மின்னஞ்சலின் அடுத்த புரட்சி



[ சனிக்கிழமை, 02 யூலை 2011, 04:33.29 மு.ப GMT ]
மின்னஞ்சலில் ஜிமெயிலுக்கு பிறகு அடுத்த புதுமை அரங்கேறியிருக்கிறது. அத‌ன் பெயர் ஷார்ட்மெயில்.டிவிட்டரும், பேஸ்புக்கும் மின்னஞ்சலுக்கான இடத்தை நிரப்பி வருவதாக கூறப்பட்டு வரும் காலத்தில் அறிமுகமாகியிருக்கும் ஷார்ட்மெயில் மின்னஞ்சல் சேவையை சுருக்கி அதன் வீச்சை அதிகமாக்கியிருக்கிற‌து.
அதாவது பெயருக்கேற்ப இது மின்னஞ்சல் மூலம் அனுப்பக்கூடிய செய்திகளை சுருக்கியிருக்கிறது. ஆம் ஷார்ட்மெயிலை பயன்படுத்தும் போது கடிதம் போல நீள‌மாக எல்லாம் எழுதி கொண்டிருக்க முடியாது. அதிகபட்சம் 500 எழுத்துக்களுக்குள் விடயத்தை சொல்லி விட வேண்டும்.
டிவிட்டரில் எப்படி அதிகப‌ட்சம் 140 எழுத்துக்கள் என்ற கட்டுப்பாடு இருக்கிற‌தோ அதே போல ஷார்ட்மெயிலில் 500 எழுத்துக்களில் தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் அனுப்பும் செய்திகள் எப்போதுமே சுருக்கமாக சொல்ல வந்ததை மட்டும் சொல்வதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த சேவையை இன்பாக்ஸில் வந்து குவியும் படிக்கப்படாத மின்னஞ்சல்களால் திணறிப்போகிறவர்கள் நிச்சயம் விரும்புவார்கள். அதோடு மின்னஞ்சல் சுமை என்ப‌தும் இல்லாமல் போய்விடும்.
அது மட்டும் அல்ல மின்னஞ்சலோடு ஒட்டி கொண்டு வரும் இணைப்புகள் புகைப்ப‌டங்கள் போன்றவற்றுக்கும் இங்கு இடமில்லை. இது வெறும் தகவல் தொடர்புக்கு மட்டும் தான்.
ஷார்ட்மெயிலை நீங்கள் பயன்படுத்த துவங்கினீர்கள் என்றால் உங்கலுக்கு வரும் மின்னஞ்சல்களும் ஷார்ட் அண்டு ஸ்வீட்டாக இருந்தாக வேண்டும். அதாவ‌து அவையும் 500 எழுத்துகளுக்குள் இல்லை என்றால் திருப்பி அனுப்பபட்டு விடும். 500 எழுத்துகளுக்குள் தொடர்பு கொள்ளுங்கள் என்னும் செய்தியோடு.
மின்னஞ்சலை எளிமையாக்க மட்டும் அல்ல அதனை சிறந்த முறையில் நிர்வ‌கிக்கவும் இது பேருதவியாக இருக்கும். எந்த மின்னஞ்சல் வந்தாலும் உடனே படித்து பார்த்து விடலாம். தள்ளிப்போடுவதோ மின்னஞ்சல்களை குப்பை போல சேரவிடுவதோ நேராது.
டிவிட்டர் யுகத்திற்கு ஏற்ப ஷார்ட்மெயில் ரத்தின சுருக்கமாகியிருப்பதோடு சமூக வலைப்பின்னல் வசதியின் சாயலையும் கொண்டுள்ளது. ஷார்ட்மெயிலில் செய்திகளை அனுப்பும் போதே அது ரகசியமானதா அல்லது பொதுவில் பகிரக்கூடியதா என்பதை தீர்மானித்து கொள்ளலாம்.
ரகசியமானது என்றால் யாருக்கு அனுப்புகிறோமோ அவர் மட்டுமே பாக்க முடியும். பொது என்றால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம். பதில் அனுப்பலாம். இப்படி மின்னஞ்சல் வாயிலாகவே உரையாடலில் ஈடுபடலாம்.
பேஸ்புக் பயன்ப‌டுத்துபவர்கள் சுவர் செய்தி மூலமே நண்பர்களை தொடர்பு கொண்டுவிடுவதால் மின்னஞ்சலின் தேவையே இல்லாமல் போவதாக சொல்லபடுகிற‌து. ஷார்ட்மெயில் பிரபலமானால் இதன் மூலமே நண்பர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்யமுடியும் என்ப‌தால் பேஸ்புக் தேவையில்லாமல் போகலாம்.
ஷார்ட்மெயிலில் முகவரி பெறுவதும் மிகவும் சுலபமானது. டிவிட்டர் கணக்கு வைத்திருப்பாவர்க‌ள் அதன் மூலமே புதிய முகவரி பெறலாம். ஐபோன் ஆன்டிராய்டு போன்களுக்கு ஏற்ற வடிவிலும் வருகிறது. மின்னஞ்சலை புதுப்பிக்க வந்த புதுமையான் சேவை இந்த ஷார்ட்மெயில் என்று மனதார பாராட்டலாம்.
இணையதள முகவரி
THANKS T O http://www.lankasritechnology.com/view.php?203dBnZndbc4cQCAA424ea0609F0e033TlOmOcddcdmOlTl220e9F906eae424yMQ64cbdbZnBdB02
மின்னஞ்சலின் அடுத்த புரட்சிSocialTwist Tell-a-Friend

No comments: