இலங்கையில் நாலரை லட்சத்திக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறிய செயல் என ஐ.நா. விசாரணை குழு அமைத்துள்ளது.

இலங்கை அரசுடன் இந்திய அரசும் சேர்ந்து ஐ.நா.குழுவை எதிர்ப்பதற்கு சீன ஆதரவை கோரியுள்ளது. முதல்வர் கருணாநிதி அதிகாரத்தில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என சபதம் எடுத்து பொய்பிரசாரங்களை பேசி வருகிறார்.

கடந்த 5 ம் தேதி நடந்த பந்தில் தமிழக மக்கள் பங்கு பெற்று வெற்றி அடைய செய்துள்ளனர். பல கெடுபிடிகள் மிரட்டல்களையும் மீறி தமிழக மக்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வெற்றி அடைய செய்துள்ளனர்.

பெட்ரோல் விரை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருப்பதால்தான் பெட்ரோலிய பொருட்கள் அதிக அளவில் உயரவில்லை என்ற வாதத்தை தி.மு.க. பரப்பி வருகிறது என்றார்.


நன்றி - சங்கதி
ஐ.நா. குழுவை எதிர்க்க சீனாவுடன் கூட்டு சேருகிறது இந்தியா: தா.பாண்டியன்SocialTwist Tell-a-Friend

No comments: