: அமெரிக்காவிற்கு படிக்க செல்லும் மாணவர்கள் விசா நேர்முகத்தேர்வின்போது பொய்யான தகவலை கொடுக்கக் கூடாது. அப்படி பொய்யான தகவலை கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க தூதரக விசா அதிகாரி ஆரியன் ஹாவர்ட் .தெரிவித்துள்ளார் CLICK HERE FOR READ MORE...
அமெரிக்காவில் கல்வி பயில்வதற்கு செல்லும் மாணவர்களுக்கு ''விசா நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? " என்ற ஆலோசனை நிகழ்ச்சிக்கு யுஎஸ்ஐஇஎப் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இதில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் விசா பிரிவு அதிகாரி பேசினார்.
''அமெரிக்காவில் படிப்பதற்கான விசாவை பெற வேண்டும் என்பவர்கள் குறைந்தது 4 மாதங்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
சிறிது கால இடைவேளி இருக்கும்போது விசாவிற்கு விண்ணப்பித்தால் விசா கிடைக்காமல் போகும்.
விசா பெற முதலில் எச்டிஎப்சி வங்கிக்கு பணம் செலுத்த வேண்டும்.
அங்கு பார்கோடு என்ற எண்ணை கொடுப்பார்கள்.
அதை வைத்து இணைய தளம் மூலம் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
விசா நேர்முகத்தேர்வுக்கு வரும்போது அழைப்புக் கடிதம்,பார்கோர்டு எண்,சேவைக் கட்டணம் (200 அமெரிக்க டாலர்) கட்டியதற்கான ரசீது போன்றவற்றை தவறாமல் கொண்டுவர வேண்டும்.
மாணவர்கள் (டிகிரி சர்டிபிகேட்)பட்டச் சான்றிதழ் மட்டுமல்லாமல் அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களையும் கொண்டு வருவது நல்லது.
தங்களது கல்விக்கான கட்டணத்தை செலுத்த போதிய நிதிவசதி உள்ளது என்பதற்கான ஆதாரங்களையும் அவர்கள் காண்பிக்க வேண்டும்.
அமெரிக்காவிற்கு படிக்க செல்பவர்கள் அங்கு வேலை செய்யக்கூடாது.
கல்வி நிலைய வளாகத்திற்குள் பகுதி நேர வேலை செய்யலாம்.
நேர்முகத் தேர்வுக்கு வருவோர் தங்கள் விண்ணப்பத்திலும் நேர்முக அதிகாரியிடமும் சரியான விவரங்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும்.
பொய்யான தகவல்களை தெரிவித்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்படும்", என்று அவர் கூறினார்.

No comments:
Post a Comment