இந்தியா இன்னும் கிராமங்களில்தான் வாழ்கிறது!

கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
டெல்லி: நாட்டின் 70 சதவிகித மக்கள் இன்னும் கிராமங்களில்தான் வசித்து வருவதாக புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது.

நாடுமுழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இது தொடர்பான அறிக்கையை மத்திய உள்துறை செயலர் ஆர்.கே.சிங் வெள்ளிக்கிழமை தில்லியில் வெளியிட்டார். இதன் விவரங்களை இந்தியாவின் பதிவாளர் ஜெனரலும்,மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையருமான சி. சந்திரமௌலி செய்தியாளர்களிடம் கூறியது:

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 83.3 கோடி மக்கள் கிராமங்களில்தான் வசிக்கின்றனர். 37.7 கோடி மக்கள் மட்டுமே நகரங்களில் வசித்து வருகின்றனர். நாடு விடுதலை அடைந்த பிறகு முதல் முறையாக, கிராமங்களைவிட, நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நகரமயமாக்கம் 27.81 சதவிகிதமாக இருந்தது. இது 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 31.16 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் கிராமப்புறங்களில் குழந்தைப் பிறப்பு 9 கோடியாக உயர்ந்துள்ளது.

கிராமப்புறங்களில் அதிகளவு மக்கள் வசிப்பது உத்தரப் பிரதேசத்தில்சான்.

மும்பையில் 5 கோடி பேர்...

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில்தான் 5 கோடி மக்கள் வசிக்கின்றனர்.

நகர்புறங்களை விட, எழுத்தறிவுப் பெற்றோர் எண்ணிக்கை கிராமங்களில் 3 அல்லது 4 மடங்கு அதிகமாக உள்ளது. அதுபோன்று, பெண்களில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் எண்ணிக்கையும் ஆண்களை விட நகரம் மற்றும் கிராமங்களில் அதிகரித்துள்ளது.

கிராமங்களில் ஆண்கள், பெண்கள் எழுத்தறிவுப் பெற்றவர்களின் இடைவெளி 2001 ஆம் ஆண்டு 24.6 சதவிகிதமாக இருந்தது. இது 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 19.8 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதே காலத்தில், நகரங்களில் இது 13.4 சதவிகித்திலிருந்து 9.8 சதவிகிதமாக குறைந்துள்ளது, என்றார் அவர்.

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/07/16/70-percent-indians-living-rural-are-in-rural-areas-aid0136.html
இந்தியா இன்னும் கிராமங்களில்தான் வாழ்கிறது!SocialTwist Tell-a-Friend

No comments: