
சென்னையில் ஒரு உசிலம்பட்டி. இப்படி தான் தோணியது படம் பார்த்த அந்த நடுநிசிப் பொழுதில்.
திண்டுக்கல்லிலிருந்து வத்தலகுண்டு வழியாக உசிலம்பட்டி வரை சென்று, தங்கி, உண்டு, உறங்கி வந்தது போன்ற உணர்வு.
அந்த கரட்டு பூமியின் வறண்ட வாழ்கையை வைகை நதி மெல்ல தழுவி அன்பு பாராட்டுவது போல் அருமையான திரைக்கதையோடு இயல்பான எதார்த்தமான கொஞ்சம் திரைப்பட உத்தி கொண்டு படம் எடுத்துள்ளார் இயக்குனர்.
பத்து இயக்குனர்களை இயக்கி தானும் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார்.
கிராமங்களின் அடிப்படை வாழ்வியல் கூறுகளில் ஒன்று உரிமை பிரச்னை. அது எதற்காக வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எழலாம். இது நகரத்தில் பிறந்து, படித்து, வாழ்ந்து வரும் இன்றைய இளவல்களுக்கு புரியுமோ என்னவோ? ஆனால் தெக்கத்தி சீமையின் வீரியம், அவர்களில் வாழ்க்கை முறை, வழக்குகள், பிரச்சனைகள், அதன் தீர்வுகள் என இது வரை வந்த படங்களை விட மிகத் தெளிவாக இந்தப் படத்தில் கையாளப்பட்டுள்ளது.
இயக்குனர் இராசுமருதவன் தன்னுடைய வாழ்கை அனுபவத்தை மண் வாசனையோடு எடுத்துள்ளார். இதை போன்ற கதை களங்களை படித்து பார்த்தோ, பிறரிடம் கேட்டோ எடுப்பது எப்படி இருக்கும் என்றால், வெள்ளைக்காரன் நம்முடைய ஒப்பாரி பாடல் பாடினால் எப்படி இருக்குமோ அதை போல்தான் இருக்கும். ஆனால் இப்படம் வெள்ளை மனது கொண்ட, பிடிவாதம் குணம் கொண்ட, நடுநிலை கொண்ட, வீரியம் கொண்ட, வீம்பு பிடித்த மனிதர்களின் கரிசல் காட்டு, கரட்டு மேட்டு இசை மெட்டாக மலர்ந்துள்ளது.
இங்கே சொல்ல வேண்டிய செய்தி என்னவென்றால் இந்த கள்ளபாசப் பிணைப்பு கதைகள் மதுரம் காலங்கள் ஏனைய முக்குல இனங்களுக்கும் பொதுவானது; உரித்தானது. சிறு சிறு வேறுபாடுகள் இருப்பினும் இடம், இன உணர்வு, பாசம், சண்டை, அழகுணர்ச்சி பெரும்பாலும் இவர்களுக்குள் ஒன்றாக இருப்பது பொதுமை.
வருஷ நாடு சென்று கள்ள பாசத்தை அனுபவிக்காதவர்கள், சொந்தங்கள் அடித்துக் கொள்ளும் சண்டை சச்சரவுகளை காணக் கிடைக்காமல் நான்கு சுவருக்குள் தொழில்நுட்ப குழந்தையாக சுற்றுபவர்கள் இதை பார்க்கலாம்.பருகலாம். வெறுக்கலாம். பெருமை கொள்ளலாம்
thanks ---thaniyan pandian
No comments:
Post a Comment