எங்களுடைய வரலாற்றில் எங்கள் கைகளில் இரத்தம் படிந்திருப்பது இதுதான் முதற் தடவையல்ல.

எம்.கே.பத்ரகுமார் இந்திய வெளிநாட்டுச் சேவைகளில் இராஜ தந்திரியாகப் பணியாற்றியவர். இலங்கையில் அரசியற் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மே 19 அன்று மரணமானார். சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டாலும் அந்தச் சம்பவங்களின் காட்சிகள் எம்மை விட்டு அகலாதபடி தொடர்ந்து கொண்டிருக்கிறது.அச்சம்பவங்களினால் நாங்கள் பெருமளவிற்கு இயல்பற்ற நிலையை உணர்வதோடு அமைதியாக இருக்கவும் முடியாதவர்களாக உள்ளோம். ஏதோ ஒன்று எங்கோ ஓரிடத்தில் உறுத்திக் கொண்டே இருக்கிறது. எங்கள் கைகளில் இரத்தம் இருப்பதை நாங்கள் பின்னர் உணர்ந்தோம். எங்கள் கைகளில் மட்டுமல்ல, எங்கள் முழு உடலிலும், எமக்குள்ளே ஆழமாகவும் இரத்தம்.

"பிரபாகரனின் இரத்தம். இல்லை, இது பிரபாகரனின் இரத்தம் மட்டுமல்ல, 70 ஆயிரம் இலங்கைத் தமிழர்களினதும் இரத்தம். கடந்த கால் நூற்றாண்டு காலமாக வார்த்தைகளால் சொல்ல முடியாத வன்முறையால் சிதைவுற்றுப் போன இலங்கைத் தமிழ் மக்களுடைய இரத்தம். "
"சகிப்புத் தன்மையை எங்களுடைய 5 ஆயிரமாண்டுகால வரலாறு எமக்குத் தந்தது. எங்களுக்கான நேரத்திற்காகக் காத்திருப்பதற்கு எங்களுடைய பிரபஞ்ச மதம் எங்களுக்கு ஒரு ஈடிணையற்ற ஞானத்தை வழங்கியிருந்தது."

"இன்னொரு தசாப்தத்திற்குப் பிறகு இந்திய உப கண்ட வரலாற்றில் தமிழ்ப் பிரச்சினையென்பது வெறும் பழங்கதையாகிவிடும். சிங்களவர்கள் இந்தியர்களின் மிகச் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். எங்களுடைய உயர் குடியினரும், அவர்களுடைய உயர் குடியினரும் ஒரே விடயங்களையே பேசுவார்கள். அவர்கள் இருவரும் நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள். கோல்ப் விளையாடுவார்கள். குளிர்ந்த பியர் அருந்துவார்கள். அவர்கள் நன்றாக இருக்க நாங்கள் வாழ்த்துவோம்.
அப்போதும் எங்கள் கைகளில் இரத்தம் இருந்து கொண்டே இருக்கும்.
அது எப்போதுமே எங்களுக்கு இடைஞ்சல் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஆனால் எங்களுடைய வரலாற்றில் எங்கள் கைகளில் இரத்தம் படிந்திருப்பது இதுதான் முதற் தடவையல்ல.
இரத்தக்கறைகள் கழுவப்படப் போவதில்லை. "

இந்தக் கட்டுரை விடுதலைப் புலிகளின் தலைவர் மரணமானார் என்பதனை அடிப்படையாகக் கொண்டு கட்டுரையாளர் எம்.கே.பத்ரகுமாரால் எழுதப்பட்டது. இவர் இந்தியாவின் ராஜதந்திர சேவையில் நீண்டகாலம் பணியாற்றியவர். இலங்கை தொடர்பான செயலாளராகவும் புதுடெல்லியில் பணியாற்றி உள்ளார்.

நன்றி தமிழ் சகி நியூஸ்



<<கட்டுரயை முழுமையாக படிக்க >>

SocialTwist Tell-a-Friend

No comments: