விமானம் ஓட்டும் பயிற்சி அளிப்பதற்காக திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் 5 குட்டி விமானங்கள்

திருச்சி,செப்.29&
திருச்சி விமான நிலையத்தில் விமானம் ஓட்டும் பயிற்சி அளிப்பதற்காக கொண்டு வரப்பட்ட 5 குட்டி விமானங்கள் தயார்நிலையில் உள்ளன.

விமானம் ஓட்டும் பயிற்சி நிலையம்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து அரபு நாடுகள், சிங்கப்பூர் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையட்டி பயணிகளின் வசதிக்காக திருச்சி விமான நிலையத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் புதிய டெர்மினல் கட்டப்பட்டது.
இந்நிலையில் தற்போது திருச்சி விமான நிலையத்தில் விமானம் ஓட்டும் பயிற்சி பெறுவதற்கான பயிற்சி நிலையமும் தொடங்கப்பட இருக்கிறது. ‘வீகேயென் ஏவியேசன் அகாடமிÕ என்ற நிறுவனம் இந்த பயிற்சி நிலையத்தை தொடங்குகிறது. இதற்காக விமான நிலைய வளாகத்தில் பயிற்சி விமானங்கள் நிறுத்துவதற்கான கூடாரம் (செட்) கட்டப்பட்டு உள்ளது.

தயார் நிலையில் குட்டி விமானங்கள்
இந்த பயிற்சி நிலையத்திற்காக அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட 5 குட்டி விமானங்களும் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. அவை நேற்று விமான நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. இந்த விமானங்கள் ஒவ்வொன்றும் தலா 4 இருக்கைகள் உடையவை ஆகும்.

விஜயதசமி விழாவையட்டி இந்த குட்டி விமானங்களுக்கு நேற்று காலை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. வீகேயென் ஏவியேசன் அகாடமியின் தலைவரும், தொழில் அதிபருமான வீகேயென் கண்ணப்பன் தலைமை தாங்கினார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் சவுண்டையா, கே.என்.சேகரன் எம்.எல்.ஏ, தொழில் அதிபர் கே.என். ராமஜெயம், பஞ்சாயத்து தலைவர் குடமுருட்டி சேகர், தில்லை மனோகரன், கவுன்சிலர் கண்ணன், வீகேயென் பாண்டியன், விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி தர்மராஜ், மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆணையர் நயினார் உள்பட அதிகாரிகள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் பயிற்சி நிலையத்தின் நிர்வாக இயக்குனர் கேப்டன் வீகேயென் ராஜா வரவேற்றார்.
திருச்சி விமான நிலையத்தில் துவக்கப்படவுள்ள பிளையிங் கிளப்பில் விஜயதசமியை முன்னிட்டு நேற்று சிறிய ரக பயிற்சி விமானங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு பூஜை போடப்பட்டது.


வி.கே.என்., சிவில் ஏவியேசன் நிறுவனம் சார்பில் திருச்சி விமான நிலையத்தில் பிளையிங் கிளப் துவக்கப்பட உள்ளது. இதற்கு திருச்சி விமான நிலையத்தின் (பழைய விமான நிலையம்) வடகிழக்கு மூலையில் சிறிய பயிற்சி விமானங்கள் நிறுத்துமிடம் மற்றும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. பிளையிங் கிளப்பில் விமான பயிற்சி அளிக்க கலிஃபோர்னியாவிலிருந்து ஐந்து சிறிய ரக விமானங்கள் கப்பல் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு பின் சரக்கு வாகனத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அடிப்படை பணிகள் முடிக்கப்பட்ட பின் முறைப்படி திருச்சி பிளையிங் கிளப் அக்டோபர் 21ம் தேதி தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.


இந்நிலையில், விஜயதசமியை முன்னிட்டு நேற்று பிளையிங் கிளப்பில் விமானங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு விஜயதசமி பூஜை நடந்தது. விழாவில், பிளையிங் கிளப் தலைவர் வி.கே.என்., கண்ணப்பன், இயக்குனர் ராஜா மற்றும் அமைச்சர் நேரு, விமான நிலைய கண்ட்ரோலர் தர்மராஜ், எஸ்.பி., கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பிளையிங் கிளப் செயல்பாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.


""பிளையிங் கிளப் அமைக்கப்படுவதன் மூலம் திருச்சியை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் �வட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பிளையிங் கிளப் மூலம் விமான பயிற்சி பெற சென்னைக்கு செல்ல வேண்டியதில்லை. திருச்சியிலேயே பயிற்சி எடுத்துக் கொண்டு சிறந்த விமானியாக முடியும்,'' என்றும் பிளையிங் கிளப் நிர்வாகிகள் கூறினர்.
thanks to http://www.trichyportal.com/forum/viewtopic.php?f=3&t=46&start=90
விமானம் ஓட்டும் பயிற்சி அளிப்பதற்காக திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் 5 குட்டி விமானங்கள்SocialTwist Tell-a-Friend

No comments: