நகை கணக்குகளுக்கு போவதற்க்கு முன்பு திருமலையின் நிர்வாகத்தையும் வருமானத்தையும் பார்ப்பது முக்கியம். திருமலை கோயிலின் ஊழியர்கள் மொத்தம் 16 ஆயிரத்து 200 பேர் இவர்களில் 2400 பேர்திருமலையிலும் ,மீதி பேர் கீழ் திருப்பதியில் இருக்கும் தேவஸ்தான நிர்வாக அலுவலக்க் கட்டுப்பாட்டிலும் இருக்கிறார்கள்.இவர்கள் மொத்தப்பேரின் குடுமையும் நான்கு பேரின் கையில் தான் .
முதல் நபர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் ஆதிகேசவலு.பெரும் பணக்காரர். இவருக்கு மருத்துவ கல்லூரிகள் ,தொழிற்சாலைகள் என ஏகப்பட்ட தொழில்கள்.தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி யாக இருந்து இப்போது காங்கிரஸ் கட்சியின் எம்.பியாக இருப்பவர்.பூர்வீகம் சித்தூர்.இவருக்கு அடுத்தபடியாக இருப்பவர் தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணாராவ்.மூன்றாம் நபர் -இணை செயல் அதிகாரியான யுவராஜ் ஐஏஎஸ்.சொந்த ஊர் சேலம்.கீழ் திருப்பத்யில் கடல் போல காட்சி அளிக்கும் தேவஸ்தான நிர்வாக அலுவலகத்திற்க்கு இவர்தான் பொறுப்பு.நான்காமவர்-சிறப்பு அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி.இவர்களுக்கு கீழ் 13 அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள் இவர்களை தவிர்த்து ஒட்டுமொத்த பாதுகாப்பையும் கவனிப்பது தலைமை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரியான எம்.கே.சிங்.ஐ.பி.எஸ் தலமையிலான டீம்!
சராசரியாக தினமும் 85 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் பக்தர்கள் ஏலுமலையானை தரிசனம் செய்கிறார்கள்இவர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு வரும் ரொக்க வருமானம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்.வி.ஐ.பி க்கள்.செல்வந்தர்கள்,தரும் நகை உள்ளிட்ட காணிக்கை இதில் சேராது இதுவரை அதிகப்படியான ஒருநாள் உண்டியல் வருமானம் இரண்டு கொடியே 58 லட்சம் ரூபாய்.
ஏழுமலையானை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து எத்தனையோ வி.ஐ.பி க்கள் வந்தாலும் தேவஸ்தான வட்டாரத்தில் பிரபலமான பக்தர்கள் சிலர் உண்டு.இவர்களில் ராஜமுந்திரியை சார்ந்த தொழில் அதிபர் ராஜு முக்கியமானவர்.செல்வம் கொழிக்கும் இவர் ஒருபோதும் விஐ.பி.கோட்டாவில் செல்ல மாட்டார்.பக்தர்களுடன் கலந்தே சென்று பெருமாளை தரிசிப்பார்.தரிசனம் முடிந்து இலவச சாப்பாட்டைதான் வாங்கி சாப்பிடுவார்.சில மாதங்களுக்கு முன்பு இலவச சாப்பாட்டு கூடத்தில் ராஜு சாப்பிட போக லேசான தள்ளு முள்ளு அன்னதான மண்டபத்தின் இடப்பற்றாக்குறையே இதற்க்கு காரணம்.இருந்தும் வரிசையில் நின்று பிரசாதம் வாங்கி உண்டு முடித்த ராஜு, நேராக தேவஸ்தான அலுவலகத்திற்க்கு சென்றார்.இடம் மட்டும் ஒதுக்குங்கள் பிரம்மாண்டமான அன்னதான மண்டபத்தை நான் கட்டிக்கொடுக்கிறேன்.என்றார்.அடுத்த அரை மணி ஏரத்தில் கோவிலுக்கு பக்கத்திலேயே தேவஸ்தானம் ஒரு இடத்தை காட்டியது.அந்த நொடியே 25 கோடி ரூபாய் தருவதாக சொல்லி காசோலையும் நீட்டினார் ராஜு.இப்போது அண்ணதான மண்டபம் தயாராகி கொண்டு இருக்கிறது.
இதுபோலவே ..தரிசனத்திற்க்கு ஆன்லைனில் பதிவு செய்யும் திட்டத்தை சுமார் நூறு கோடி ரூபாயில் செயல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்த நேரமது.அப்போது தரிசனத்திற்க்கு வந்த மெகா தொழிலதிபர் அனில் அம்பானி,மொத்த செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக சொல்லி விட்டு ஒருமணி நேரத்தில் தொகையை செட்டில் செய்தாராம்.
தொழில் அதிபர் விஜய் மல்லையா ஒவ்வொரு முறை தரிசனத்திற்க்கு வரும் போதும் உண்டியலில் செலுத்தும் தொகை 30 லட்சம் ரூபாய்.வாரம் தவறாமல் வந்து விடுகிறாராம்.
கர்னாடகா அரசியலை கலக்கும் ரெட்டி சகோதரர்கள் ,கடைசியாக அவர்கள் தரிசித்த போது கொடுத்த காணிக்கை 42 கோடி ரூபாய் மதிப்பிலான வைர கிரீடம்!
உண்டியலில் போடப்பட்டுள்ள தொகை தினமும் எண்ணப்பட்டு திருமலையில் திருமலையில் இருக்கும் 10 தேசிய வங்கிகளில் பிரித்து போடப்படுகிறது இலவச சாப்பாடு போட தனியாக 200 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது இதன் வட்டியில் இருந்து அன்னதானம் நடக்கிறது .
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 4 டன் தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது இதற்க்கு ஆண்டு வட்டியாக வங்கி தரப்பு ஒரு டன்னுக்கு 17 கிலோ தங்கத்தை கொடுக்கிறது ஏழுமலையான் ஆபரணங்கள் அனைத்தும் கோவில் வளாகத்திலேயே இருக்கும் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.இதன் மதிப்பு சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. கிருஸ்ண தேவராயர் கொடுத்த நகைகள்,வைரங்கள் விலை மதிக்க முடியாதவை.அவை இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு ,அவை பற்றிய குறிப்புகள் பதிவேடுகளில் இல்லை.ஆனால் பத்திரமாக இருக்கிறது என்பது மட்டும் உண்மை என்று கோவில் தரப்பில் சொல்லப்படுவதுதான் வினோதம்.
நன்றி-ஜூனியர் விகடன்
No comments:
Post a Comment