.
தி.மு.க. தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு பாவமன்னிப்பு கேட்டால், அந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து யோசிப்போம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் புதன்கிழமை தெரிவித்தார்.READ MORE...
ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் ஞா. தனலட்சுமி புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த தா. பாண்டியன் அங்கு செய்தியாளர்களிடம் கூறியது: அ.தி.மு.க. போட்டியிடாததால், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றதாக அறிவித்துவிடலாம். தேர்தலை நடத்த தேவையில்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளது அவரது கருத்தாக இருக்கலாம். முக்கிய கட்சியான அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்பதால் போட்டி இல்லை என்பது அவரது மதிப்பீடு. அது பற்றி மேற்கொண்டு எதுவும் கூற விரும்பவில்லை. அ.தி.மு.க. தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில் நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதால் எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. இதனால், வரும் சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைப்போம் என்பது கற்பனை என்றார்
THANKS TO http://www.newindianews.com/ta/view.php?2bdRVmAc4cc230oOm304dcMe0cKcd0eavXO4A24d334YlX3e0adoy4Ce4ce0eYmM0603b42A4DX7be
No comments:
Post a Comment