லிபியா கலவரத்தில் மேலும் ஒரு நெ‌ல்லை தமிழர் பலி

லிபியா‌வி‌ல் நடந்து வரும் கலவரத்தில் சிக்கி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு த‌மிழர் பலியா‌கியு‌ள்ளா‌ர்.

நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா தலைவன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா (40), ஆலங்குளம் தாலுகா நாகல்குளம் அசோக்குமார் (24) உள்பட சுமார் 30 பேர் லிபியா நாட்டுக்கு வேலைக்கு சென்றனர்.

அவர்கள் அங்குள்ள மின் கோபுரங்கள் காற்றாலைகள் அமைக்கும் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். அந்த நிறுவனத்தின் கூடாரங்களில் தங்கி வேலைக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்த கூடாரத்தை ஒரு கும்பல் சுற்றி வளைத்தனர்.

அப்போது கலவர கும்பல் குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் தலைவன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா சிக்கி உயிரிழந்தார்.

இ‌தி‌ல் படுகாய‌ம் அடை‌ந்த ஆலங்குளம் தாலுகா நாகல்குளத்தைச் சேர்ந்த அசோக்குமார் (24) அ‌ங்கு‌ள்ள மரு‌த்துவமனை‌யி‌ல் சிகிச்சை பெற்று வந்தார். நே‌ற்று அவ‌ர் சிகிச்சை பலனின்றி உ‌யி‌ரிழ‌ந்தா‌ர்.

அசோக்குமார் இறந்த தகவல் நாகல்குளத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் காயம் அடைந்த களப்பாகுளம் முத்துக்குமார் தொட‌ர்‌ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இத‌னிடையே ‌லி‌பியா‌வி‌ல் உ‌ள்ள த‌ங்க‌ள் ‌பி‌ள்ளைகளை உடனடியாக ‌மீ‌ட்க வே‌ண்டு‌ம் எ‌ன்று பெ‌ற்றோ‌ர்க‌ள் ம‌‌த்‌திய, மா‌நில அரசுகளை கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர்.
THANKS TO http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1102/25/1110225004_1.htm
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு நெ‌ல்லை தமிழர் பலிSocialTwist Tell-a-Friend

No comments: