எல்லையில் ராணுவத்தினர் தங்குவதற்கு கட்டிடங்கள் கட்டி இந்திய பகுதிக்குள் சீனா அங்குலம் அங்குலமாக முன்னேறி வருகிறது என்று காஷ்மீர் அரசு தகவல் வெளியிட்டு உள்ளது.
இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தின் ஒரு பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது. கடந்த ஜூன் மாதம் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள், சுமர் பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி பறந்து இறைச்சி கழிவுகளை வீசி சென்றன. அதன் பிறகு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள கயா மலைப் பகுதியில் சீன ராணுவத்தினர் 1.5 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவி அங்குள்ள பாறைகளில் சீனா என்று சிவப்பு மையினால் எழுதி விட்டு சென்றனர். இந்த நிலையில் சீன ஆக்கிரமிப்பை கண்காணிக்க காஷ்மீர் அரசு நியமித்த முன்னாள் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் நியோமா தசரிங் நெர்பூ வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள காரகோரம் எல்லையில் சீனா கட்டிடங்கள் கட்டி வருகிறது. அவை சீன ராணுவத்தினர் தங்குவதற்காகவோ, அல்லது இந்திய ராணுவத்தினரின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவோ இருக்கலாம். லடாக்கில் உள்ள டோக்பக், டோலே தங்கா பகுதியில் ஆடு மேய்ப்பவர்களும் நாடோடிகளும் தங்கள் ஆடுகளை மேய்ப்பது வழக்கம். அவர்களை சீன ராணுவத்தினர் அச்சுறுத்தி அந்த பகுதியில் இருந்து வெளியேறும்படி கூறி வருகின்றனர். சீன பழமொழிப்படி அவர்கள் கெஜம் கணக்கில் அல்லாமல் அங்குலம் அங்குலமாக ஆக்கிரமித்து வருகிறார்கள். இவ்வாறு மாஜிஸ்திரேட் நெர்பூ கூறி இருக்கிறார்.
நன்றி http://www.newindianews.com/view.php?2b2e0cA20aeY4DD30ecA4OX32ccdQoOKc4d3emM0M4b34dlYmad43fVmA2d0e3S4C60e
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment