THANKS TO http://www.inneram.com/2011022113690/premananda-died
சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல சாமியார் C காலமானார்.திருச்சியை அடுத்த பாத்திமா நகரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா. பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு 95ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
பிரேமானந்தாவுக்குப் புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இரட்டை ஆயுள் தண்டனையையும் தனித்தனியாக அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. கடலூர் சிறையில் 10 ஆன்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வந்தார்.
தண்டனை ரத்து செய்ய மேல் முறையீடு செய்தார். ஆனால் கீழ் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்டது.
கடந்த சில நாள்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த பிரேமானந்தா, சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று நண்பகல் அவரது உயிர் பிரிந்தது.


No comments:
Post a Comment