சிறீலங்கா அரசின் பொய்யான பரப்புரைகள்
அன்பான தமிழ மக்களே! விசமிகளின் பொய்ப் பரப்புரையை நம்பவேண்டாம்.ஒரு சில விசமிகள் தேவையற்ற அவதூறான பரப்புரையில் கிளம்பியுள்ளனர்.
தமிழ் மக்களுக்குக் காலங்காலமாக துரோகம் செய்து வருகின்ற ஒரு சில ஒட்டுப்படைக்கும்பல்கள் அரசுடன் இணைந்து கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் உடலை கைப்பற்றியிருப்பதாகவும் அவரது உடலம் கொழும்பிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பல பொய்யான தகவல்களை ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்திய அரசிற்குச் சார்பான ஒரு சில ஊடகங்கள் இச்செய்தியை மிகைப்படுத்தி எழுதுவதாக அங்கிருந்து கிடைத்த தகவல்களும் தெரிவிக்கின்றன.
ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள் இன்னும் போர்ப்பிரதேசங்களில் உள்ளனர். அவர்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதே சிங்கள அரசின் திட்டம். வன்னித் தகவல்களின் படி இதுவரை 25000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பல்லாயிரக் கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் தொடர்ந்தும் கடும் சமர் நடந்து வருவதாகவும் தெரியவருகின்றது.
மேலும் இலங்கைத் தமிழர் பாதுகதப்பு இயக்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டள்ளதாவது:மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவலத்தை மறைப்பதற்காகவே இலங்கை இனவெறி அரசு இப்படியான பொய்யான செய்திகளைப் பரப்பிவருகின்றது. இப்படியான பொய்ப் பரப்புரைகளை தயவுசெய்து யாரும் நம்பவேண்டாம். மக்களைக்காப்பாற்ற தலைவரின் நேரடி வழிகாட்டலின் கீழ் அனைத்து முன்னணித் தளபதிகளும் களத்தில் நின்று முனைப்புடன் போராடி வருகின்றனர்.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவலத்தை மறைப்பதற்காகவே இலங்கை இனவெறி அரசு இப்படியான பொய்யான செய்திகளைப் பரப்பிவருகின்றது. இப்படியான பொய்ப் பரப்புரைகளை தயவுசெய்து யாரும் நம்பவேண்டாம். மக்களைக்காப்பாற்ற தலைவரின் நேரடி வழிகாட்டலின் கீழ் அனைத்து முன்னணித் தளபதிகளும் களத்தில் நின்று முனைப்புடன் போராடி வருகின்றனர்.
சாவின் விளிம்பில் நிற்கும் மக்களைக் காப்பாற்ற இந்தக் கட்டத்திலாவது அனைத்துலகமும் ஐநாவும் முன்வர வேண்டும் என அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.சிறீலங்கா அரசு புலம்பெயர் மக்களின் போராட்டங்களை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.குறிப்பாக பொய்யான செய்திகளை அனைத்துலக ஊடகங்களுக்கு வழங்கி,அதனூடாக பெரும் இனப்படுகொலையினை வன்னியில் மேற்கொண்டு வருகின்றது.சிறீலங்கா அரசு ஆதாரம் ஒன்றும் இல்லாத செய்திகளையே வெளியிட்டு வருகின்றது.
இதனை நீங்கள் நம்பாது, ஆதாரமான செய்திகள் வரும் வரை காத்திருக்கவும்.தமிழ்மக்களை குழப்பும் முயற்சியில் சிறீலங்கா அரசு முயற்சி செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment