வடபகுதியில் இரண்டரை லட்சம் சிங்களவர்களை குடியமர்த்த சிறிலங்கா அரசு திட்டம்:இலங்கையின் வடபகுதியில் இரண்டரை லட்சம் சிங்களவர்களைக் குடியமர்த்துவதற்கு சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றியபோது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த சீமான், கடந்த 14 மாதங்களில் வடபகுதியில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஈழத் தமிழர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது:
READ MORE... சிறிலங்காப் படையின் 12 டிவிசன்களையும் 20 ஆயிரம் காவல்துறையினரையும் அதே அளவான சிங்கள அதிகாரிகளையும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேரையும் வடபகுதியில் குடியமர்த்துவதற்கு சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது.
தண்டனைக் கைதிகள் 30 ஆயிரம் பேரை விடுவித்து, வன்னிப் பகுதியில் அவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்கும் சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது.
வடபகுதியில் படைத் தளங்கள் பல அமைக்கப்படுகின்றன. புதிய காவல் நிலையங்களும் உருவாக்கப்படுகின்றன. அங்கு உருவாக்கப்படும் நிர்வாகக் கட்டமைப்புக்கள் அனைத்தும் சிங்களவர்களை மட்டும் கொண்டே ஏற்படுத்தப்படுகின்றது.
காணாமல்போன ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் நாளில் இருந்து தொடங்கும் என்று தெரிகிறது.
இந்திய அரசு வழங்கிய 500 கோடி ரூபா உதவி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் வீடுகளைக் கட்டுவதற்கும், வீதிகளைத் திருத்துவதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.
'வடக்கின் வசந்தம்' என்ற பேரில் சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் திட்டங்களுக்கு ஆதரவளித்து விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இலங்கையின் வடபகுதிக்குச் செல்லக்கூடாது.
சிறிலங்கா அரசு முதலில் 'வடக்கின் வசந்தம்' திட்டத்திற்காக அமைத்துள்ள தனிச் சிங்களவர்களைக்கொண்ட குழுவைக் கலைக்கவேண்டும். அதற்குப் பதிலாக புதிய குழுவை ஏற்படுத்தி, வடபகுதியில் காணாமல்போன ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழர்களையும் கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முகாம்களில் உள்ளவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு முன்பாக இது செய்யப்படவேண்டும் என்றார் அவர்.THANKS TO PUTHINAM.COM
No comments:
Post a Comment