வெளிநாட்டு சொகுசு கார் வழக்கில் ம.நடராஜனுக்கு நிபந்தனை பிணை

ma.natarajan
 திங்கட்கிழமை, 13 செப்ரெம்பர் 2010, 01:43.09 PM GMT +05:30 ]
வெளிநாட்டிலிருந்து சொகுசு வாகனம் வாங்கி இறக்குமதி செய்த வழக்கில் சசிகலாவின் கணவர் ம.நடராஜனுக்கு நிபந்தனை பிணை வழங்கி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1994-ம் ஆண்டு லண்டனில் இருந்து சொகுசு கார் வாங்கியது தொடர்பாக ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு மோசடி செய்ததாக நடராஜனுடன் சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், லண்டன் தொழில் அதிபர்கள் பாலகிருஷ்ணன், யோகேஷ் பாலகிருஷ்ணன் மற்றும் வங்கி மேலாளர் சுசரிதா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் பாலகிருஷ்ணன் தவிர மற்ற 4 பேருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து நடராஜன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். இம்மனுவை ஐகோர்ட்டு விசாரித்து 4 பேரின் தண்டனைகளையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. மேலும் 4 பேரும் சி.பி.ஐ. கோர்ட்டில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ள உத்தரவிட்டது.

இதன்படி இன்று சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ரவீந்திரன் முன்பு நடராஜன், பாஸ்கரன், யோகேஷ் பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் நேரில் ஆஜராகி ரூ.10 ஆயிரத்துக்கான 2 உத்தரவாதங்களை கொடுத்து ஜாமீன் பெற்றனர். அவர்கள் அனைவரும் வருகிற அக்டோபர் 1-ந்தேதியும் அதன்பிறகு 3 மாதத்துக்கு ஒருமுறையும் கோர்ட்டில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
thanks to http://www.newindianews.com/view.php?2b3e0AA22eeYYDD30eco4OXR2cddQQAKccd3ImM0A4b443lmmaa43ffmA3d0e3S46600
வெளிநாட்டு சொகுசு கார் வழக்கில் ம.நடராஜனுக்கு நிபந்தனை பிணைSocialTwist Tell-a-Friend

No comments: