சென்னை, ஜுலை.14 (டிஎன்எஸ்) இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ, பழநெடுமாறன், மா நடராசன் உள்ளிட்ட தமிழ் ஆதரவாளர்கள் பலர் இன்று கைது செய்யப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்தும், இலங்கை அரசை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.நா குழுவை அனுமதிக்காததை கண்டித்தும், இலங்கை அரசுக்கு எதிராக சென்னை மைலாப்பூர் பகுதியில் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா பாண்டியன், இலங்கைத் தமிழர் பாதுகாப்புச் சட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பழநெடுமாறன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை இதுழாசிரியர் மா நடராசன் மற்றும் தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோ ர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று இலங்கை அரசை கண்டித்தும், மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள்.
ஐ.நா விசாரணைக் குழுவை அனுமதிக்க மறுக்கும் இலங்கை அரசுக்கு தமிழகத்தில் தூதரகம் இயங்கக்கூடாது என்று முழக்கமிட்டவாறு ஆழ்வார்பேட்டையில் உள்ள தூதரகத்தை நோக்கி செல்ல முயன்ற வைகோ, தா பாண்டியன், பழநெடுமாறன் உள்ளிட்ட அனைவரையும் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். (டிஎன்எஸ்)
THANKS
http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=7e548d28-0e0e-4fb7-b7ef-13f6d2a29e5e&CATEGORYNAME=TCHN
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment