rajaraja chola devar and ulagamaa devi |
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா முன்னிட்டு அரண்மனை வளாகத்தில் சிறப்பு கண்காட்சி அமைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். கண்காட்சி அரங்கு எவ்வாறு இருக்க வேண்டும், சோழர் கால வரலாற்று பெருமையை விளக்கும் வகையில் என்னென்ன காட்சிப்பொருள் இடம் பெற வேண்டுமென முதல்வர் அறிவுரை, ஆலோசனை, வழிகாட்டுதல் தெரிவித்துள்ளார்.
11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜராஜ சோழன் மற்றும் அவன் மனைவி லோகமாதேவி ஆகியோரின் வெண்கலச் சிலைகள் குஜராத்தில் உள்ள சாராபாய் அறக்கட்டளையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலின் இந்த 1000 ஆவது ஆண்டு நிகழ்வின் போது, அந்தச் சிலைகளை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.
அதன்படி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கண்காட்சியில், சோழர்கால செப்பு படிமம், நாணயம், கல் சிற்பம், செப்பேடு, ஓவியம், வரலாற்று தகவல் இடம் பெறும். சங்கீத மகால் உள்ளிட்ட இடங்களில் பத்து அரங்கம் அமைக்கப்படும். சோழர் கால வரலாற்றை விளக்கும் அடிப்படையில் கண்காட்சி அமையும் என்றார்.
No comments:
Post a Comment