செவ்வாய்க்கிழமை, 14 யூலை 2009, 03:11.44 PM GMT +05:30
நெல்லையில் இன்று காலை மூவேந்தர் முன்னணி கழக தென்மண்டல அமைப்புச் செயலாளர் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தத்தை சேர்ந்தவர் சிவசாமி (45). மூவேந்தர் முன்னணி கழக தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்தார்.
READ MORE...
இன்று காலை சிவசாமி வாக்கிங் சென்றுவிட்டு மேலநத்தம் ரயில்வே கேட் அருகே உள்ள டீக்கடையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த 3 பேர், திடீரென சிவசாமியை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சிவசாமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் பைக்கில் ஏறி தப்பிச் சென்றுவிட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாநகர துணை கமிஷனர் ஜெயச்சந்திரன், உதவி கமிஷனர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் வந்து சிவசாமியின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
சிவசாமி கொல்லப்பட்ட தகவல் பரவியதும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரி மற்றும் அவரது வீட்டு முன்பு திரண்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிவசாமிக்கும், அதே ஊரைச் சேர்ந்த பிச்சாண்டி (22) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு பெருமாள்புரத்தில் வக்கீல் ஒருவரிடம் டிரைவராக இருந்த பிச்சாண்டியின் உறவினர் காசிமுருகன் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக சிவசாமி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் வழக்கில் இருந்து சிவசாமி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
காசிமுருகன் கொலைக்கு பழிக்குப்பழியாகவே சிவசாமி கொலை செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பிச்சாண்டி உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிவசாமியின் ஆதரவாளர்கள் மேலநத்தத்தில் திரண்டனர். இவர்களில் சிலர், அதேபகுதியில் உள்ள பிச்சாண்டி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். கொலையாளிகளை உடனே கைது செய்யக் கோரி மேலப்பாளையம் - டவுன் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் சென்று தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி http://www.newindianews.com/ta/view.php?2b3e0cA20aeY4DD20eco4OXT2ccdQoOKc4d3UmM0U4b34dlYmad43fVmA3d0e2y4C60e

No comments:
Post a Comment