ஜல்லிக்கட்டு: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜல்லிக்கட்டு: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
First Published : 14 Aug 2010 01:16:34 AM IST


புது தில்லி, ஆக. 13: ஜல்லிக்கட்டு தொடர்பாக இந்திய பிராணிகள் நல வாரியம் தெரிவித்துள்ள ஆலோசனைகள் குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.÷இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இந்திய பிராணிகள் நல வாரியம் கூறிய ஆலோசனைகள்: 

ஒரு மாவட்டத்தில் ஓராண்டில் 3 ஜல்லிக்கட்டுகளுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.

குறைந்தபட்சம் ரூ.20 லட்சத்தை வைப்புநிதியாக ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் செலுத்த வேண்டும். போட்டியின்போது காயமடைபவர்களின் நலனுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.÷

குந்த மருத்துவ உபகரணங்கள், மருந்துகளுடன் கால்நடை மருத்துவர் ஒருவரும் போட்டியின்போது பணியில் இருக்க வேண்டும். 

ஒரு குறிப்பிட்ட நேரத்தில், 5 பேருக்கு மேல் காளையை அடக்க அனுமதிக்கக் கூடாது.÷

ஏற்கெனவே உள்ள ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கும் வகையில் சட்டத்தின் 7-வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் 

என பிராணிகள் நல வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் பஞ்ச்வானி குறிப்பிட்டார்.÷நலவாரியத்தின் ஆலோசனைகள் குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வீ.ரவீந்திரன்,எச்.எல்.கோகலே ஆகியோரடங்கிய பெஞ்ச் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. 

கோயில் திருவிழாக்களின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என்றும், அது ஒரு மதச் சடங்கு மற்றும் கிராமத்தின் கலாசாரம் என்றும் முந்தைய விசாரணையின்போது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

thanks to
http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=287270&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81:%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
ஜல்லிக்கட்டு: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவுSocialTwist Tell-a-Friend

No comments: