சேது, நந்தா படங்களுக்குப் பிறகு வார இதழ் ஒன்றில் தனது வாழ்க்கைக் கதையை இவன்தான் பாலா என்ற பெயரில் எழுதினார் இயக்குனர் பாலா. அந்த டைட்டிலை சிறிது மாற்றி நான்தான் பாலா என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது.விவேக் மற்றும் புதுமுகம் ஜே.வி. இதில் ஹீரோக்களாக நடிக்கின்றனர். கொண்டித்தோப்பு சுப்பு படத்தில் சோலோ ஹீரோவாக நடிக்கும் விவேக், மகனே என் மருமகனே படத்தில் இரு ஹீரோக்களில் ஒருவராக நடிப்பது குறிப்பிடத்தக்கது
READ MORE...
ஸ்ரீலஷ்மி கலா புரொடக்சன் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆர்.கண்ணன் இயக்குகிறார். சாமி படத்தில் காமெடிக்காக போட்ட அக்ரஹாரத்து வேஷத்தை இந்தப் படத்தில் ஹீரோயிசமாக மாற்றியிருக்கிறார் விவேக். அக்ரஹாரத்தைச் சேர்ந்த பாலா என்கிற கேரக்டரில் விவேக்கும, அடியாள் பூச்சியாக ஜே.வி.யும் நடிக்கின்றனர். இவர்கள் இடையே நடக்கும் கண்ணாமூச்சி ரேரே தான் கதை.
கஞ்சா கருப்பு, மயில்சாமி, சார்லி, சரண்யா, நாசர் ஆகியோரும் நடிக்கிறார்கள். முல்லை செல்வராஜ் வசனம் எழுதுகிறார். இசை வித்யாசாகர். வாலி, வைரமுத்து பாடல்கள் எழுதுகின்றனர். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
THANKS: WWW.ALAIGAL.COM


No comments:
Post a Comment