தாமிரக் கழிவுகளை சவூதிக்கு ஏற்றுமதி செய்ததில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதை கலால்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு வரி ஏய்ப்பு செய்து அரசுக்கு ரூ.250 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலை மீது கலால்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக அந்த ஆலையின் துணை தலைவர் வரதராஜனை கலால்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தாமிரக் கழிவுகளை சவூதிக்கு ஏற்றுமதி செய்ததில் ஸ்டெர்லைட் ஆலை பல கோடி மோசடி செய்திருப்பதை கலால்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கலால்துறை அதிகாரிகள் இன்று ஸ்டெர்லைட் ஆலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தாமிரக் கழிவில் தங்கம், வெள்ளி மட்டுமே இருப்பதாக கூறி ஏற்றுமதி செய்யப்பட்டது தெரியவந்தது.
ஆனால் தாமிரக் கழிவில் பிளாட்டினம், பலோடியம் இருப்பதை கலால்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து தாமிரக் கழிவில் பிளாட்டினம், பலோடியம் இருப்பதை மறைத்ததால் ஸ்டெர்லைட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக ரூ.18 கோடி மோசடியை கலால்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கழிவு ஏற்றுமதியில் பல நூறு கோடி மோசடி நடந்திருக்கலாம் என்று கலால்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தாமிரக் கழிவு ஏற்றுமதி குறித்து முழு விசாரணை நடத்த கலால்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
thankjs to http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1008/21/1100821038_1.htm
தாமிரக் கழிவு ஏற்றுமதியில் ஸ்டெர்லைட் பல கோடி ரூபாய் மோசடி கண்டுபிடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment