‘மக்கள் புத்திசாலிகள். தெளிவாக வாக்குப் போடுபவர்கள்’ என்பன போன்ற பழம் ஜனநாயகக் கதைகள் மூலம் இந்த முடிவுகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை. இம்முடிவுகளை உதிரியாகப் பல செய்திகளாகவும் சிந்தனைகளாகவும்
முன்வைத்து அவற்றிலிருந்து ஒரு சித்திரம் உருவாகிறதா எனப் பார்க்கலாம்.
READ MORE...
நன்றி : tamilskynews
பாராளுமன்றத் தேர்தலின் தமிழக முடிவுகள் பொதுவாகத் தமிழக அறிவாளி வர்க்கத்திடமும் உலகத் தமிழர்களிடமும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏமாற்றத்தையும் கசப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
‘மக்கள் புத்திசாலிகள். தெளிவாக வாக்குப் போடுபவர்கள்’ என்பன போன்ற பழம் ஜனநாயகக் கதைகள் மூலம் இந்த முடிவுகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை. இம்முடிவுகளை உதிரியாகப் பல செய்திகளாகவும் சிந்தனைகளாகவும்
முன்வைத்து அவற்றிலிருந்து ஒரு சித்திரம் உருவாகிறதா எனப் பார்க்கலாம். பெரும்பான்மையான அறிவுஜீவிகளின் ஏமாற்றத்திற்குக் காரணம் தமிழகம் / இந்தியா சார்ந்த காரணிகள் அல்ல. ஈழப் பிரச்சனையில் கருணாநிதியின் துரோகத்திற்கு உரிய தண்டனையை மக்கள் வழங்கவில்லை என்பதே. ஈழப் பிரச்சனை தமிழக மக்களைப் பாதிக்கவில்லை எனக் கூற முடியாது. அவர்களது கொந்தளிப்பான மனநிலைக்குப் பல சான்றுகள் உண்டு. இப்பிரச்சனையைக் கையாண்ட விதம் பற்றி காங்கிரஸ்மீதும் கருணாநிதிமீதும் கணிசமான கோபம் இருந்தது.
இந்திய அரசின் ஆதரவும் ஊக்குவிப்பும் இன்றி இலங்கை அரசு புலிகளை அழித்திருக்க முடியாது. புலிகள் பிரதேசத்திலும் பின்னர் ‘பாதுகாப்பு வளையத்திலும்’ படுகொலைகளை நடத்தியிருக்க முடியாது. இந்திய அரசின் குறி புலிகள் இயக்கம் மட்டும்தான் எனக் கொண்டால், போருக்கு ஒத்திசைவு வழங்கும் முன்னர் தமிழ் மக்கள் பாதுகாப்பிற்கும் அரசியல் தீர்வுக்கும் முதலில் வழிகோலியிருக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் படுகொலை பற்றியோ சிங்கள இனவாதத்தின் முன்னர் அவர்கள் எதிர்காலம் இருண்டு கிடப்பதைப் பற்றியோ உலகளாவிய அளவில் வெளிப்படும் கவலையும் கண்டனங்களும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கு இல்லை.
ராஜீவ் காந்தி படுகொலை என்ற புலிகளின் மூடத்தனத்திற்கு எதிர்வினையாகத் தமிழ் மக்களைப் பழிவாங்கத் துணைநிற்கும் இந்திய அரசை மன்னிக்க முடியாது. அந்த அரசு கருணாநிதியின் ஆதரவுடனேயே இதைச் செய்ய முடிந்தது. கருணாநிதியின் சாக்கு ‘திமுக அரசை இழப்பதால் என்ன பயன்?’ என்பது. இரண்டு அடிப்படையான செய்திகளைக் குறிப்பிடலாம்.
‘இந்திய அரசு பெரும் பாவத்தைச் செய்தது, ஆனால் அதில் எரண்டாவதாக, இடதுசாரிகள் வெளியேறிய பின்னர் கருணாநிதியின் ஆதரவு இன்றி இந்த அரசு நிலைத்திருக்க முடியாது.
தமிழக ஆட்சியை இழக்கக் கருணாநிதி தயார் என்ற செய்தி தில்லியை எட்டியிருந்தால் அவர்கள் அணுகுமுறையை மாற்றியிருக்க முடியும். ஆனால் அத்தகைய சந்தேகத்தின் ஒரு அணுகூடத் தில்லியில் ஏற்படவில்லை. கருணாநிதி குடும்பத்தைப் பற்றிய அவர்கள் புரிதல் முழுமையானது. குடும்பத்தினருக்குப் பதவி வழங்குவதற்காகத் தில்லி சென்று பேரம் பேசிய கருணாநிதி, ஈழத் தமிழர்களுக்கு ஆவனசெய்ய ஒரு முறைகூடத் தில்லி செல்லவில்லை. ஈழப் பிரச்சனை அவலத்தின் உச்சியிலிருந்தபோது படுக்கையில் இருந்த கருணாநிதியின் உடல்நிலை, குடும்பத்தினருக்கு அமைச்சரவையில் இடம்பிடிக்கத் தில்லி சென்றபோது திடீர் முன்னேற்றம் கண்டது புரியாத புதிர் அல்ல. நாடகத்தின் அடுத்த காட்சி அது.
கருணாநிதியின் இந்தத் தமிழினத் துரோகத்தால் தமிழினத் தலைவர் என்ற அடைமொழியை அவர் இழக்கவும் உலகத் தமிழர்கள் கண்டனத்திற்கும் சாபத்திற்கும் அவர் ஆளாகவும் நேர்ந்துள்ளது. ‘தினமணி’ தலையங்கத்தில் (19.05.09) குறிப்பிட்டது போல, “மத்திய அரசில் அமைச்சராக உறுதிமொழியேற்றிடும் ஒவ்வொரு தமிழக அமைச்சரின் கையொப்பத்திலும் இலங்கைத் தமிழரின் கரிய ரத்தம் கசிந்திருக்கும். மையின் ஒவ்வொரு துளியிலும் இலங்கைத் தமிழரின் முகம் இருக்கும்.
” ‘தினமணி’ தலையங்கத்திற்குப் பிறகு தில்லியில் நடந்தேறிய ஈனத்தனமான காட்சிகள் கருணாநிதி பலிகொடுத்தது ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, தமிழகத் தமிழர்களின் தன்மானத்தையும்தான் என்பதைத் தெளிவுபடுத்தின. குடும்பத்தின் பல உறுப்பினர்களுக்கும் கழகத்தின் ஊழல் கண்மணிகளுக்கும் இடம் கேட்டுக் கருணாநிதி தில்லியில் மன்றாடிய காட்சியைப் பார்த்து இந்தியா எள்ளி நகையாடியது.
சுதந்திர இந்தியாவில் தமிழனின் சுய மரியாதையைக் கருணாநிதியின் குடும்பத்தைப் போல எவரும் சீரழித்தது இல்லை. உதாரணத்திற்கு ஒரே ஒரு வாசகர் கடிதம் மட்டும். “மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் தேர்தலுக்கு முன்னரே கருணா நிதிக்கு எத்தனை மனைவிகள், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ப அமைச்சரவையில் அவர்களுக்கு இடம் ஒதுக்கியிருக்க வேண்டும்.” - கர்னல் எம்.என்.எஸ். நம்பி (ஓய்வு), திருவனந்தபுரம் - (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, மே 23, 2009).
புலிகள்மீதான இறுதி வெற்றி அறிவிக்கப்பட்டுப் புலிகள் தலைமையின், குறிப்பாக பிரபாகரனின் உடல் தொலைக்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டபோது கருணாநிதி தன் குடும்பத்தினருக்கு அமைச்சரவையில் இடம் வேண்டி தில்லியில் மன்றாடிக்கொண்டிருந்தார். அவர் தனது 6 மணிநேர உண்ணாவிரதத்தின் வழி ஈழத்தில் ஒரு தமிழனையும் காப்பாற்ற முடியவில்லை.
அந்த உண்ணாவிரதத்தின் உண்மையான அறிவிக்கப்படாத கோரிக்கை என்னவென்பது இப்போது தெளிவு. புலிகளின் அழிவையும் பிரபாகரனின் முடிவையும் தேர்தலுக்கு முன்னர் நிகழ்த்தக் கூடாது என்பதுதான் அவருடைய அசல் கோரிக்கை. தில்லியில் அடுத்த ஆட்சி பற்றிய செய்திகள் தெளிவுபெற்றதும் இறுதித் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது சிங்கள ராணுவம். தமிழ்ச்செல்வனின் மரணத்திற்குக் கண்ணீர்க் கவிதை புனைந்த கருணாநிதிக்குத் தில்லியில் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தும் துணிச்சல் இல்லை. அவர்¢ வாங்கச் சென்றிருக்கும் வெள்ளிக் காசுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டால் என்ன செய்வது?
தேர்தலில் புலி ஆதரவு இயக்கங்கள் படுதோல்வி கண்டுள்ளன. திமுக வென்ற பாராளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திமுக மற்றும் அதிமுக வாக்காளர்களின் புலிகள் தொடர்பான நிலைப்பாடுகள் பற்றி, தமிழகத் தேர்தல் முடிவுகளை ணிஜ்வீt ஜீஷீறீறீ மூலம் ஓரளவுக்குச் சரியாகக் கணித்த ஜோகேந்திர யாதவ், ஆய்வுசெய்தார்.
புலிகள் இயக்கத்திற்கும் தனி ஈழப் போராட்டத்திற்கும் ஆதரவு அனுதாபம் கொண்ட வாக்காளர்கள் பாரம்பரியமாகவே அதிமுகவைவிடத் திமுகவில் அதிகம். திமுக வாக்காளர்களில் புலி ஆதரவாளர்கள் பெருமளவுக்கு இம்முறையும் திமுகவுக்கே வாக்களித்துள்ளனர் என்பது அவர் ஆய்வு முடிவு. திமுகவின் தீவிர ஆதரவாளர்களில் சிறுபகுதியினர் திமுகமீது வெறுப்புக்கொண்டு, இம்முறை திமுகவைப் புறக்கணித்தனர் என்பதையும் வேறொரு ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது.
எனினும் பெருவாரியான திமுக வாக்காளர்களை அது பாதிக்கவில்லை. திமுகவின் நிலைப்பாடு பற்றிய கோபம், வருத்தம் அவர்களுக்கு இருந்திருக்கலாம், ஆனால் அதற்கான மாற்றாகப் பிரதான எதிர்க் கட்சிகளான அதிமுகவையோ தேமுதிகவையோ அவர்கள் காணவில்லை. ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாத ஈழ ஆதரவு நிலைப்பாடு எடுபடவில்லை. ஜெயலலிதாவிடம் ஜனநாயக அரசியல் செயல் பாடுகள் எதுவும் இல்லை. தேர்தல் காலப் பேரங்கள், கூட்டணிகள், பிரச்சாரங்களின் மூலம் ஆட்சிக்கு வந்துவிட முடியும் என நம்புபவர் அவர். அவரது ஒரே நம்பிக்கை கருணாநிதி குடும்பத்தினரின் அராஜகங்களின் முன்னர் மக்கள் தனது முந்தைய அராஜகங்களை மறந்துவிடுவர் என்பதுதான்.
கடந்த 20 ஆண்டுகளாக ஈழ ஆதரவு இயக்கம் ஒன்று தமிழகத்தில் இயங்கி வருகிறது. இன்றுவரை ஒரு சட்டசபைத் தொகுதியில் தனித்து வெற்றிபெறும் ஆற்றல் அதற்கு இல்லை. ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு என்பது தமிழகத்தில் மக்கள் பணியில் ஆழ வேரூன்றிய நிலையில் இருந்து வெளிப்பட வேண்டும். மாறாக ஈழத் தமிழர்களுக்காகத் தமிழக - இந்திய நலன்களை விலை பேசுபவர்களால் இங்கு ஆதரவு பெற முடியாது. தமிழகத்தில் தமிழ்த் தேசியவாதம் பேசுபவர்கள் பாரதிய ஜனதாக் கட்சியின் இந்துத்துவத்தையும் சாதி அடிப்படையில் ஜெயலலிதாவையும் முழுமையாக எதிர்ப்பவர்கள். ஆனால் ஈழத் தமிழர் நலன் கருதி மத்தியில் பாஜகவும் மாநிலத்தில் அதிமுகவும் வெற்றிபெற வேண்டும் என்று இந்தத் தேர்தலில் விரும்பினர். இத்தகைய சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள் அவர்களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தியே நிறுத்தியுள்ளன.
இந்தியப் பிரதமர்களில் தமிழக மக்களுக்கு மிக நெருக்கமாக இருந்தவர் ராஜீவ் காந்தி. தமிழகத்திற்கு அவர் வருகைதந்த அளவிற்கு வேறு எந்த மாநிலத்திற்கும் அவர் செல்லவில்லை. இங்கு பெற்ற வரவேற்பை வேறு எங்கும் அவர் பெறவில்லை. ஜெயவர்த்தனேவுடன் உடன்படிக்கையில் ஈழத் தமிழர் பிரதிநிதியாக ராஜீவ் காந்தி கையெழுத்திட்டது, இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பிப் புலிகளை அழிக்க முயன்றது, அமைதிப் படையினரின் சொல்லொணாக் குற்றங்களுக்கு மௌன சாட்சியாக இருந்தது எனப் பல கடுமையான குற்றங்களை ராஜீவ் காந்திமீது சாட்ட முடியும். இருப்பினும் தமிழகத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டமை புலிகளை நிரந்தரமாகத் தமிழக மக்களிடமிருந்து அந்நியப்படுத்திவிட்டது.
ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தினர் ஈழத் தமிழர்களின் மனித உரிமை, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை முன்வைத்துப் பொது இயக்கம் ஒன்றைக் கட்டி எழுப்பியிருக்க வேண்டும். மாறாக ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்தியும் இந்திய இறையாண்மைக்கு எச்சரிக்கை விடுத்தும் ராணுவத்தைத் தாக்கியும் மேற் கொண்ட வன்முறையைத் தூண்டும் தீவிரவாதப் பேச்சுக்களையும் செயல்களையும் மக்கள் நிராகரித்துள்ளனர். இன்று ஈழத்தில் பேரழிவு நிகழ்ந்துவிட்டது. இங்கு வீர வசனங்களும் ஆண்மை முழக்கங்களும் சபதங்களும் எச்சரிக்கைகளும் தெருக்களில் சிதறிக்கிடக்கின்றன. தேர்தல் முடிவிலிருந்து எந்தப் பாடத்தையும் தமிழ்த் தேசியவாதிகள் கற்கவில்லை என்பதற்கு 21.05.09 அன்று சென்னையில் நடந்த ‘அமைதிப் பேரணி’யில் தன்னிச்சையாக எழுப்பப்பட்ட முழக்கங்கள் சாட்சி. உதாரணத்திற்கு ஒன்று: “ராஜீவ் செத்தது போதாதா! ராகுலும் சாக வேண்டுமா!.”
அதே நேரத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை தமிழக மக்களைப் பாதித்தாலும் அதைத் தேர்தல் பிரச்சனையாக மக்கள் பார்க்கவில்லை என்பதை ஏற்பதற்கு இல்லை. அவ்வாறெல்லாம் தெளிவான மனப்பாகுபாடுகளோடு யாரும் செயல்பட முடியும் என்று தோன்றவில்லை. பழ. நெடுமாறனின் கருத்து ஓரளவிற்கு ஏற்கக் கூடியது. “ஈழப் பிரச்சனையில் தவறு செய்த காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், மணிசங்கர் ஐயர், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு ஆகியோர் மோசமான தோல்வியைத் தழுவினார்கள். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் சர்ச்சைக்குரிய வெற்றியைத்தான் ப. சிதம்பரமும் பெற முடிந்தது. காங்கிரஸ் வெற்றிபெற்ற ஒன்பது தொகுதிகளில் காஞ்சிபுரம், கடலூர், சிவகங்கை, தேனி, விருதுநகர், நெல்லை ஆகிய தொகுதிகளில் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்” (‘ஆனந்த விகடன்’, 27.05.09). (‘கொங்கு முன்னேற்றக் கழகம்’ சில தொகுதிகளில் காங்கிரஸ் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கக்கூடும்.) மேற்படி தொகுதிகளில் பல குழுக்களாக ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டனர். அது தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் ‘ஈழம் அமைப்பேன்’ சவடாலும் ஆண் சிங்கங்களின் முழக்கங்களும் எதிர்மறை விளைவை ஏற்படுத்தின என்பது என் கணிப்பு.
இந்திய தேசிய விடுதலை இயக்கத்தில் துவக்க காலம் முதல் தேசியத்தைப் பற்றிக் கடுமையான விமர்சனங்களை ரவீந்திரநாத் தாகூர் முன்வைக்கத் துவங்கினார். காந்தியும் நேருவும் பிற தலைவர்களும் அவரை இகழவில்லை. ஆங்கில அடிவருடியாகச் சித்தரிக்கவில்லை. துரோகிப் பட்டம் சூட்டவில்லை. மாறாக, அவரது அக்கறைகளை மதித்தனர். ஆங்கிலேயர்மீதான வெறுப்பாக இந்தியத் தேசியம் உருவாகாது என அவருக்கு உறுதியளித்தனர். அவரது எச்சரிக்கைகளை உள்வாங்கி இந்திய தேசியத்தைக் கட்டமைத்தனர். காங்கிரஸ் இயக்கம் தாகூருக்குப் பாராட்டையும் ஆதரவையும் மட்டுமே வழங்கியது வரலாறு. காங்கிரஸ் முன்வைத்த இந்திய தேசியத்தோடு முரண்பட்ட சவார்க்கர், அம்பேத்கர், ஜின்னா, நேதாஜி, பகத்சிங், பெரியார் ஆகியோரைக் காங்கிரஸ் எதிர்கொண்ட முறை பற்றிய விமர்சனங்கள் உண்டு. ஆனால் அதில் வன்முறைக்கோ அழித்தொழிப்பிற்கோ இடமிருந்ததில்லை.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எழுத, பேச, இயங்க இங்கு எந்தத் தடையும் இல்லை. இந்திய தேசத்திற்கு விரோதமாகப் பேசியதாலும் கருணாநிதியின் அரசியலாலும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சில கைதுகள் நடந்தன. அது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஈழத் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும், கருணாநிதியை வன்மையாகக் கண்டிக்கும் ‘கலைஞர் - ஒரு தமிழினக் கொலைஞர்’, ‘புதிய பராசக்தி’, ‘மனோகரா’ போன்ற ஒளித்தட்டுகளை மக்களிடம் போட்டுக்காட்ட உயர் நீதிமன்ற அனுமதி பெற முடிந்தது. மக்கள் தொலைக்காட்சி அதை ஒளிபரப்பியது.
இத்தோடு ஒப்பிடக்கூடிய அரசை மட்டுமல்ல எந்த ஒரு ஜனநாயக அமைப்பையும் தமிழ்த் தேசியம் தன் வரலாற்றில் உருவாக்கியது இல்லை. பாசிசத்தின் சாயைகளுடனேயே தமிழ்த் தேசியம் பிறந்து இன்றுவரை செயல்படுகிறது, தமிழகத்திலும் அப்பாலும்.
தமிழகத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்குப் பாதக மானவையாக அமையும் என்பது பத்திரிகையாளர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள், கருத்துக்கணிப்புகளின் ஒட்டுமொத்த முடிவாக இருந்தது. அந்நிலை கடைசி நாட்களில் மாறத் துவங்கியது. பற்பல இடங்களிலிருந்தும் பெருமளவுக்குப் பணப் பட்டுவாடா நடைபெறுவதை அறிய முடிந்தது. சில இடங்களில் - உதாரணமாக விருதுநகர் - வைகோவைத் தோற்கடிக்கப் பெருந்தொகை பட்டுவாடா செய்யப்பட்டது. முன்னர் இடைத்தேர்தல்களில் மட்டுமே சாட்டப்பட்ட பணப் பட்டுவாடா குற்றச்சாட்டுகள் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு வந்ததாகத் தேர்தல் ஆணையர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அகில இந்திய அளவில் வேறு எங்கும் இல்லாதவாறு தமிழகத்தில் மட்டுமே தேர்தல் முறைகேடுகள் பற்றிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை, விருதுநகர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் எதிர்க்கட்சியினர் தேர்தல் முடிவுகளுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தேர்தல் கமிஷன் பெருமளவுக்கு நியாயமான தேர்தலை நடத்த எல்லா முயற்சிகளையும் மேற் கொண்டது. எனினும் பற்பல முறைகேடுகள் பற்றிய தகவல்களும் சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளன.
முறைகேடுகள், பணம் கொடுத்தல் எதுவும் இந்தியத் தேர்தலுக்குப் புதிது அல்ல. எனினும் அவை தனித் தொகுதிகளில் முடிவை மாற்றி அமைத்தாலும் ஒரு தேர்தலின் ஒட்டுமொத்தப் போக்கை மாற்றி அமைத்தது இல்லை. அவ்வாறு விஞ்ஞானரீதியான பணப் பட்டுவாடா, முறைகேடுகள், திட்டமிட்ட செயல்பாடு ஆகியவற்றால் மாநில அளவில் தோல்வியைத் தவிர்த்து வெற்றியை விலைக்கு வாங்கிய முதல் இந்திய நிகழ்வாகத் திமுகவின் இந்த வெற்றியைக் கணிக்கலாம்.
திமுகவின் பெருவாரியான பணப் பட்டுவாடா பற்றி எதிர்க் கட்சிகள் பெரிய எதிர்ப்பு எதையும் காட்டவில்லை. தமது தகுதிக்கு ஏற்ப எல்லாக் கட்சிகளுமே பணம் கொடுத்தன. ஸ்பெக்ட்ரம், சேது சமுத்திரம் ஆகியவற்றால் கொழுத்திருக்கும் திமுக அளவிற்குப் பணம் அவற்றிடம் இப்போது இல்லை என்பதும் பணப் பட்டுவாடா செய்ய சீரிய முறைமையைத் திமுகவைப் போல அவற்றால் உருவாக்க முடியவில்லை என்பதும் மட்டுமே வேறுபாடு. தமிழகத்தைப் போல இத்தகைய பணப்பட்டுவாடா கலாச்சாரம் இந்தியாவில் வேறு எங்கும் அழுத்தமாக வேரூன்றவில்லை. கட்சிப் பணியாளர்களிடம் பேசியபோது, பிரச்சாரத்திற்குச் செல்கையில் பொதுமக்கள் ‘கவர் இல்லையா?’ எனக் கேட்பதும் பேரம் பேசுவதும் இங்கு சகஜமாகிவிட்டது எனக் குறிப்பிட்டனர்.
அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர். நல்லகண்ணு, “தேர்தலில் ஜனநாயக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. குறிப்பாகத் தமிழ்நாட்டில் தேர்தல் விதிமுறை மீறல் அதிகம். அரசியல் சூழ்ச்சி மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்குப் பணம் கொடுத்துத் தேர்தலை நடத்தியுள்ளனர். வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் தெரிந்த பிறகும்கூட முடிவுகள் மாற்றப்பட்டுள்ளன. தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றிய தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் இதைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் திமுக கூட்டணிக் கட்சியினர் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டனர்” (‘தினமணி’, 21.05.09) எனக் குறிப்பிட்டுள்ளார்.
வட இந்தியாவில் முன்னர் ஜனநாயக முறைமையில் பின்தங்கிய நிலை இருந்தது. இன்று தேர்தல் சீர்கேடுகள் அங்கு பெருமளவிற்குக் குறைந்துவிட்டன. பெரும்பாலான முதலமைச்சர்கள் நிர்வாகத்திறன் கொண்டவர்களாகவும் கை சுத்தமானவர்களாகப் பொதுமக்களால் மதிக்கப்படுபவர்களாகவும் உள்ளனர். வளர்ச்சித் திட்டங்கள், நிவாரண நடவடிக்கைகள் மூலம் பொது மக்களின் மதிப்பைப் பெற்றுத் தேர்தலில் வெற்றிபெறுகின்றனர். தமிழகத்தைப் போன்ற ஒரு கேடுகெட்ட நிலை இந்தியாவில் வேறு எங்கும் இல்லை.
ஈழப் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டையும் தமிழக அரசியல்வாதிகளின் நாடகங்களையும் ஈழத்து நண்பர்கள் குறைசொல்லும்போது இதுவரை தமிழக மக்களின் மெய்யான உணர்வுகளை நாம் முன்னிறுத்திப் பேச முடிந்தது. திமுகவால் விலைக்கு வாங்கப்பட்ட இந்த வெற்றியின் வழி தமிழ்ச் சமூகத்தையே அவர்கள் பழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விலை போகும் சமூகம் பழிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். தமிழினத் தலைவர் தமிழக மக்களுக்கு வழங்கியுள்ள வரலாற்றுப் பரிசாக இதைக் கொள்ளலாம்.
தேர்தலில் பெறப்பட்ட வாக்குகளைப் பார்க்கும்போது தேமுதிக பற்பல தொகுதிகளில் வெற்றி தோல்வியைப் பாதித்திருக்கிறது. அரசு எதிர்ப்பு வாக்குகளை அது அதிகம் பெற்றிருக்கும் என்பதிலிருந்தும், ‘கறுப்பு எம்ஜியா’ரின் வாக்காளர்கள் அதிகமும் அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் என்பதையும் கவனிக்கும்போது அதிகமும் அதிமுக வேட்பாளர்களே தேமுதிகவினால் தோல்வியைத் தழுவியுள்ளார்கள் என்பது உறுதி. இருப்பினும் திமுக தேர்தலில் தோல்வியைத் தழுவும் எனக் கணித்த மதிப்பீடுகள் தேமுதிகவையும் கணக்கில்கொண்டு செய்யப்பட்டவைதான். தேமுதிக ஓட்டைப் பிரித்தாலும் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் தோற்கடிக்கப்படும் என்பதே பரவலான ஊகமாக இருந்தது. அந்த ஊகம் வரலாறு காணாத பணப் பட்டுவாடா மூலம் சிதறடிக்கப்பட்டது. தமிழகம் திருமங்கலமானது.
n
திராவிட இயக்கத்திலிருந்து தோன்றிய திமுக எட்டியிருக்கும் இன்றைய நிலையைப் பார்க்கும்போது ஜார்ஜ் ஆர்வல்லின் ‘விலங்குப் பண்ணை’ (Animal Farm) நாவல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அந்த நாவலின் கதைச்சுருக்கம் இதுதான். ‘மேனர்’ பண்ணையில் பல விலங்குகள் பண்ணையார் ஜோன்ஸ் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் வசிக்கின்றன. அந்தப் பண்ணையில் வசிக்கும் மேஜர் என்ற மூத்த பன்றிக்கு விலங்குகள் மனிதர்களிடமிருந்து விடுதலை பெறுவது பற்றிய சிந்தனை ஏற்படுகிறது. எல்லா விலங்குகளையும் அழைத்துத் தன் சிந்தனைகளை மேஜர் பகிர்ந்துகொள்கிறது. மேஜர் இறந்த பின்னர் அவர் சிந்தனையால் தாக்கம் பெற்ற விலங்குகள் பண்ணையார் ஜோன்ஸ் குடும்பத்தினரை விரட்டிவிட்டுப் பண்ணையைத் தாமே நடத்துகின்றன. மேனர் பண்ணை விலங்குப் பண்ணையாகிறது. விலங்குகளில் புத்திக்கூர்மை கொண்டவையான பன்றிகளே நிர்வாகத்தைக் கையிலெடுக்கின்றன.
ஏழு கட்டளைகள் எழுதி வைக்கப்படுகின்றன.
1. இரண்டு காலில் நடப்பவை எதிரிகள்.
2. நான்கு கால்களுடையதும் இறக்கைகள் உடையனவும் நண்பர்கள்.
3. விலங்குகள் உடையணியக் கூடாது.
4. விலங்குகள் படுக்கையில் படுக்கக் கூடாது.
5. விலங்குகள் மது அருந்தக் கூடாது.
6. விலங்குகள் பிற விலங்குகளைக் கொல்லக் கூடாது.
7. எல்லா விலங்குகளும் சம அந்தஸ்து உடையவை.
நெப்போலியன் என்ற பன்றி நாய்க் குட்டிகளைத் தத்தெடுத்துத் தனது விசுவாசிகளாக, வேட்டை நாய்களாக வளர்த்துப் போட்டியாளர்களை விரட்டியும் மிரட்டியும் பண்ணையில் மேலாதிக்கம் பெறுகிறது. முதல் ஆறு கட்டளைகள் அனைத்தும் மீறப்படுகின்றன. நெப்போலியன் அவற்றை மீறும்போது கட்டளைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. பன்றிகள் இறுதியில் இரண்டு கால்களில் நடக்கத் துவங்குகின்றன. அப்போது இறுதிக் கட்டளை இவ்வாறு மாற்றப்படுகிறது - “எல்லா விலங்குகளும் சம அந்தஸ்து உடையவை. ஆனால் சில விலங்குகள் பிறவற்றைவிட அதிக அந்தஸ்துகொண்டவை.”
அக்கம்பக்கத்துப் பண்ணைக்காரர்கள் - மனிதர்கள் - பன்றிகளுடன் உறவாட, விருந்துண்ண வருகின்றனர். பண்ணை வீட்டினுள் நடக்கும் விருந்தைப் பிற விலங்குகள் வெளியில் நின்று ஜன்னல்வழிப் பார்க்கின்றன.
நாவலின் கடைசி வரி இது : “ஜீவராசிகள், பன்றிகளிலிருந்து மனிதர்களையும் பின்னர் மனிதர்களிலிருந்து பன்றிகளையும் மீண்டும் பன்றிகளிலிருந்து மனிதர்களையும் மாற்றி மாற்றிப் பார்த்தன. எது பன்றி எது மனிதன் என வேறுபடுத்துவது கடினமாகிக்கொண்டிருந்தது.”

No comments:
Post a Comment