அப்ப... ராஜராஜன் சோழன் நல்லவனில்லையா?
வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011 13:43
ஆக்ஷன், மசாலா என்று தனது பழைய ஃபார்முலாவுக்குள் நுழைந்துவிட்டார் விக்ரம். அதற்கு காரணமும் இருக்கிறது. கண்ணுக்கு எதிரே தான் உயிரை கொடுத்து நடித்த’தெய்வதிருமகன்’ படத்தின் வியாபார சிக்கலை தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறாரல்லவா? அதனால்தான் மேற்கண்ட அதிரடி முடிவு.
இருந்தாலும், ஆக்ஷன் மசாலாவுடன், மனதை அள்ளும் ஒரு பிளாஷ்பேக் பகுதி இருந்தால் அது தனக்கான டேஸ்ட்டையும் வெளிப்படுத்தும் என்ற எண்ணம் இருக்கிறது அவருக்குள். அதன்விளைவாக விக்ரம் ஒப்புக் கொண்ட கமர்ஷியல் தூக்கலான ’கரிகாலன்’ படத்தில்தான் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறதாம். இருபது முப்பது வருடங்களுக்கு முன்நடக்கிற கதை என்றால் பிளாஷ்பேக் எனலாம்.
இதுவோ பல நூற்றாண்டுகளுக்கு முன்பு விக்ரம் எப்படியிருந்தார் என்பதை பற்றிய பின்னோட்ட கதை.
அதுதான் என்ன? வானுயர கோவில் கட்டியிருக்கும் ராஜராஜ சோழனின் பெருமையை இப்போதுள்ள அரசுகள் பாடுவதில் வியப்பில்லை. அப்படிப்பட்ட மன்னனின் சமாதி ஏன் சாதாரண ஒருவனின் சமாதி போல அசிரத்தையோடு எழுப்பப்பட்டிருக்கிறது? அதையும் ஒரு கோவில் போல பிரமாண்டமாக எழுப்பியிருக்கலாமே? ஏன் அவ்வாறு செய்யவில்லைஅப்போது வாழ்ந்த அரசும் மக்களும்? இப்படி எழுகிற கேள்விகளுக்கு விடைதான் இந்த பிளாஷ்பேக்.
மொத்தத்தில் இவர்கள் சொல்ல வருவது ராஜராஜன் நல்லவன் இல்லை என்பதுதான். இந்த பிளாஷ்பேக்கில் அவனை கெட்டவராக சித்தரிக்க உதவும் பாத்திரமாக நடிக்கிறாராம்விக்ரம்.
படம் வெளிவரும் போது யார் யாரெல்லாம் வேட்டியை மடித்துக் கொண்டு கோதாவில் இறங்கப் போகிறார்களோ?
thanks to http://www.tamilleader.in/cine/323-2011-06-24-08-40-01.html

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment