சென்னையில் கருப்பு சூலை நினைவாக ஓவியர் புகழேந்தி அவர்களின்
”உயிர் உறைந்த நிறங்கள்” என்ற தலைப்பிலான தமிழீழத் துயரங்கள் குறித்த ஓவியக்காட்சி 17.7.09 அன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
READ MORE... இந்தக் கண்காட்சியில், யூலை இனப்படுகொலை சம்பந்தமான புது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் காலத்தால் அழியாத சிறந்த 50 ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள செ.தெ.நாயகம் பள்ளியில் வெள்ளியன்று நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் அய்யா. பழ.நெடுமாறன் அவர்கள் தலைமை தாங்கினார். திரு சோழ.நம்பியார் வரவேற்புரையாற்றினர்.
திரைப்பட நடிகர் சத்யராஜ், இயக்குநர் சேரன், மதுரை பாலன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.
நிறைவாக ஓவியர் புகழேந்தி அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டம் தனக்கு ஏற்படுத்தியத் தாக்கம் குறித்தும் தனது ஓவியங்களில் தமிழீழ துயரங்களைப் பதிவு செய்தமை குறித்தும் பேசினார்.
இந்நிகழ்வில் பெரியார் தி.க. சென்னை மாவட்டச் செயலாளர் அன்புத் தென்னரசு, தபசி குமரன், பகுசன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, பேராசிரியர் தீரன், கவிஞர் அறிவுமதி, ஓவியக்கல்லூரி மாணவர்கள் என பலதரப்பினரும் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சி 18.07.2009 அன்று தொடங்கி 25.07.2009 வரை நடைபெற உள்ளது>
No comments:
Post a Comment