இந்த கட்டுரையை படிக்கும்அனைத்து துப்பில்லாத, சொரணகெட்ட ஆசாமிகளுக்கு வணக்கம். நம்மால் எவனாவது அற்புதமாக படம் காட்டினால், வன்மையாக சாடினால் அவர்களுக்கு விசில் அடித்து கை தட்ட மட்டுமே முடியும். ஏன் செய்கிறான்? எதற்கு செய்கிறான்? என்று எண்ணி அதற்க்கு ஏற்ப செயல்பட முடியாது. பொம்மலாட்டம் நாடகங்கள் நடத்தி வெள்ளையனை வெளியேற்ற எழுச்சி ஏற்படுத்த முடிந்தது. இன்றோ அதை விட மிக சாதகமான ஊடகங்கள் வந்தும் ஒரு போராட்டம் கூட நடந்தமுடியவில்லை. என்னத்தை பறித்தாலும் நாம் ஊமையாகவே இருக்கிறோம். உன் வீடு தீ பிடித்து எரிகிறது என்று ஒரு நாடக நடிகன் பதறி நடித்து காண்பிக்கிறான். மக்கள் ஆ....அருமை என்று கைதட்டுகின்றனர். என்ன கொடுமை சார் இது? எவ்வளவே நமது மனநிலை. நாம என்ன விதமான சூழ்நிலையில் இருக்கிறோம் என்று புரியவில்லை. இந்த கட்டுரையை படித்ததோடு போய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் இவ்வளவு பேச வேடியிருந்தது. தலைப்பிற்கு வருவோம்!
என்னடா "வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி" ங்கிற பழமொழியை மாற்றி "வான் பொயிக்காவிடினும் தான் பொய்க்கும் காவிரி" ன்னு எழுதி இருக்கான்னு பாக்குறீங்களா?
READ MORE...
ஆங்கிலத்தில், “Man makes the environment“ ன்னு ஒரு பழமொழி உண்டு. தன் சூழ்நிலையை மனிதனே தீர்மானிக்கிறான்ன்னு அர்த்தம். ஆமா சார் இன்று இருக்கும் அனைத்து சுற்றுசூழல் பிரச்சனைக்கும் மனிதனே காரணம். காவிரி அதற்க்கு ஒரு நல்ல சான்று. காவிரியில் தண்ணி வரல்லைன்னு போராடுற மனுசங்க, ஏன் வரலை யார் காரணம் அப்படின்னு யோசிக்கிராங்களா? மழை பெய்யல! கர்நாடகத்துல தானி விடலன்னு சாக்கு சொல்றாங்க! உண்மை என்னங்க? இதோ எனக்கு தெரிந்த உண்மைகள் சில!
௧. மேற்கு தொடர்ச்சிமழை காடுகளை மற்றும் சமவெளிக்காடுகளை விவசாயத்துக்காக அழித்தது. அதனால் நின்று மெதுவாய் ஓடை, அருவியாய் வருடம் முழுவதும் வரும் நீர் அரை நாளில் ஓடி பாய்ந்து கடலில் கலக்கிறது. திடீர் வெள்ளம் மற்றும் வறட்சி வர காரணம்.
௨. நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகபடியான நீர் தேவை மிகுந்த பயிர்களை (கரும்பு, நெல்) முதலியவற்றை பயிரிட்டது.
௩. நகரப்பெருக்கம், தொழிற்ப்பெருக்கம் முதலியவற்றை ஏற்படுத்தி காவிரியின் ஆரம்பத்திலேயே நீரை உருஞ்சியது.
௪. கண் மண் தெரியாமல் காவிரிகரைகளில் ஆழ் துளை கிணறுகள் அமைத்து நீரை உருஞ்சியது.
௫. போதாததற்கு தொழிற்சாலை கழிவு நீரை, நகர கழிவை தங்கு தடையின்றி ஆற்றில் கலந்தது.
இவையனைத்தையும் செய்ததன் விளைவு.
௧. தஞ்சையில் சம்பா பயிர்கள் நடவில் காய்கிறது. அறுப்பில் நீரில் மூழ்குகிறது.
௨. ஆற்று நீரை உபயோகிக்கும் மக்கள் பல விதமான புற்று நோய்க்கு ஆளாகிறார்கள்.
௩. பயிர்களது விளைதிறன் பாதிக்கப்படுகிறது.
௪. மலைகளில் சமவெளிகளிலும் மண் அரிப்பு ஏற்பட்டு விலைநிலங்கள் பாழாகின்றன.
௫. மேலும் ஆற்றின் ஜீவன் ( Fresh water Ecosystem) கெடுகிறது.
௬. பல்வேறு தொற்று நோய்கள் பரவுகின்றன.
௭. மருத்துவமனைகள் பெருகி நகரமும் விரிவடைகிறது (உண்மைதானுங்க, யாரவது கொஞ்ச முனைப்பா மருத்துவமைனையை கணக்கில் எடுத்துபாரங்க பாதி நகரமா மருத்துவமனையாத்தான் இருக்கும்).
இப்படி காவிரி நீர் மனிதர்களுக்கு பொய்த்துபோயுள்ளது. நீரிருந்தும் அனைத்தும் பாழ். வான் பொய்ய்யவிடினும், தான் பொய்க்கும் காவிரி என்ற பழமொழியை நாமே உருவாக்கி வருகிறோம். இதற்க்கு மக்களாக ஒன்றிணைத்து தீர்வுகானதவரை நமக்கு விடிவு கிடையாது.
காவிரி ஆற்றின் இன்றைய நிலை பற்றிய சில ஆயிவுபுகைப்பட தொகுப்பினை பின் வரும் இணைப்பில் பார்க்கலாம்.
Fate and facts of காவிரி
http://picasaweb.google.com/ryskhtech/FateAndFactsOfCauvery#5312577839758993698
Noyyal River's Industrial pollution - Indian story
http://picasaweb.google.com/ryskhtech/NoyyalRiverSIndustrialPollutionIndianStory#
Erode's Kalingarayan canal pollution - An unpalatable reality
http://picasaweb.google.com/ryskhtech/ErodeSKalingarayanCanalPollutionAnUnpalatableReality#
இந்த இணைப்பை பார்ப்பதோடு நிற்காமல் உங்களால் முடிந்த நல்ல அளவு இதிலிருந்து மீள வழிவகை செய்யுங்கள்.
Posted by Yuvasenthil at Friday, March 13, 2009

No comments:
Post a Comment