சேர மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை மாவலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக, அத்தப்பூ கோலம் மற்றும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.ஓணம் அன்று சிறப்பான உணவு வகைகளை சமைத்து உறவினர்களுடன் உண்டு மகிழ்வார்கள்.மேலும் `சென்ட' என்றழைக்கப்படும் கேரள பாரம்பரிய மேளதாளத்துடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், பாம்பு போன்று நீண்ட படகுப்போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளும் ஓணம் திருநாளையொட்டி நடத்தப்படுவது வழக்கம்.
அனைத்து மக்களும் சாதி, சமய பாகுபாடு இல்லாமல் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர். மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் இந்த திருவிழா நடைபெறும்.
கேரளாவை முன்பு ஒரு காலத்தில், மாவலி சக்கரவர்த்தி ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சிக் காலத்தில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும், இன்பமாகவும் வாழ்ந்தனர்.அவ்வாறு நல்லாட்சி புரிந்த மாவலி சக்கரவர்த்தி கேரளாவுக்கு விஜயம் செய்யும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஓணம் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. மாவலி மன்னனின் வருகைக்காக இந்த திருவிழா 10 தினங்கள் கொண்டாடப்படுகிறது."அத்தம்'' என்று கூறப்படும் முதல் நாளில் இருந்தே மாவலி சக்கரவர்த்தியின் வருகைக்காக வீட்டின் முன்பு மலர்களால் பூக்கோலம் போடுவார்கள்.
இது `அத்த பூ கோலம்' என்று அழைக்கப்படுகிறது. 10-வது நாளான திருவோண தினம் கேரளாவில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகளை அலங்கரித்து வைப்பார்கள். மேலும் புத்தாடை அணிந்து விசேஷ பூஜைகளிலும் பங்கேற்பார்கள்.எல்லோருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment