பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி ஆகியோர் இன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
கடந்த 15 வருடமாக இந்த வழக்கு பெங்களூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ரூ. 65 கோடி அளவுக்கு சொத்துக்கள் குவித்து விட்டதாக கூறி ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சசிகலா, அவரது உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் நான்கு பேரும் ஜூலை 27ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று தனி கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதிலிருந்து தனக்கு விதி விலக்கு அளிக்குமாறும், வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகத் தயார் என்றும் ஜெயலலிதா தரப்பில் கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று தனி கோர்ட்டில் சசிகலாவும், இளவரசியும் நேரில் ஆஜரானார்கள்.
thanks to http://thatstamil.oneindia.in/news/2011/07/27/sasikala-appears-before-bangalore-spl-court-aid0091.html
சொத்துக் குவிப்பு வழக்கு-பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் சசிகலா, இளவரசி ஆஜர்
சொத்துக் குவிப்பு வழக்கு-பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் சசிகலா, இளவரசி ஆஜர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment