பெரிய கோவில் 1000 ஆண்டு நிறைவு விழா மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் முரசு கொட்டி தொடங்கி வைத்தர்

 தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம் நேற்று முன்தினம் கோலாகலமாகத் தொடங்கியது.

பெரிய கோவில் எனப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டி ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா 5 நாட்கள் நடக்கிறது.

இதை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், அமைச்சர் கோ.சி. மணி ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர். முதல் நிகழ்ச்சியாகத் தஞ்சை சங்கமம் நடைபெற்றது. இதையடுத்து கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

தஞ்சை அரண்மனை வளாகத்தில் தொல்லியல் துறை சார்பில் சிறப்பு கண்காட்சி நடத்தப்படுகிறது. இதை இன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

thanks to http://thatstamil.oneindia.in/news/2010/09/24/tanjore-pragadheeswarar-temple.html
பெரிய கோவில் 1000 ஆண்டு நிறைவு விழா மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் முரசு கொட்டி தொடங்கி வைத்தர்SocialTwist Tell-a-Friend

No comments: