புதன்கிழமை, 29 யூலை 2009, 08:56 மு.ப ஈழம்] [வி.குணரட்ணம்]
"சீனாவின் மூலோபாயத்தை முறியடிப்பதற்கான பொதுவான அக்கறையில் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்திருக்கின்றது. ராஜபக்சவின் போருக்கு உறுதியான ஆதரவை வழங்கிய பின்னர் 'அரசியல் தீர்வை' வலியுறுத்தும் பராக் ஒபாமா நிர்வாகத்துடன் நெருங்கிச் செயற்பட வேண்டியதாக டில்லி உள்ளது" என இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான எம்.பத்ரகுமார் தெரிவித்திருக்கின்றார்.
READ MORE...
'விடுதலைப் புலிகளுக்கு பிற்பட்ட காலகட்டத்தில்' சிறிலங்கா அரசின் மீதான புதுடில்லியின் அரசியல் பிடி தளர்ந்துபோய் இருப்தையே காணக்கூடியதாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கும் பத்ரகுமார், இழந்துபோன செல்வாக்கை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு அனைத்துலக சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலையில் இந்தியா இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அனைத்துலக கண்காணிப்புக் குழு ஒன்றை அவசரமாக அமைத்தல், அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில் அனைத்துலக சமூகத்தின் அபிப்பிராயத்தைத் திரட்டுதல், நியாயமான ஒரு நேர அட்டவணையில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் அனைத்துலக சமூகத்துடன் புதுடில்லி இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்தியாவில் இருந்து வெளிவரும் பிரபல ஆங்கில வார ஏடு ஒன்றில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், "கடனை வழங்குவதற்காக அனைத்துலக நாணய நிதியம் விதித்த நிபந்தனைகளில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அனைத்துலக மேற்பார்வையிலான நடைமுறை ஒன்று தொடர்பாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்" என வலியுறுத்தியிருப்பதுடன், "போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியிருப்பதன் மூலமாக சரியான ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் செய்துள்ளது" எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
"தமிழர்களின் பிரச்சினைக்கான இறுதித் தீர்வுத் திட்டம் ஒன்று ராஜபக்சவிடம் இருக்கின்றது. தமிழர்களின் தாயகத்தில் சிங்களவர்களைத் திட்டமிட்ட முறையில் குடியமர்த்துவதுடன் சம்பந்தப்பட்ட திட்டமே இது. இதன் மூலம் அடுத்த தசாப்தத்தில் இந்தப் பிராந்தியத்தின் குடித்தொகை அடர்த்தி தமிழர்களுக்குப் பாதகமான முறையில் மாற்றப்பட்டுவிடும். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பிரச்சினையை இவ்வாறுதான் சிறிலங்கா அரசு தீர்த்துவைத்தது" எனவும் பத்ரகுமார் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
"தமிழர்கள் இந்தியாவை நோக்கி பெருமளவில் வெளியேறுவதை சிங்க அரசுகள் தமது அரச கொள்கையாக எதிர்காலத்தில் ஊக்குவிக்கும்" என எதிர்பார்க்கையை வெளிப்படுத்தும் பத்ரகுமார், "தமிழர்களும் இவ்வாறு இந்தியாவுக்கு குடிபெயர்ந்து செல்வதை விரும்பலாம். இதுதான் சிங்கள அரசு விரும்பும் 'தமிழர் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாக அமையும்' எனவும் குறிப்பிடுகின்றார்.
தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் அனைத்துலக சமூகம் ஏதாவது சாதகமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கு இந்தியாவின் ஆதரவு அதற்கு அவசியமானதாக இருக்கும் என்பதையும் தமிழ் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
THANKS TO http://www.puthinam.com/full.php?2bb7D6AU30aeAAmSc00eccmYcS32ccd00Mttc4d33bVoQ44b34OOO44ad43eKA4Ydd0eeCe1ff0e

No comments:
Post a Comment