இலங்கையின் அசையா சொத்து சந்தை மீது கண்வைத்துள்ள இந்திய முதலீட்டாளர்கள்


இலங்கையில் சமாதானம் வரவேண்டும் என நோர்வே அரசு பாடுபட்ட காலம் கடந்து, இப்போது இலங்கையின் நிலையான சொத்துக்கள் மீது முதலிடுவதற்காக கொழும்பை நோக்கி படையெடுகும் நிலைக்கு பல நிறுவனங்கள் வந்துள்ளன. இவற்றுள் முக்கியமாக L&T, Omaxe மற்றும் புரவங்கர திட்டங்கள் என்பன இலங்கையில் ஷொப்பிங் கொம்பிளக்ஸ், வீட்டுத் திட்டங்கள் மற்றும் பலவற்றில் முதலீடிட திட்டமிடுகின்றன. இலங்கையிலிருந்து புடில்லி வந்த தூதுக்குழுவினர் சுதந்திரமான சட்டதிட்டங்களுடன் தமது வியாபாரத்தை நடத்த இலங்கையில் முதலீடு செய்யவிரும்பும் Omaxe மற்றும் பிற நிறுவன அதிகாரிகளுடன் சந்தித்துள்ளனர். சுற்றுலாப்பயணிகளைக் கவருவதற்காக 20 மில்லியன் டொலர்கள் செலவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளிக்காக அமைக்கப்படவுள்ள நாட்டு மாளிகைகள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்துள்ளவர்களையே குறிவைத்துள்ளன. வெளிநாட்டு நேரடி முதலீடுகளை எதிர்பார்த்திருக்கும் இலங்கை 2010 இற்கிடையில் 2 பில்லியன் டொலர்கள் முதலீட்டை இலக்காக வைத்துள்ளது. கொழும்பில் 51 மாடிகள் கொண்ட 15 லட்சம் சதுர அடியில் அமையும் வர்த்தக பூங்காவை அமைப்பதற்கான வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட L&T கிட்டத்தட்ட 150 மில்லியன் டொலர்களை முதலிட உள்லமை குறிப்பிடத்தக்கது. இக்கட்டடமே இலங்கையில் அதியுயர் கட்டடமாக வரவுள்ளது.ரியல் எஸ்டேட் துறையினரை இலங்கைக்கு அழைக்க உள்ள அரசு அவர்களின் முதலீட்டுக்கு கால் எல்லை எதனையும் விதிக்கவில்லை. அவர்கள் தாம் நினைத்த நேரத்தில் இலங்கையில் முதலிட்ட பணத்தை மீள எடுத்துச் செல்லலாம் எனக் கூறியுள்ளது. எனினும் அண்மைய பொருளாதார மந்தத்தால் பாதிக்கப்பட்ட சில நிறுவனங்கள் மிகவும் விழிப்பாக உள்ளன.
இலங்கையின் அசையா சொத்து சந்தை மீது கண்வைத்துள்ள இந்திய முதலீட்டாளர்கள்SocialTwist Tell-a-Friend

No comments: