சென்னை, ஜூலை 30:  அணைகள் பாதுகாப்பு மசோதாவின் சில பகுதிகளைத் திருத்த வேண்டும் என்று தமிழக  முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்  சிங்கிற்கு சனிக்கிழமை அவர் கடிதம் எழுதியுள்ளார்.அணை பாதுகாப்பு  மசோதா 2010-ன்படி குறிப்பிட்ட அணையானது அது அமைந்துள்ள மாநிலத்தின் மாநில  அணை பாதுகாப்பு அமைப்பின் வரம்புக்குள் வரும் என துணைப் பிரிவு 26(1)  கூறுகிறது. இந்த அம்சம் அப்படியே சட்டமாக நிறைவேற்றப்பட்டால், தமிழக  பராமரிப்பில் உள்ள முல்லைப் பெரியாறு உள்ளிட்ட 4 அணைகளின் பாதுகாப்பு கேரள  மாநில அரசிடம் போய்விடும் என்றும், அது தமிழக நலனுக்கு எதிராக அமையக்கூடும்  என்றும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இந்த அம்சத்தைத் திருத்த  வேண்டும் என அவர் கோரியுள்ளார்.முதல்வரின் கடித விவரம்:அணை  பாதுகாப்பு மசோதா 2010 இப்போது நீர்வளத் துறைக்கான நாடாளுமன்ற  நிலைக்குழுவின் ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் சில அம்சங்கள்  தமிழக நலனுக்கு எதிராக இருப்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.அணைகளின்  ஆய்வு, அணையின் பாதுகாப்பு குறித்த பரிந்துரைகள் மற்றும் தகவல்கள்  பகுப்பாய்வு, அணையின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள்  குறித்த விஷயங்கள், அந்த அணை அமைந்துள்ள மாநிலத்தின் அணை பாதுகாப்பு  அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என மசோதாவின் துணைப் பிரிவு 26 (1)  கூறுகிறது.அணை யாருக்கு சொந்தம் என குறிப்பிட்டுள்ள மாநிலங்கள்  மேற்படி அமைப்புடன் இந்த விஷயங்களில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்  எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் "அணை அமைந்துள்ள மாநிலம்' என்ற  வார்த்தைகள், அந்த அணை அமைந்துள்ள எல்லை இருக்கும் மாநிலம் என்று தெளிவாகக்  குறிப்பிடுகிறது.பக்கத்து மாநில அரசால் சொந்தம் கொண்டாடி,  பராமரிக்கப்பட்டு வரும் அணைகளைப் பொறுத்தவரை இந்த துணைப் பிரிவு பாதிப்பு  ஏற்படுத்துவதாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.முல்லைப்  பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகள்  கேரள எல்லைக்குள் இருந்தாலும், அவற்றை தமிழகம்தான் சொந்தம் கொண்டாடி,  பராமரித்து வருகிறது.மேற்படி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால்,  தமிழக நலன்களுக்கு பாதிப்பாக அமைந்துவிடும். மேற்படி அணைகள்  தமிழகத்துக்குச் சொந்தமானவை என்றாலும், அவை கேரள மாநில எல்லைக்குள்  அமைந்திருப்பதால் இந்த பாதிப்பு ஏற்படும். அணைகளின் பாதுகாப்பு,  பராமரிப்பு, செயல்பாடு ஆகிய அம்சங்களில் நடைமுறையில் பல பிரச்னைகள்  ஏற்படும். மேற்சொன்ன சிக்கல்களால், இந்த மசோதாவில் சில திருத்தங்களை  முன்மொழிய விரும்புகிறோம்.அணைக்கு சொந்தம் கொண்டாடும் மற்றும் பராமரித்து,  பணிகளைச் செயல்படுத்தி வரும் மாநிலங்களுக்கு ஆய்வு செய்ய, பாதுகாப்பு  குறித்த தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் பகுப்பாய்வு, பாதுகாப்புத்  திட்டங்களை நிறைவேற்றும்பொறுப்பு உண்டு என துணைப் பிரிவு 26 (1)  திருத்தப்பட வேண்டும்.இதற்கேற்ப மற்ற துணை விதிகளையும் திருத்த வேண்டும்.  அத்துடன் துணைப் பிரிவு 26 (6) புதிதாக சேர்க்கப்பட வேண்டும்.""வேறு  எந்த சட்டத்தின் வரம்பும் இல்லாமல், அணையைப் பராமரிக்கும் அதிகாரிகள்  மற்றும் அலுவலர்கள், அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு  நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக வனம் மற்றும் வனவிலங்கு காப்பக  பகுதிகளுக்குள் செல்லும் உரிமை பெற்றவர்களாகிறார்கள்'' என்ற விதியைச்  சேர்க்க வேண்டும்.தமிழக நலன்கள் பாதுகாக்கப்படுவதற்காக, மேற்படி  மசோதாவில் இந்த திருத்தங்கள் அல்லது மாற்றங்களைச் செய்ய உரிய அமைச்சகத்தை  தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்வதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
thanks to http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&artid=454113&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu
thanks to http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&artid=454113&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu









தமிழ்நாடு  சட்டசபையின் தீர்மானத்தினை எதிர்ப்பதற்குப் பதிலாக, அதிகாரப் பகிர்வு  பொறிமுறையை ஏற்றுக்கொள்வதற்கு ராஜபக்ச தயாராக இருந்தால், அவர்  புத்திசாலியாகவும் சிறிலங்கா சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை சமூகங்கள்  வாழ்வதற்கு சிறந்த இடமாகவும் அமையும். 

