பெரிய கோவில் 1000 ஆண்டு நிறைவு விழா மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் முரசு கொட்டி தொடங்கி வைத்தர்
தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம் நேற்று முன்தினம் கோலாகலமாகத் தொடங்கியது.
பெரிய கோவில் எனப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டி ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா 5 நாட்கள் நடக்கிறது.
இதை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், அமைச்சர் கோ.சி. மணி ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர். முதல் நிகழ்ச்சியாகத் தஞ்சை சங்கமம் நடைபெற்றது. இதையடுத்து கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் தொல்லியல் துறை சார்பில் சிறப்பு கண்காட்சி நடத்தப்படுகிறது. இதை இன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
thanks to http://thatstamil.oneindia.in/news/2010/09/24/tanjore-pragadheeswarar-temple.html
read more...

தஞ்சை அரண்மனையில் சோழர்கால கண்காட்சி: தங்கம் தென்னரசு
![]() |
rajaraja chola devar and ulagamaa devi |
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா முன்னிட்டு அரண்மனை வளாகத்தில் சிறப்பு கண்காட்சி அமைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். கண்காட்சி அரங்கு எவ்வாறு இருக்க வேண்டும், சோழர் கால வரலாற்று பெருமையை விளக்கும் வகையில் என்னென்ன காட்சிப்பொருள் இடம் பெற வேண்டுமென முதல்வர் அறிவுரை, ஆலோசனை, வழிகாட்டுதல் தெரிவித்துள்ளார்.
11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜராஜ சோழன் மற்றும் அவன் மனைவி லோகமாதேவி ஆகியோரின் வெண்கலச் சிலைகள் குஜராத்தில் உள்ள சாராபாய் அறக்கட்டளையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலின் இந்த 1000 ஆவது ஆண்டு நிகழ்வின் போது, அந்தச் சிலைகளை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.
அதன்படி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கண்காட்சியில், சோழர்கால செப்பு படிமம், நாணயம், கல் சிற்பம், செப்பேடு, ஓவியம், வரலாற்று தகவல் இடம் பெறும். சங்கீத மகால் உள்ளிட்ட இடங்களில் பத்து அரங்கம் அமைக்கப்படும். சோழர் கால வரலாற்றை விளக்கும் அடிப்படையில் கண்காட்சி அமையும் என்றார்.

கீழத்தூவல் படுகொலை வீர வணக்க நாள்
thanks to
http://thevar-mukkulathor.blogspot.com/2010/09/blog-post_14.html

குற்றாலநாதர் கோவில் கும்பாபிஷேகம்
குற்றாலநாதர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட தென்காசி எம்.எல்.ஏ. வீ.கருப்பசாமிபாண்டியன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்
read more...

வெளிநாட்டு சொகுசு கார் வழக்கில் ம.நடராஜனுக்கு நிபந்தனை பிணை
![]() |
ma.natarajan |
திங்கட்கிழமை, 13 செப்ரெம்பர் 2010, 01:43.09 PM GMT +05:30 ] |
வெளிநாட்டிலிருந்து சொகுசு வாகனம் வாங்கி இறக்குமதி செய்த வழக்கில் சசிகலாவின் கணவர் ம.நடராஜனுக்கு நிபந்தனை பிணை வழங்கி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
கடந்த 1994-ம் ஆண்டு லண்டனில் இருந்து சொகுசு கார் வாங்கியது தொடர்பாக ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு மோசடி செய்ததாக நடராஜனுடன் சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், லண்டன் தொழில் அதிபர்கள் பாலகிருஷ்ணன், யோகேஷ் பாலகிருஷ்ணன் மற்றும் வங்கி மேலாளர் சுசரிதா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் பாலகிருஷ்ணன் தவிர மற்ற 4 பேருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து நடராஜன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். இம்மனுவை ஐகோர்ட்டு விசாரித்து 4 பேரின் தண்டனைகளையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. மேலும் 4 பேரும் சி.பி.ஐ. கோர்ட்டில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ள உத்தரவிட்டது. இதன்படி இன்று சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ரவீந்திரன் முன்பு நடராஜன், பாஸ்கரன், யோகேஷ் பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் நேரில் ஆஜராகி ரூ.10 ஆயிரத்துக்கான 2 உத்தரவாதங்களை கொடுத்து ஜாமீன் பெற்றனர். அவர்கள் அனைவரும் வருகிற அக்டோபர் 1-ந்தேதியும் அதன்பிறகு 3 மாதத்துக்கு ஒருமுறையும் கோர்ட்டில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார். thanks to http://www.newindianews.com/view.php?2b3e0AA22eeYYDD30eco4OXR2cddQQAKccd3ImM0A4b443lmmaa43ffmA3d0e3S46600 |

ராஜ ராஜ சோழன் வெண்கல சிலையை மீட்டுத் தர வேண்டும்; குஜராத் முதல்-மந்திரி மோடியிடம் தங்கம் தென்னரசு நேரில் வற்புறுத்தல்
சென்னை, செப். 8-
ராஜ ராஜ சோழன் சிலையை மீட்டுத்தர உதவி செய்ய வேண்டும் என்று குஜராத் முதல்- மந்திரியிடம் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்தார். தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை முதலாம் ராஜ ராஜ சோழன் கட்டினான். பெரிய கோவில் கட்டி 1000 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசு சார்பில் வருகிற 24, 25-ந்தேதியில் விழா எடுக்கப்படுகிறது.
விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். 1000-வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கோவில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ராஜ ராஜ சோழன் காலத்து 7 சிலைகளில் 5 சிலைகள் தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ளது. 2 வெண்கல சிலைகள் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முதலாம் ராஜ ராஜ சோழன் வெண்கல சிலையும் ராணி சிலையும் இருப்பதாக செப்பேட்டு மூலம் தகவல் வெளியானது. தனியாருக்கு சொந்தமான “காளிகோ” அருங்காட்சியகத்தில் சிலை உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை சராபாய் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறது.
இதையடுத்து சிலையை மீட்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்-அமைச்சர் கருணாநிதி, குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். நல்லிணக்க அடிப்படையில் அந்த சிலையை குஜராத் அரசு அன்பளிப்பாக தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இது தொடர்பாக குஜராத் முதல்-மந்திரியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேசினார்.
தஞ்சை பெரிய கோவில் 1,000-ம் ஆண்டு விழா கொண்டாடப்படும் இந்த வேளையில் முதலாம் ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மனைவி ராணி சிலையை அங்கு இருந்தால் சிறப்பாக இருக்கும். அதனால் சிலையை வழங்கி உதவிடுமாறு கேட்டுக் கொண்டார். அமைச்சருடன் சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர் ஆர்.நாகசுவாமி சென்றிருந்தனர்.
இந்த குழு சாராபாய் தன்னார்வ தொண்டு நிறுவன டிரஸ்டி கீதா சாராபாயை நேற்று சந்தித்து முதல்- அமைச்சர் கருணாநிதியின் கடிதத்தை கொடுத்தது.
ராஜ ராஜ சோழன் உயிரோடு இருந்த காலத்தில் தஞ்சை பெரிய கோவிலை தென்னவன் மூவேந்த வேலவன் என்பவர் நிர்வாகிக்க பொறுப்பு கொடுத்திருந்தார். அவர் நன்றிக்கடனாக ராஜராஜ சோழன், அவரது மனைவி சிலையை செய்துள்ளார். அந்த 2 சிலைகளையும் 1940-களில் தொண்டு நிறுவனர் சாராபாய் வாங்கியுள்ள தாக செப்பேடு தெரிவிக்கிறது.
இதுபற்றி அருங்காட்சியக இயக்குனர் டி.எஸ். மேத்தா கூறுகையில், தமிழக குழுவினர் என்னை சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தனர். சிலைக்கான ஆதாரத்துடன் எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதி கொடுத்தால் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பி னர்களுடன் பேசி முடிவு எடுப்போம் என்றார்thanks to http://mytamilnews.com/index.php?more=15

அதிமுக கூட்டணியில் இருந்து பார்வர்டு பிளாக் விலகவில்லை: பி.வி.கதிரவன்
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின், மாநில தலைமை செயற்குழு கூட்டம் மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுசெயலாளர் பி.வி.கதிரவன் செய்தியாளர்களிடம்,’’மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்டுவதற்கு மாநில அரசின் ஒப்புதலுடன் மத்திய அரசு பரிசீலனை செய்ததற்கு நாங்கள் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
ஆனால் காலதாமதம் செய்யாமல் தரம் உயர்த்தும் பணிகள் முடிந்து திறப்பு விழா காணும் விமான நிலையத்துக்கு அந்த விழாவிலேயே முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும்.

எங்கள் கட்சி தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அந்த கூட்டணி தொடரும்.
கடந்த 4-ந் தேதி தேனியில் நடந்த ஒரு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பார்வர்டு பிளாக் விலகி விட்டதாக ஒரு பொய்யான செய்தியை சிலர் கூறி வருகிறார்கள். அது உண்மையல்ல.
விலைவாசி உயர்வுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எங்கள் கட்சியினர் கலந்து கொள்வார்கள்.
அடுத்தமாதம் (அக்டோபர்) 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை சிறப்பாக நடத்த தீர்மானித்துள்ளோம்’’என்று தெரிவித்தார்.
thanks http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=39264

இந்தியக் கப்பற்படையில் குறுகிய கால அதிகாரி நிலை பணி வாய்ப்பு - 06-09-2010
http://kalvimalar.dinamalar.com/tamil/NewsDetails.asp?id=7987
Thanks
dinamalar
read more...
Thanks
dinamalar

பூலித்தேவன் மீது ஆணை . பிரபாகரன் மீண்டும் வருவார்
வெள்ளையனை நோக்கி பூலித்தேவன் பாய்ந்தார்! சிங்களவனை நோக்கி பிரபாகரன் பாய்ந்தார்!: காசிஆனந்தன்[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:20.19 AM GMT +05:30 ]
வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித்தேவன் பாய்ந்தார். அதே போல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்து பாய்ந்தார். சிங்களவனின் கொடுமை எத்தனை?எத்தனை? இவ்வாறு நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார்.
தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், ஈழத்துக்கவிஞர் காசி ஆனந்தன், நடிகர் கருணாஸ்,சசிகலா கணவர் எம்.நடராஜன் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இவ்விழாவில் கவிஞர் காசி ஆனந்தன் தனதுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
2 லட்சம் ஈழத் தமிழர்களையும் 40 ஆயிரம் விடுதலைப்புலிகளையும் ஈவு இரக்கமற்று கொன்று குவித்தது சிங்கள இராணுவம்.
ஈழத்தில் நாங்கள் போராடவில்லை. போராட்டம் எங்களுக்கு திணிக்கப்பட்டது. அதனால்தான் நாங்கள் போராடுகிறோம்.
வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித்தேவன் பாய்ந்தார். அதே போல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்து பாய்ந்தார். சிங்களவனின் கொடுமை எத்தனை?எத்தனை?
கொடூரத்தின் உச்சமாக தாயின் கண் முன்னே மகளை மானபங்கப்படுத்தி அவளது பிறப்புறுப்பில் குண்டு வைத்து வெடிக்கச்செய்தான். அந்த வலியால் இன்னும் துடித்துக்கொண்டிருக்கிறோம்’’என்று பேசினார்.
இவ்விழாவில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன் பேசுகையில்,
பூலித்தேவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். பிரபாகரன் மீண்டும் வருவார். இயக்கத்திற்கு தலைமையேற்று வழிநடத்துவார் என்றார்.
thanks to http://www.tamilwin.com/view.php?2a26QVl4b42X98se4b46IP5ce2bf1GU2cd3QipD2e0dVZLuSce03g2FZ0cd3tjoCd0

Subscribe to:
Posts (Atom)