மதுரை, ஜூலை 19-
இலங்கையில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க அந்த
“முள்வேலியை அகற்றுவோம் வாரீர்” என்ற கோஷத்தோடு டைரக்டர் சீமான் தலைமையில் மதுரையில் ஊர்வலம் நடந்தது. ஜான்சிராணி பூங்காவில் இருந்து தொடங்கிய ஊர்வலம் வடக்கு மாசி, மேலமாசி வீதி சந்திப்பிற்கு வந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சினிமா டைரக்டர் சீமான் பேசியதாவது:-
தன் கணவனை கொன்றதற்காக நீதி கேட்ட கண்ணகி பிறந்த மண்ணில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
READ MORE... எங்களுக்கு பதவி ஆசையும் கிடையாது. எங்கள் நோக்கம் யாருக்கும் எதிரானதும் அல்ல. காயம்பட்ட எங்கள் இனத்தை காப்பதற்காகதான் இந்த கூட்டம். அடுத்த நடவடிக்கை என்ன? இன்னும் நாம் விழிக்கவில்லை என்றால் என்ன ஆவோம்? என்பதை விளக்கதான் இந்த கூட்டம். இங்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடி இருப்பதற்கு காரணம் “நாம் தமிழர்” என்ற உணர்வு இன்னும் இருப்பதால்தான்.
இலங்கையில் 3 1/2 லட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் இருக்கிறார்கள். புத்தர் கொள்கையை கடைபிடிப்பதாக கூறி வரும் இலங்கை அரசு மனித உயிருக்கு எவ்வளவு பெரிய தீங்கு செய்துள்ளது. முள்வேலிக்குள் இருக்கும் தமிழர்கள் தாகத்துக்கு தண்ணீர் கேட்டால் சிங்கள வெறியன் சிறுநீரை கொடுக்கும் நிலை உள்ளது. சினிமாவில் ஒரு மிருகத்தை வைத்து படம் எடுத்தால் கூட முடிந்ததும் அந்த மிருகம் உயிருடன் இருக்கிறதா? என்று கேட்டுவிட்டுதான் தணிக்கை குழு சான்றிதழ் தருகிறது. சித்ரவதை இருக்க கூடாது என்ற சட்டம் இருக்கும் இத்தேசத்தில், அங்கு கொடுமைக்கு ஆளாகும் மக்களை ஏன் காப்பாற்ற மனம் வரவில்லை.
விடுதலைப்புலிகளை ஒழித்துவிட்டால் தமிழர்களை சுதந்திரமாக வாழ வைப்போம் என்று ராஜபக்சே கூறினார். இதை இந்திய தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். தற்போது அவர்கள் கருத்துப்படி விடுதலைப்புலிகள் இல்லை. பிறகு ஏன் அங்கு வாழும் தமிழர்களுக்கு இந்த நிலை?
இந்த மண்ணில் யாருக்கும் தமிழர்களின் துயர் துடைக்க ஆசை இல்லை. 6 1/2 கோடி தமிழர்களில் 30 லட்சம் தமிழர்களாவது ஒரே இடத்தில் நின்று குரல் கொடுத்து இருந்தால் அங்கு போர் நிறுத்தப்பட்டு இருக்கும் அதை நாம் செய்யாதது பெரிய துரோகமாகும். இந்த துரோகத்தை நீக்க முதல் கட்டமாக முள்வேலிக்குள் அடைக்கபட்டுள்ள தமிழர்களை மீட்டு அவரவர் இடத்தில் குடியமர்த்தவும், விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் மீதான தடையையும் மத்திய அரசு நீக்க வேண்டும்.
நம் எண்ணம் நிறைவேற தேவை ஒற்றுமை. எனவே ஜாதி, மதம், கட்சி போன்ற வேற்றுமையை மறந்து நாம் அனைவரும் “தமிழர்” என்ற உணவர்வுடன் உலக தமிழர்கள் செயல்பட்டால் போதும் நம் இலக்கை விரைவில் அடையலாம். இலங்கை சிங்களர்களின் நாடு அல்ல. நம் பாட்டன் ஆண்ட பூமி.
இவ்வாறு அவர் பேசினார்.
THANKS MALAIMALAR
No comments:
Post a Comment