ஈழம்-'தமிழர்களின் நம்பிக்கையை இழந்து விட்டது இந்தியா'
சென்னை: இலங்கை விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட இரு விதமான நிலையால், உலகத் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்தியா மீதான நம்பிக்கை தகர்ந்து போய் விட்டது. மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு, தமிழர் விரோத அரசு என்பது போன்ற எண்ணம் ஆழப் பரவி விட்டது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரவை கூடுதல் செயலாளர் பி.ராமன்.

மத்திய அமைச்சரவையின் கூடுதல் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி.ராமன். இப்போது சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் பார் டாப்பிகல் ஸ்டடீஸ் மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் முடிவு குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ராமன் கூறுவதாவது...

இந்திரா காந்தியை இன்றும் நன்றியுடனும், உணர்வுடனும் நினைத்து்ப பார்க்கும் தமிழர்கள் அதிகம். குறிப்பாக ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்திரா காந்தி மீது மிகப் பெரிய மரியாதை உள்ளது. காரணம், நமக்காக அவர் துடித்தார், நமக்காக பரிவு காட்டினார், நம் மீது அன்பும், பாசமும் கொண்டிருந்தார், நாம் ரத்தம் சிந்தியபோது வேதனைப்பட்டார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான்.READ MORE... thanks to thats tamil
SocialTwist Tell-a-Friend

No comments: