தீருவில் சதுக்கத்தில் ஈழத்தாயின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி - நாளை மாலை தகனம்

THANKS TO http://www.tamilwin.com/view.php?222CQjH3bcdT92qb4e0cIBB402dRpGsbdd0aGpX4202VLLSk2e4cC293ecbe5jQec2
[ திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011, 02:56.08 AM GMT ]
நேற்று இயற்கை எய்திய பார்வதியம்மாளின் பூதவுடல் தீருவில் சதுக்கத்தில் நேற்று மாலை 5 மணி முதல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஊர்மக்கள் தொடர்ச்சியாக வந்து அஞ்சலி செலுத்தினர். பேரன்னையின் இறுதிக் கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளன.

பார்வதி அம்மாளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கறுப்புக் கொடிகளைக் கட்ட வேண்டாம். அஞ்சலி செலுத்தும் சுவரொட்டிகளில் பிரபாகரனின் பெயரைப் பாவிக்க வேண்டாமென இராணுவத்தினர் கடுமையாக உத்தரவிட்டுள்ளனர் என யாழ். மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நேற்றுத் தெரிவித்தார்.

இராணுவத்தினரின் உத்தரவையும் மீறி, மக்கள் வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுள்ளனர். பிரபாகரன் பெயரைக் கொண்ட அஞ்சலி சுவரொட்டிகளை இராணுவத்தினர் இளைஞர்களைக் கொண்டு அகற்றி வருகின்றனர்.
அஞ்சலி சுவரொட்டிகளில் பிரபாகரன் பெயரைப் பாவிக்க வேண்டாம் எனவும், "வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள்" எனப் பாவிக்கும்படியும் இராணுவத்தினர் பணித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தீருவில் சதுக்கத்தில் ஈழத்தாயின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி - நாளை மாலை தகனம்SocialTwist Tell-a-Friend

No comments: