ப்ளாக்பெர்ரி - இந்தியாவிலும் அரப் எமிரேட்ஸிலும் தடை செய்யப்படுமா?

ப்ளாக்பெர்ரியின் சில குறிப்பட்ட சேவைகளான மெயில் மற்றும் மெஸ்ஸஞ்சர் பற்றி இந்திய அரசு கேள்வி எழுப்பி உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இவை தடை செய்யப்படலாம் என்றும் பளாக்பெர்ரியின் தயாரிபாளர்களான RIM ( Research in Motion) ரிசர்ச் இன் மோஷன் என்ற கனடா நிறுவனத்துக்கு இந்திய அரசு நோட்டீஸ் கொடுத்துள்ளது. பளாக்பெர்ரி என்ற ஸ்மார்ட்ஃபோன் வகை சேவை உலகளவில் 175 நாடுகளில் இருக்கிறது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இப்போது பளாக்பெர்ரியின் சில சேவைகளைப் பற்றி சில நாட்டு அரசுகள் கேள்வி எழுப்பியுள்ளன. இதில் குறிப்பிட்த்தக்கவை யுனைட்ட்ட் அரப் எமிரேட்ஸ் மற்றும் இந்தியா. இரண்டு நாடுகளிலுமே பல லட்சம் பளாக் பெர்ரி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். உண்மையில் இந்த நாடுகளுக்கும் பளாக் பெர்ரிக்கும் உள்ள பிரச்சினை தான் என்ன? பொதுவாக அரசின் பாதுகாப்பு பொறுப்பில் உள்ள துறைகளுக்கு ( உளவுத்துறை போன்றவை) எந்த இமெயிலையோ எஸ்.எம்.எஸ்ஸையோ குறுக்கிட்டு படிக்க முடியும். அதற்கான அதிகாரம் அவற்றுக்கு இருக்கினறன. நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக இது அத்தியாவசமாகிறது. ஆனால் ப்ளாக்பெர்ரி என்கிரிப்ட்ட் இமெயில் அல்லது எஸ்.எம்.எஸ் என்ற சேவையை வழங்குகிறது. அதாவது அனுப்புகிற இமெயிலோ அல்லது குறுஞ்செய்தியோ ஒரு பாஸ்வர்டுடன் அனுப்ப்ப்படும். ஆகவே அந்த பாஸ்வர்ட் தெரிந்தால் தான் அந்த செய்தியை படிக்க முடியும். பொதுவாக இதுபோல் என்க்ரிப்ட்ட் சேவையை வழங்கும் நிறுவன்ங்கள் ஒரு மாஸ்டர் பாஸ்வர்ட் வைத்திருக்கும் . அதாவது வாடிக்கையாளர் என்னதான் தனித்தனி பாஸ்வர்ட் உபயோகித்தாலும் கூட, நிறுவனம் எல்லா செய்திகளுக்குமே ஒரு பொதுவான் மாஸ்டர் பாஸ்வர்ட் வைத்திருக்கும். ஆகவே அரசு சம்பந்தப்பட்ட பாதுகாப்பு நிறுவன்ங்களுக்கு இந்த மாஸ்டர் பாஸ்வர்டை இந்த நிறுவன்ங்கள் கொடுக்கும்.

ஆனால் ப்ளாக் பெர்ரி இத்தகைய மாஸ்டர் பாஸ்வர்ட் எதையும் அரசுக்கு கொடுக்க மறுக்கிறது.
பளாக்பெர்ரி நிறுவனம் இதற்கு சொல்லும் விளக்கம் என்னவென்றால், அந்த நிறுவனத்திடம் அத்தகைய மாஸ்டர் பாஸ்வர்டே கிடையாது என்பதுதான். இது ஒரு வாடிக்கையாளர் என்ற முறையில் நமது பிரைவசி பற்றிய மகிழ்ச்சியை அளித்தாலும் ஒரு அரசாங்கம் பாதுகாப்பு சம்பந்தமாக யோசிக்கும்போது இத்தகைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் UAE அரசு வளர்ச்சி அடைந்த நாடுகளில் ப்ளாக் பெர்ரி அந்த நாட்டு அரசாங்க்க்களுக்கு அவர்களின் பாதுகாப்பு குறித்த “குறுக்கீடும் அதிகாரங்களை” (intercepting powers) வழங்கியிருக்கிறது. ஆனால் இந்தியா, UAE போன்ற நாடுகளில் இதை வழங்க மறுக்கிறது என்று RIM ( Research in Motion) ரிசர்ச் இன் மோஷன் நிறூவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளது. மேலும் பளாக்பெர்ரி இந்த அதிகாரங்களை தராவிட்டல் சேவைகள் தடை செய்யப்படும் என்றும் இந்தையா மற்றும் UAE அரசுகள் கெடு வைத்துள்ளது. ஏற்கனவே கூகுள் ( Google) நிறுவனம் சீனாவில் இது போன்ற ஒரு பிரச்சினையில் மாட்டி பின் அதை எப்படியோ சமாளித்த்து. என்ன செய்யப் போகிறது ப்ளாக்பெர்ரி. ப்ளாக் பெர்ரியை உபயோகிக்கும் லட்சோப லட்ட்சம் வாடிக்கையாளர்கள் மனதில் இதுதான் கேள்வி!
thanksa to http://moonramkonam.blogspot.com/2010/08/blackberry-ban-india-uae-privacy.html
ப்ளாக்பெர்ரி - இந்தியாவிலும் அரப் எமிரேட்ஸிலும் தடை செய்யப்படுமா?SocialTwist Tell-a-Friend

No comments: